1
00:00:05,506 --> 00:00:08,384
சாம் மற்றும் ராப் நிச்சயதார்த்தம்

2
00:00:08,467 --> 00:00:11,637
என் நினைவுகள் மங்கிய பின்

3
00:00:11,721 --> 00:00:15,725
இருள் சாம்பல் நிறமாக மாறுவதை

4
00:00:15,766 --> 00:00:19,061
ஜன்னல் வழியாக பார்க்கிறேன்

5
00:00:19,145 --> 00:00:22,857
நான் நலமா என யோசிக்கிறாய்

6
00:00:23,691 --> 00:00:29,447
ஆழத்தில் இருந்து களவாண்ட ரகசியங்கள்...

7
00:00:31,157 --> 00:00:33,701
இதயங்கள் ஒத்திசைக்கவில்லை

8
00:00:33,784 --> 00:00:37,872
ஒருவேளை நீ தொலைந்திருந்தால்
தேடினால் என்னை காண்பாய்

9
00:00:38,539 --> 00:00:40,624
சதாகாலமும்

10
00:00:41,167 --> 00:00:43,502
-நீ விழுந்தால்...
-நான் பிடிப்பேன்

11
00:00:43,586 --> 00:00:45,838
நான் காத்திருப்பேன்

12
00:00:45,921 --> 00:00:47,423
சதாகாலமும்

13
00:00:48,048 --> 00:00:49,258
நான் அடித்து கொண்டே...

14
00:00:49,341 --> 00:00:51,969
ஒருவேளை நீ தொலைந்திருந்தால்
தேடினால் என்னை காண்பாய்

15
00:00:52,052 --> 00:00:53,137
எல்லோரும்!

16
00:00:53,220 --> 00:00:55,264
சதாகாலமும்

17
00:00:56,891 --> 00:00:59,018
சதா...

18
00:00:59,810 --> 00:01:02,688
-சரி. அது போதும்னு தோணுது.
-நன்றி.

19
00:01:02,772 --> 00:01:04,190
நன்றி.

20
00:01:07,568 --> 00:01:09,403
நல்லா இருந்தது, அன்பே.

21
00:01:10,196 --> 00:01:13,699
அவங்க வக்கீல்கள், பாடகர்கள் இல்லைனு
எளிதா சொல்லலாம்.

22
00:01:15,951 --> 00:01:20,748
இறுதி பேச்சை செம்மையாக செய்வேன்,
டோஸ்ட் செய்வதை விட.

23
00:01:20,831 --> 00:01:23,918
டாம், இங்க வாங்க.
நீங்க டோஸ்ட் செய்யலாமே?

24
00:01:24,001 --> 00:01:26,170
நீங்க அவங்களுக்கு ரெண்டாவது அப்பா போல.

25
00:01:26,253 --> 00:01:29,089
-நல்ல செய்யறீங்க.
-அட, டாம். சத்தியமா.

26
00:01:29,173 --> 00:01:30,800
-சரி. அது...
-சாம்மி.

27
00:01:31,300 --> 00:01:34,011
டாம். அட, கடவுளே! இதை பாருங்க.

28
00:01:35,137 --> 00:01:38,974
ராப் எனக்கு அனுப்பினான்.
இதை முன்பு பார்க்கலைனு தோணுது.

29
00:01:40,518 --> 00:01:42,144
இன்று அவருக்கு பிறந்த நாள்.

30
00:01:42,228 --> 00:01:47,358
-ஆமா. இன்று அவருக்கு 71 ஆகுது.
-ஆமா. அட, கடவுளே.

31
00:01:51,320 --> 00:01:52,238
ஹே.

32
00:01:53,155 --> 00:01:56,992
சாம், இன்று ஒரு போன் அழைப்பு வந்தது.

33
00:01:58,327 --> 00:02:01,288
நம்மிடம் ஒரு காட்டி கொடுப்பவர் இருக்கலாம்.

34
00:02:01,372 --> 00:02:02,289
என்ன?

35
00:02:02,373 --> 00:02:04,166
வழக்கு முடிவுக்கு வரலாம்.

36
00:02:06,544 --> 00:02:09,171
சாக்ஸ் ஃபார்மா வழக்கை திரும்ப திறக்கணும்.

37
00:02:09,255 --> 00:02:12,132
-டாம், சாக்ஸ் ஃபார்மா வழக்கு முடிந்தது.
-அதனால?

38
00:02:12,216 --> 00:02:15,010
நீதிபதி கையொப்பம் போட்டார்.
பணம் திருப்ப இயலாது.

39
00:02:15,094 --> 00:02:19,223
விட்டு தள்ளு. இப்ப பில்லியனில் பேசறோம்.
திவாலாக்க வாய்ப்பு.

40
00:02:19,306 --> 00:02:20,558
நம்மால் முடியாது.

41
00:02:22,017 --> 00:02:23,143
எனக்கு புரியல.

42
00:02:23,227 --> 00:02:26,480
சாக்ஸ்ஸை சரியா மடக்க முடியும்.

43
00:02:26,564 --> 00:02:31,652
சாம், 160 மில்லியன் டாலர்.
சாக்ஸ் அதை எளிதா சம்பாதிக்கறாங்க.

44
00:02:31,735 --> 00:02:35,906
டாம், நான் இதை இப்பவே
விடும்படி கட்டாயப்படுத்தறேன்.

45
00:02:37,950 --> 00:02:39,493
ஏன் இப்படி சொல்லற?

46
00:02:42,037 --> 00:02:43,414
இதில் ஆபத்து அதிகம்.

47
00:02:43,497 --> 00:02:47,209
இதை நீதிபதியிடம் கொடுத்து,
விளைவுகளை சந்திக்க தயாரில்லை.

48
00:02:47,293 --> 00:02:48,419
இழப்பீடு கிடைத்தது,

49
00:02:48,502 --> 00:02:51,630
அடுத்த வேலையை பார்க்க
போயிட்டே இருக்கணும்.

50
00:02:51,714 --> 00:02:52,965
அவ்ளோ தானா?

51
00:02:53,465 --> 00:02:56,010
ஆமா. நிறுவனத்தையும்
மனசில் வெச்சிருக்கணும்.

52
00:02:57,386 --> 00:02:58,554
இது என் நிறுவனம்.

53
00:02:58,637 --> 00:03:00,472
என் அப்பா நிறுவியது.

54
00:03:00,556 --> 00:03:04,768
உங்கப்பா நிறுவியது. சரி. அதனால?

55
00:03:04,852 --> 00:03:08,230
உங்களுக்கு ஜார்ஜ் சாக்ஸ்ஸை பழி வாங்கணும்.

56
00:03:08,314 --> 00:03:10,858
புரியுது. அமாண்டா
எனக்கும் மனசுலேயே இருக்கா.

57
00:03:10,941 --> 00:03:12,026
வேணாம்.

58
00:03:13,485 --> 00:03:14,612
என்னை மன்னிக்கணும்.

59
00:03:15,988 --> 00:03:17,489
உனக்கு என்ன ஆச்சு?

60
00:03:21,243 --> 00:03:22,828
யாராவது கட்டாயப்படுத்தறாங்களா?

61
00:03:33,881 --> 00:03:35,591
என்ன ஒத்துக்கிட்ட?

62
00:03:42,765 --> 00:03:43,933
ஹே...

63
00:03:51,315 --> 00:03:53,651
நீங்க கொஞ்ச நேரம் எடுத்துக்கணும்.

64
00:03:55,110 --> 00:03:57,321
உங்களுக்கு நோக்கம் மாறி விட்டது போல.

65
00:03:59,490 --> 00:04:00,616
எனக்கு புரியுது.

66
00:04:00,699 --> 00:04:03,535
உங்க மனைவி, மகள்... எனக்கு புரியுது.

67
00:04:03,619 --> 00:04:04,745
ஆமா.

68
00:04:08,290 --> 00:04:10,125
உங்கப்பா இங்க இருந்திருக்கணும்.

69
00:04:33,190 --> 00:04:35,401
கோலியாத்

70
00:04:36,443 --> 00:04:40,072
இரண்டு பக்கமும் சத்திய பிரமாணம்
எடுக்க தயார் என்றால்,

71
00:04:40,155 --> 00:04:42,241
குழுவை தேர்வு செய்வோம்.

72
00:04:49,123 --> 00:04:51,417
நாங்க பெற்றோர்கள், மூத்த குடிமக்கள்,

73
00:04:51,500 --> 00:04:54,336
நோயாளிகள், இராணுவ வீரர்களை
எதிர்பார்க்கிறோம்.

74
00:04:54,420 --> 00:04:58,132
கேள்வித்தாளின் அடிப்படையில்,
நாம நடுவர்கள் மூணு, நாலு,

75
00:04:58,215 --> 00:05:00,551
ஏழு, பத்து, பதினொன்றை எடுக்கலாம்.

76
00:05:01,969 --> 00:05:03,470
அது சரியா இருக்கும்.

77
00:05:04,430 --> 00:05:08,350
யுவர் ஆனர், இந்த குழுவை ஏற்கிறோம்.

78
00:05:09,059 --> 00:05:12,438
-இருங்க. என்ன செய்யறார்?
-தேர்வு வாய்ப்பை குறைக்கிறார்.

79
00:05:12,521 --> 00:05:15,065
திரு மெக்ப்ரைட், உறுதியாவா?

80
00:05:15,899 --> 00:05:17,609
ஆமா, யுவர் ஆனர். உறுதியா.

81
00:05:18,652 --> 00:05:22,448
யுவர் ஆனர், வாதி என்ன செய்ய போறார்
என்று தெரியல,

82
00:05:22,531 --> 00:05:24,992
ஆனா நாங்க குழுவை ஆராய விரும்பறோம்.

83
00:05:25,075 --> 00:05:26,660
யாரை வேணா தேர்ந்தெடுக்கலாம்.

84
00:05:26,744 --> 00:05:29,538
-நீங்க யாரையும் எதிர்க்க போறதில்லையா?
-இல்ல.

85
00:05:29,621 --> 00:05:31,790
-ஆனா ஒரு விஷயம் இருக்கு.
-என்னது?

86
00:05:33,542 --> 00:05:36,962
சாட்சி பட்டியலை மாற்றி
க்ரெக் வெட்செல்லை சேர்க்க விரும்பறோம்.

87
00:05:38,547 --> 00:05:40,716
மேதகு எம். சி. ரீஸ்

88
00:05:41,884 --> 00:05:43,093
வெட்செல் வேணாம்.

89
00:05:43,177 --> 00:05:45,888
இல்ல, கொஞ்சம் இடைவேளை வேணும்.

90
00:05:46,555 --> 00:05:50,267
யுவர் ஆனர், திரு மெக்ப்ரைட் கிட்ட
தனிமையில் பேசவா?

91
00:05:52,352 --> 00:05:55,481
முன்பே உணவு இடைவேளை விடுவோம்.
ஒரு மணிக்கு சந்திப்போம்.

92
00:05:56,940 --> 00:05:58,025
எழுந்திருங்க.

93
00:06:07,743 --> 00:06:08,827
பில்லி...

94
00:06:09,787 --> 00:06:11,747
என்ன நடக்குது?

95
00:06:11,830 --> 00:06:15,417
-பெரிய தொகை கேட்டீங்க.
-நாங்க இப்படி செய்ய மாட்டோம்.

96
00:06:15,501 --> 00:06:17,169
இல்ல, நிச்சயமா இல்ல. நன்றி.

97
00:06:20,964 --> 00:06:24,384
நற்செய்தி. ஐவன் டிலிஞ்ஜர்
நிபந்தனைக்கு ஒத்துக்கிட்டார்.

98
00:06:24,468 --> 00:06:26,762
160 மில்லியனுக்கு முடித்து விடலாம்.

99
00:06:26,845 --> 00:06:30,599
அது நேற்றைய விலை, இன்னிக்கு என்ன இருக்கு?

100
00:06:30,682 --> 00:06:34,144
-நூற்றி அறுபது மில்லியன்.
-அது முடிஞ்சு போன கதை.

101
00:06:34,228 --> 00:06:36,438
வழக்கு தொடங்கியது,
நடுவர் நியமனம் ஆனது.

102
00:06:36,522 --> 00:06:38,107
க்ரெக்கை எங்க பிடிச்சீங்க?

103
00:06:38,190 --> 00:06:40,984
மீனவர் படகுத்துறை உணவகத்தில்,
இது முக்கியமா?

104
00:06:41,068 --> 00:06:46,406
சாட்சியம் பிழை குற்றவாளியாக காட்டுது,
டிலிஞ்ஜரை நீதிபதிகள் குற்றவாளியா கருதுவர்.

105
00:06:48,158 --> 00:06:49,451
எவ்வளவு வேணும்?

106
00:06:49,535 --> 00:06:50,911
ஒரு பில்லியன்.

107
00:06:55,082 --> 00:06:56,125
அப்படியா, சரி.

108
00:06:59,878 --> 00:07:01,338
பாதிக்கு ஒத்துக்கறேன்.

109
00:07:01,421 --> 00:07:02,756
அது, எனக்கு போதாது.

110
00:07:03,465 --> 00:07:05,217
அறுநூறு மில்லியன் தரேன்.

111
00:07:07,344 --> 00:07:11,974
யுவர் ஆனர், டிலிஞ்ஜர் ஹெல்த், அரசோடு
ஒரு தற்காலிக தீர்வை அடைந்திருக்கு.

112
00:07:12,057 --> 00:07:14,893
மெக்ப்ரைடும் நானும்
என் கட்சிக்காரருக்கு எதிரான

113
00:07:14,977 --> 00:07:17,271
உரிமைகோரல்களை தள்ளுபடி செய்ய கோருவோம்.

114
00:07:17,354 --> 00:07:20,524
திரு மெக்ப்ரைட், ஏதாவது ஆட்சேபணை?
-இல்ல, யுவர் ஆனர்.

115
00:07:20,607 --> 00:07:24,319
எல்லா விஷயமும் நிபந்தனைப்படி நடந்தால்.

116
00:07:24,403 --> 00:07:25,946
மற்றும் ரஸ்ஸல் டிரக்?

117
00:07:26,029 --> 00:07:28,490
அவங்க பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமா இல்லை.

118
00:07:28,574 --> 00:07:34,204
திரு பெடக், ஒரு பிரதிவாதி மட்டுமே பாக்கி.
இது தான் சமயம்.

119
00:07:34,830 --> 00:07:38,208
நீதிமன்றம் வர ஆவலாக உள்ளனர், யுவர் ஆனர்.

120
00:07:38,292 --> 00:07:40,377
வழக்கு திட்டமிட்டபடி தொடரும்.

121
00:07:40,460 --> 00:07:43,255
தொடக்க விஷயங்களை திங்கள்
அன்று தொடங்குவோம்.

122
00:07:43,338 --> 00:07:44,423
ஒத்தி வைக்கப்பட்டது.

123
00:07:49,136 --> 00:07:54,474
இன்று என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள,
ஒரு கணம் வேணும்.

124
00:07:54,558 --> 00:07:56,226
இது காவியம், பெரிய நாள்...

125
00:07:56,310 --> 00:07:58,061
அறுநூறு மில்லியன்.

126
00:07:58,604 --> 00:08:01,815
நடுவர் தேர்வில் உங்க
கவலையின்மை ஒருபுறம் இருக்க,

127
00:08:01,899 --> 00:08:04,484
வாழ்த்துக்கள், நல்லா செய்தீங்க,
திரு மெக்ப்ரைட்.

128
00:08:04,568 --> 00:08:07,237
-அது, நன்றி.
-இல்ல. உண்மையா நன்றாக செய்தீங்க.

129
00:08:07,321 --> 00:08:09,489
என் அப்பா பெருமையா உணர்ந்திருப்பார்.

130
00:08:16,705 --> 00:08:17,706
ஹே.

131
00:08:17,789 --> 00:08:19,291
-ஹே.
-என்ன விஷயம்?

132
00:08:19,374 --> 00:08:22,252
எனக்கு போகணும்னு தோணுது.
ஒரு மாதிரியா இருக்கு.

133
00:08:22,336 --> 00:08:25,339
-ஏதாவது வண்டி ஏற்பாடு செய்யவா?
-நடந்து போனா நல்லது.

134
00:08:25,422 --> 00:08:27,216
-அதனால, நான்...
-நிச்சயமாவா?

135
00:08:27,299 --> 00:08:29,092
-ஆமா, சமாளிச்சுப்பேன்.
-சரி.

136
00:08:29,176 --> 00:08:30,719
ஒரு விஷயம் கேட்டுக்குங்க.

137
00:08:30,802 --> 00:08:34,389
டிலிஞ்ஜர் மிக எளிதா
பணிஞ்சதா தோணுதா?

138
00:08:35,515 --> 00:08:38,852
நடுவர் விஷயத்தில பல்டி அடிச்சீங்க,
அவங்களுக்கு வேற வழி இல்ல.

139
00:08:41,772 --> 00:08:44,441
-கொண்டாடு. பிறகு பேசலாம்.
-சரி.

140
00:09:02,584 --> 00:09:06,797
என் கூட கொண்டாட, என்னால, உங்களை
கட்டாயப்படுத்த முடியுமா?

141
00:09:06,880 --> 00:09:09,258
எனக்கு விருந்துகளில் ஆர்வமில்லை. சாரி.

142
00:09:09,341 --> 00:09:10,592
எனக்கு புரியுது.

143
00:09:11,551 --> 00:09:13,512
நாளை இரவு உணவுக்கு போலாமா?

144
00:09:14,054 --> 00:09:15,806
சரி, அது பரவாயில்ல.

145
00:09:15,889 --> 00:09:17,683
சரி. குறுஞ்செய்தி அனுப்பறேன்.

146
00:09:17,766 --> 00:09:19,559
சரி. நல்லது. நல்லிரவு.

147
00:09:25,148 --> 00:09:26,483
உங்க அப்பா போலவே.

148
00:09:26,566 --> 00:09:29,653
அவரால் அதிகப்படியான உற்சாகத்தை
சமாளிக்க இயலாது.

149
00:09:29,736 --> 00:09:31,363
எரிச்சலூட்டும், உண்மையில்.

150
00:09:31,947 --> 00:09:33,198
எப்படி தெரியும்?

151
00:09:33,282 --> 00:09:34,491
எதை தெரியும்?

152
00:09:35,284 --> 00:09:37,911
உன் உத்தரவாதம்,
"குறைந்தது அரை பில்லியன்."

153
00:09:37,995 --> 00:09:39,538
நம்பிக்கையோட இருந்த.

154
00:09:39,621 --> 00:09:42,374
சாக்ஸ் ஃபார்மா வெறும் 160 இல் முடிந்தது.

155
00:09:43,000 --> 00:09:46,086
எங்கிட்ட நம்பிக்கை இல்லைனா,
வேறு எதுவும் இருக்காது.

156
00:09:47,296 --> 00:09:49,423
அதை நீ துணியில் தைக்கணும்.

157
00:09:58,015 --> 00:10:01,560
இப்ப என் யோசனை ரஸ்ஸல் டிரக் பத்தி.

158
00:10:01,643 --> 00:10:04,021
மெக்ப்ரைட் அதே போல திரும்ப செய்ய முடியாது.

159
00:10:04,104 --> 00:10:06,440
நம்மை காப்பாத்தறார், ஏவா.

160
00:10:07,065 --> 00:10:10,277
நீ உருப்படியா ஒண்ணும் செய்ததில்லை,

161
00:10:10,360 --> 00:10:13,447
இந்த நச்சரிப்பை பெரிய விஷயமா
நினைச்சால் ஒழிய.

162
00:10:13,530 --> 00:10:15,782
நம்முடைய பணிகளை பற்றி தெளிவா இருப்போம்.

163
00:10:16,450 --> 00:10:20,537
உங்கப்பா பணம் விஷயங்களையும் நீ ஒழுக்கமா
இருக்கவும் என்னிடம் விட்டார்.

164
00:10:20,620 --> 00:10:22,164
அவரை இதில் இழுக்காதே.

165
00:10:22,247 --> 00:10:24,041
உனக்கு ஒழுக்கம் இல்ல என நினைத்தார்.

166
00:10:24,124 --> 00:10:25,876
உனக்கு முன்யோசனை இல்லைனு எண்ணம்.

167
00:10:27,419 --> 00:10:31,214
இப்ப, அவரை போலில்லாம நான்
கொண்டாட போறேன். மன்னிக்கவும்.

168
00:11:04,915 --> 00:11:05,874
ஹாய்!

169
00:11:06,708 --> 00:11:07,709
ஹாய்.

170
00:11:09,544 --> 00:11:10,754
நீங்க நலமா?

171
00:11:11,880 --> 00:11:15,384
ஆமா. ஹே, அப்புறம் யார் நீங்க?

172
00:11:16,093 --> 00:11:17,677
உங்க பெயர் என்ன?

173
00:11:42,119 --> 00:11:46,498
அப்பா, என்ன செய்யறீங்க?
சத்தியம் செய்தீங்க.

174
00:11:47,416 --> 00:11:48,625
என்ன சத்தியம்?

175
00:11:49,960 --> 00:11:52,712
உங்களை சமாளிக்க நான் மட்டுமே
தயாரா இருக்கேன்.

176
00:11:53,839 --> 00:11:57,592
எல்லோரையும் விரட்டி விட்டா,
எல்லோரும் போயிடறாங்க.

177
00:11:59,845 --> 00:12:01,972
நீங்க செய்வது தற்கொலை முயற்சியா?

178
00:12:04,558 --> 00:12:07,602
இருக்கலாம். அதனால் என்ன?

179
00:12:11,398 --> 00:12:12,566
வண்டில ஏறுங்க.

180
00:12:36,173 --> 00:12:37,674
கொஞ்சம் மெதுவா போறீயா?

181
00:12:38,550 --> 00:12:41,094
ஒரு ரயிலை பிடிக்கணும்னு சொன்னீங்களே.

182
00:12:41,178 --> 00:12:43,180
அங்க நான் உயிரோட போய் சேரணும்.

183
00:13:16,463 --> 00:13:17,714
"ஆத்திரமடை."

184
00:13:19,424 --> 00:13:20,884
என்ன ஆத்திரமடை?

185
00:13:22,802 --> 00:13:24,846
"பொறாமை"க்கு ஆறு எழுத்து சொல்.

186
00:13:26,806 --> 00:13:28,099
இருபத்திரெண்டு கீழே.

187
00:13:31,394 --> 00:13:33,647
புதிர்கள்/ஆலோசனை
தின குறுக்கெழுத்து புதிர்

188
00:13:34,397 --> 00:13:35,732
டெனிஸ் எங்க?

189
00:13:37,859 --> 00:13:40,362
டிவில வருவது அவ இல்லையே?

190
00:14:47,178 --> 00:14:48,305
ஹலோ?

191
00:15:05,947 --> 00:15:06,948
ப்ரிட்டனியா?

192
00:15:07,032 --> 00:15:08,074
பில்லியா?

193
00:15:09,409 --> 00:15:11,870
ஆமா. சாரி.
போனை எடுத்து பேசியது என் நண்பன.

194
00:15:13,330 --> 00:15:15,165
சரி, கேளு.

195
00:15:18,001 --> 00:15:20,503
டெனிஸ் உயிரோட இருக்காளான்னு தெரியணும்.

196
00:15:21,087 --> 00:15:24,132
கடவுளே, பில்லி, என்ன நடக்குது?

197
00:15:24,215 --> 00:15:25,467
உயிரோட இருக்காளா?

198
00:15:26,009 --> 00:15:27,802
ஆமா, நிச்சயமா இருக்கா.

199
00:15:29,512 --> 00:15:31,473
தெரிஞ்சுக்க நினைச்சேன், சரியா?

200
00:15:32,349 --> 00:15:33,600
நீங்க அவ கூட பேசணும்.

201
00:15:33,933 --> 00:15:35,352
ஆமா, தெரியும்.

202
00:15:36,478 --> 00:15:40,106
தெரியும். பாரு, நான்...

203
00:15:41,733 --> 00:15:42,651
உனக்கு தெரி...

204
00:15:43,485 --> 00:15:46,321
யாரோடவோ அல்லது வெளிய
இருக்கியோ, எதுவானாலும் சரி.

205
00:15:46,404 --> 00:15:49,199
-அப்புறம் கூப்பிடறேன்.
-இல்ல, பில்லி, அது...

206
00:16:01,294 --> 00:16:05,840
அப்பா

207
00:16:29,114 --> 00:16:33,493
7:50 எண்ணாக சொல்லும் போது 7:50
ஆக இருக்கும்,

208
00:16:33,576 --> 00:16:36,663
கடிகாரத்தில் 8 அடிக்க 10 நிமிடமா
தெரியும், கவனித்ததுண்டா?

209
00:16:37,997 --> 00:16:39,374
அப்படி யோசித்தது இல்ல.

210
00:16:40,875 --> 00:16:42,293
ஆனா உண்மை, இல்லையா?

211
00:16:45,213 --> 00:16:46,297
ஆமா.

212
00:16:52,721 --> 00:16:53,888
நான் தான்!

213
00:16:59,728 --> 00:17:01,312
எனக்கு சொல்லவே இல்ல...

214
00:17:02,230 --> 00:17:04,274
நீங்க ஒரு பகட்டான வக்கீல்னு.

215
00:17:06,526 --> 00:17:07,777
இல்ல, அப்படி இல்ல.

216
00:17:08,361 --> 00:17:10,113
டிவி படி நீங்க அப்படி.

217
00:17:11,406 --> 00:17:12,949
ஆமா. டிவி பத்தி தெரியுமே.

218
00:17:15,452 --> 00:17:17,412
அது அனுமதிக்கப்பட்டது தானே?

219
00:17:18,288 --> 00:17:19,873
எப்பவுமே ஃபிராங்க்.

220
00:17:22,876 --> 00:17:24,711
பெயர் ஃபிராங்க் என தெரிந்தது.

221
00:17:27,464 --> 00:17:29,340
அதனால என்ன வித்தியாசம்?

222
00:17:30,675 --> 00:17:32,051
ஒண்ணுமில்லை தான்.

223
00:17:36,890 --> 00:17:38,558
பயங்கர கனவுகள் வருமா?

224
00:17:40,769 --> 00:17:42,395
ஆமா, அது போல வரும்.

225
00:17:45,982 --> 00:17:48,276
நீங்க கட்டில்ல படுத்து தூங்கணும்

226
00:17:48,359 --> 00:17:51,488
அந்த ஆடும் நாற்காலிக்கு பதிலா.

227
00:17:51,571 --> 00:17:53,239
எல்லாமே தெரியுது உங்களுக்கு.

228
00:17:55,283 --> 00:17:57,118
எல்லோரையும் கவனிப்பேன்.

229
00:17:59,245 --> 00:18:00,830
நீங்க சிறப்பு இல்லை.

230
00:18:02,749 --> 00:18:03,958
மனைவி உண்டா?

231
00:18:06,002 --> 00:18:07,045
குழந்தை?

232
00:18:10,632 --> 00:18:12,884
முன்னாள் மனைவியும் மகளும் உள்ளனர்.

233
00:18:13,676 --> 00:18:15,553
ஆமா, எனக்கும் மகள் இருக்காள்.

234
00:18:16,846 --> 00:18:20,558
என்னை வெறுப்பாள். அது காரணம் நான் தான்.

235
00:18:22,435 --> 00:18:24,437
உங்களை சந்தோஷப்படுத்தும்னா,

236
00:18:24,521 --> 00:18:27,065
என் மகளும் என்னிடம் பேச மாட்டா.

237
00:18:28,107 --> 00:18:30,527
அது ஏன் என்னை சந்தோஷப்படுத்தணும்?

238
00:18:32,695 --> 00:18:36,115
உங்களுக்கு மட்டும் இல்ல அந்த பிரச்சினை.
அதை சொன்னேன்.

239
00:18:36,908 --> 00:18:39,953
எனக்கு தனியா இருக்க பிடிக்கும்.
அவளுக்கும் தான்.

240
00:18:40,620 --> 00:18:42,914
அதான் பிரச்சினைனு தோணுது.

241
00:18:47,335 --> 00:18:48,795
என்ன செய்தீங்க?

242
00:18:48,878 --> 00:18:50,129
என்ன சொல்லறீங்க?

243
00:18:51,965 --> 00:18:53,091
உங்க மகளுக்கு?

244
00:18:55,385 --> 00:19:01,182
நான் சுடப்பட்டதும் என் கூட இருப்பது
கஷ்டமா ஆனது.

245
00:19:02,725 --> 00:19:04,102
நீங்க நியாயமற்றவரோ?

246
00:19:04,185 --> 00:19:05,603
ஆமா, ரொம்பவே.

247
00:19:06,271 --> 00:19:08,273
அப்ப நீங்களே தேடிக்கிட்டீங்க.

248
00:19:08,356 --> 00:19:10,441
ரொம்ப வலிக்கும், இப்பவும் இருக்கு.

249
00:19:10,525 --> 00:19:12,777
இப்ப அவ நியாயமற்றவனு சொல்றீங்களா?

250
00:19:12,861 --> 00:19:14,028
அவ கெட்டிக்காரி.

251
00:19:15,488 --> 00:19:20,535
உங்களில் ஒருவர் நியாயமற்றவர்.
நீங்களே தேர்ந்தெடுங்க.

252
00:19:22,203 --> 00:19:23,413
நீங்க எப்படி?

253
00:19:24,831 --> 00:19:26,207
என்னை பத்தி என்ன?

254
00:19:28,626 --> 00:19:29,961
நீங்க நியாயமற்றவரா?

255
00:19:33,214 --> 00:19:39,012
நாம பார்க்க கூடியதிலேயே மிகவும்
நியாயமற்றவன் என் சகோதரன்.

256
00:19:40,680 --> 00:19:41,973
அது ஆச்சரியம் தருதா?

257
00:19:42,807 --> 00:19:44,684
அது அப்படி இல்ல, எனக்கு தெரியல.

258
00:19:47,353 --> 00:19:49,147
அவன் இங்கே என்ன பண்ணறான்?

259
00:19:53,276 --> 00:19:56,571
ஹே! நீ என்னை பத்தி பேசற.

260
00:19:57,488 --> 00:19:59,407
என் கிட்ட ஏதாவது சொல்லணும்னா

261
00:19:59,490 --> 00:20:02,452
இங்க வந்து என் கிட்ட நேரடியா சொல்லு.

262
00:20:04,329 --> 00:20:06,539
ஆங்கிலத்தில், தயவு செய்து.

263
00:20:10,418 --> 00:20:11,669
தயவு செய்து.

264
00:20:13,212 --> 00:20:15,590
என்னை பத்தி கேவலமா பேசினான், இல்ல?

265
00:20:15,673 --> 00:20:17,592
சொன்னா எப்படியும் நம்ப போறதில்ல.

266
00:20:25,266 --> 00:20:27,143
அவங்களை கவனிக்கணும், பில்லி.

267
00:20:28,061 --> 00:20:29,354
எல்லோரையும்.

268
00:20:30,897 --> 00:20:32,607
அவங்க நம்பிக்கையற்றவங்க.

269
00:20:42,492 --> 00:20:43,701
அதுக்கு வருந்தறேன்.

270
00:20:44,827 --> 00:20:46,412
அவர் வித்தியாசமானவர்.

271
00:20:47,705 --> 00:20:51,501
கட்டிடம் ஃபிராங்குக்கு சொந்தம்,
எங்களை விரட்ட முடியல என்ற கோபம்.

272
00:20:51,584 --> 00:20:53,002
கட்டிடம் அவரோடதா?

273
00:20:53,836 --> 00:20:55,296
முழு கட்டிடமும் அவரோடது.

274
00:20:56,756 --> 00:20:57,799
நிச்சயமா.

275
00:20:58,508 --> 00:20:59,467
மேலும் ஒண்ணு?

276
00:21:00,343 --> 00:21:01,803
சரி, எடுத்துக்கலாமே.

277
00:21:58,943 --> 00:22:00,862
தரவு முடிவுகள் சுருக்கம்
டி-3 ஈ-2 டி+3 ஜி0 ஈ0 ஜி0 சி+1வி*+1 சி*+ 5

278
00:22:00,945 --> 00:22:03,364
பகுப்பாய்வு:
ஆர்எச்-எச்ஆர் நிலை ஏற்கத்தக்க அளவை தாண்டி

279
00:22:07,076 --> 00:22:08,911
டேவ், நாம திரும்ப ஓட்டணும்.

280
00:22:10,580 --> 00:22:11,664
கேட்!

281
00:22:12,373 --> 00:22:13,249
ஃபெர்ன்.

282
00:22:13,332 --> 00:22:15,084
ஜார்ஜுக்கு நிலைமை தெரியணுமாம்.

283
00:22:16,085 --> 00:22:19,589
பாஸ்தா செய்யும் வகுப்பு எடுக்கறேன்.
சமையல் திறனை மேம்படுத்த.

284
00:22:19,672 --> 00:22:21,758
-அவர் சொல்வது புரியுமே.
-நேரமாகும்.

285
00:22:21,841 --> 00:22:24,385
-இப்ப காலை பத்து தான்.
-அதை நான் சொல்லல.

286
00:22:24,469 --> 00:22:27,805
புரியுது, ஆனா கவலையில்லை.

287
00:22:39,776 --> 00:22:40,943
கடவுளே.

288
00:22:43,446 --> 00:22:44,489
என்ன?

289
00:22:44,572 --> 00:22:47,325
ஏவா உங்களை பார்க்கணுமாம். இது அவசரம்.

290
00:22:47,992 --> 00:22:48,993
ஏன்?

291
00:22:49,535 --> 00:22:52,330
தெரியல, அவசரம்னு சொன்னாங்க...

292
00:22:58,836 --> 00:23:01,631
பேட்டி. உள்ளே வாங்க. கதவை மூடுங்க.

293
00:23:04,425 --> 00:23:06,260
சரி, உட்காருங்க. ஹாய்.

294
00:23:13,768 --> 00:23:15,520
காலை கூட்டாளிகளின்

295
00:23:15,603 --> 00:23:18,773
அவசர சந்திப்பில்,
உங்களை பங்கு கூட்டாளியாக சேர்க்க

296
00:23:18,856 --> 00:23:21,234
எல்லோரும் ஒத்து கொண்டதை சொல்ல விரும்பறேன்.

297
00:23:27,323 --> 00:23:29,325
ஊழியராக பணி நீக்கம் செய்யப்படுவீங்க.

298
00:23:29,408 --> 00:23:32,203
அதனால, டபிள்யு-2, சலுகைகள் கிடையாது

299
00:23:32,286 --> 00:23:36,624
ஒரு தகுதியான நிதி திட்டமிடுபவரை
வைத்து கொள்ள சொல்வேன்,

300
00:23:36,707 --> 00:23:39,252
உங்க புது வரி விவகாரங்களில் உதவ.

301
00:23:43,840 --> 00:23:45,216
ஒண்ணும் புரியல போல.

302
00:23:47,009 --> 00:23:49,095
வாக்கு உங்களுக்கு சாதகமா வந்தது.

303
00:23:49,178 --> 00:23:51,556
இனிமே நீங்க ஊழியர் இல்ல,

304
00:23:51,639 --> 00:23:55,393
மார்கோலிஸ் அண்ட் ட்ரூவில் பங்குதாரர்,
உரிமையாளர், இயக்குபவர்.

305
00:24:07,655 --> 00:24:08,906
அது எவ்வளவு?

306
00:24:09,866 --> 00:24:10,908
கட்டாயம் சொல்றேன்.

307
00:24:17,957 --> 00:24:20,001
சரி, நல்லது.

308
00:24:20,084 --> 00:24:23,546
ஆயுள் காப்பீட்டு கொள்கை பத்தி
விவாதிக்க விரும்பினா,

309
00:24:23,629 --> 00:24:25,047
இது தான் சரியான சமயம்.

310
00:24:25,840 --> 00:24:28,259
-ஆயுள் காப்பீடு எடுக்கணுமா?
-இல்ல.

311
00:24:28,342 --> 00:24:31,387
நிறுவனம் திட்டத்தை வாங்கும்,
நிறுவனமே பயனாளியாகும்.

312
00:24:31,470 --> 00:24:34,724
உங்களுக்கு நடக்க கூடாதது ஏதாவது நடந்தால்.
இறை தடுக்கும்.

313
00:24:35,641 --> 00:24:38,603
நல்லது.

314
00:24:38,686 --> 00:24:41,439
ஆமா, நல்லது தான். பேட்டி. வாழ்த்துக்கள்.

315
00:24:41,981 --> 00:24:42,982
நன்றி.

316
00:24:46,110 --> 00:24:48,613
-இவ்வளவு தான்.
-அவ்வளவு தான். சரி.

317
00:24:51,949 --> 00:24:53,534
-மற்றும், பேட்டி?
-என்ன?

318
00:24:55,328 --> 00:24:56,829
உங்களுக்கு என் வாக்கு விழல.

319
00:24:59,498 --> 00:25:03,294
கடவுளே, இல்ல. இல்ல.
நான் அதை எதிர்பார்கல. சரி.

320
00:25:03,669 --> 00:25:06,964
-கதவை மூடுங்க.
-சரி, செய்யறேன். நன்றி.

321
00:25:11,302 --> 00:25:13,262
மன்னிங்க. மரத்ததால் விருவிருப்பு.

322
00:25:15,389 --> 00:25:17,433
சாம்
தானே சொல்ல ஏவா வலியுறுத்தத்தினார் (சாரி)

323
00:25:17,516 --> 00:25:18,976
வாழ்த்துக்கள்!!!!!

324
00:25:19,060 --> 00:25:20,645
நாசமாய் போ!
பூட்டப்பட்டது

325
00:25:23,064 --> 00:25:24,315
நாசமாய் போ!

326
00:25:24,398 --> 00:25:25,691
என்னாச்சு டிராவிஸ்?

327
00:25:25,775 --> 00:25:27,109
ஹே, என்னாச்சு, கேட்?

328
00:25:27,193 --> 00:25:28,945
-சித்தப்பா வந்தாரா?
-இல்ல.

329
00:25:29,028 --> 00:25:32,323
நேற்று மஸ்டாங் வண்டிக்கு என்ன
ஆச்சுன்னு காட்டணும்.

330
00:25:32,406 --> 00:25:34,325
நீங்க அழப்போறீங்க. துயரமானது.

331
00:25:34,408 --> 00:25:36,494
இல்ல. மாட்டேன்.

332
00:25:36,577 --> 00:25:39,121
ஸ்டார்பக்ஸ் போன ஐந்து நிமிடத்தில் நடந்தது.

333
00:25:39,914 --> 00:25:41,123
எதை ஒட்டினீங்க?

334
00:25:42,083 --> 00:25:44,335
-2011 ஜிடீ.
-நல்லது.

335
00:25:44,418 --> 00:25:45,753
நசுங்கலை புறக்கணிங்க.

336
00:25:45,836 --> 00:25:50,591
ஆமா, ஆயிடுச்சு, சரி. எங்கிட்ட
66 மஸ்டாங் கன்வெர்ட்டிபிள் இருக்கு.

337
00:25:50,675 --> 00:25:53,886
என் மகள் கிட்ட இருக்கு இப்ப.
பல நாளா எங்கிட்ட இருந்தது.

338
00:25:53,970 --> 00:25:55,972
-அதிர்ஷ்டசாலி பெண்.
-ஆமா தெரியும்.

339
00:25:56,055 --> 00:25:57,056
கேட்.

340
00:25:57,682 --> 00:25:58,683
ஜார்ஜ் சித்தப்பா.

341
00:25:59,141 --> 00:26:01,394
வெளிச்சத்தில் உன்னை பாக்க பிடிக்கும்.

342
00:26:01,477 --> 00:26:04,397
யாரிடம் பேசற தெரியுமா?

343
00:26:04,480 --> 00:26:09,527
டிலிஞ்ஜரிடம் அறுநூறு மில்லியன் பிடுங்கிய
வக்கீல் பில்லி மெக்ப்ரைட்.

344
00:26:10,319 --> 00:26:12,697
எங்க தீர்வுக்கு நீங்க இல்லாதது மகிழ்ச்சி.

345
00:26:13,364 --> 00:26:14,615
ஜார்ஜ் சாக்ஸ்.

346
00:26:15,241 --> 00:26:18,995
எனக்கு தெரியும். செய்தியில் பழியை
தட்டி கழிப்பதை பார்த்தேன்.

347
00:26:20,997 --> 00:26:23,416
பொறுப்புடன் உண்டால்
எங்க பண்டம் பாதுகாப்பானது.

348
00:26:23,499 --> 00:26:24,500
அப்படியா?

349
00:26:25,001 --> 00:26:28,713
என் அண்ணன் மகள் எங்க ஆய்வகத்தை நடத்தறா.
அவளிடமே கேளுங்க.

350
00:26:30,256 --> 00:26:32,842
ட்ரிமடோன் பொறுப்புடன்
உண்டால் பாதுகாப்பானது.

351
00:26:33,884 --> 00:26:37,221
ஆனா மரணமானவர்கள் எண்ணிக்கை வேறு சொல்லுதே.

352
00:26:37,972 --> 00:26:40,308
எங்க வழக்கு முடிந்தது பில்லி. அதனால...

353
00:26:41,142 --> 00:26:44,395
நான் இரவுக்குள் மறுபரிசீலனை செய்யலாமே.

354
00:26:44,478 --> 00:26:47,565
இல்ல குளிர்ந்த மார்டினியோடு
சிவந்த ரிப்அய் உண்ணலாம்.

355
00:26:47,648 --> 00:26:51,319
அதுக்கு ரொம்ப யோசிக்க தேவையில்ல.
பசிக்குதா?

356
00:26:52,445 --> 00:26:54,322
ஆமா. கொலைப்பட்டினி.

357
00:26:55,406 --> 00:26:56,615
சந்தித்ததில் இன்பம்.

358
00:26:57,575 --> 00:26:59,994
ரஸ்ஸல் டிரக் தண்டனை பெற வாழ்த்துக்கள்.

359
00:27:00,077 --> 00:27:01,370
அதை பாரட்டறேன்.

360
00:27:16,719 --> 00:27:17,803
சாரி லேட்டா வந்தேன்.

361
00:27:18,304 --> 00:27:19,180
பரவாயில்ல.

362
00:27:20,348 --> 00:27:22,975
வர்ற வழியில தடுக்கி விழ பார்த்தேன்,
அதனால...

363
00:27:23,059 --> 00:27:24,101
ஓஹோ? நீங்க நலமா?

364
00:27:24,185 --> 00:27:26,854
ஆமா. என் முழங்கை...

365
00:27:27,646 --> 00:27:31,525
மற்றும் அகங்காரம் தான் வலிக்குது,
ஆனா சரியாயிடுவேன்.

366
00:27:32,276 --> 00:27:34,236
இதை பின்பு செய்யலாம்.

367
00:27:34,320 --> 00:27:37,698
இல்லை இல்லை.
நான் நாள் முழுக்க இதுக்காக காத்திருந்தேன்.

368
00:27:37,782 --> 00:27:39,909
-உங்க கோட்டை தரீங்களா?
-நன்றி.

369
00:27:40,826 --> 00:27:43,579
-பாரிலே இருக்கலாமா?
-இருக்கலாம், பிரச்சனை இல்ல.

370
00:27:47,041 --> 00:27:50,544
ஜார்ஜ் சாக்ஸ்ஸை சந்தித்தேன்.

371
00:27:51,128 --> 00:27:53,672
-இங்க இருக்காரா?
-ஆமா. அந்த பக்கம்.

372
00:27:55,174 --> 00:27:58,386
அது நல்லா இருந்திருக்கும்.
அவர் சரியான கேடு கெட்டவர்.

373
00:27:59,178 --> 00:28:01,263
ஆமா. அதை ஒத்துக்கறேன்.

374
00:28:03,015 --> 00:28:05,518
ஆமா, பரவாயில்ல, நன்றி.

375
00:28:07,186 --> 00:28:10,731
இல்ல, அவரோடு உரையாட நாங்க ஆர்வமா உள்ளோம்.

376
00:28:11,607 --> 00:28:12,817
அவரிடம் சொல்லறேன்.

377
00:28:15,236 --> 00:28:18,614
சரி, நாளை காலை பேசுவோம். நன்றி. பை.

378
00:28:20,866 --> 00:28:24,703
அப்ப, க்ரிஃபின் பெடக் ரஸ்ஸல் டிரக்
தீர்வு பத்தி பேச விரும்பறார்.

379
00:28:24,787 --> 00:28:26,872
நல்ல கணிப்பு. ஆமா, அப்படி தான்.

380
00:28:26,956 --> 00:28:28,416
அறிவாளியா இருக்க தேவையில்ல.

381
00:28:29,708 --> 00:28:30,793
தீர்ப்பதற்கு?

382
00:28:31,794 --> 00:28:32,962
தீர்ப்பதற்கு.

383
00:28:34,505 --> 00:28:36,924
இதை குடிக்க முடியாது. தலைவலி வரும்.

384
00:28:37,007 --> 00:28:38,217
அது பரவாயில்ல.

385
00:28:39,885 --> 00:28:44,056
வழக்கு நடத்தும் ஆர்வமே இல்லையா?

386
00:28:46,392 --> 00:28:48,477
எது சரியோ அதை செய்வதில் ஆர்வம்.

387
00:28:48,561 --> 00:28:51,147
அது தீர்வாக இருந்தால், அதை தான் செய்யணும்.

388
00:28:53,315 --> 00:28:57,319
இப்ப தான் தொடங்கின மாதிரி இருக்கு.
ஆனா புரியுது.

389
00:28:58,362 --> 00:29:02,741
அது முடிந்ததே என்று நிம்மதியாக இருக்கு.

390
00:29:04,994 --> 00:29:07,955
இந்த பெரிய தீர்வுகள், உங்க பணப்பிரச்சினையை

391
00:29:08,038 --> 00:29:09,790
சரி செய்யும்னு நம்பறேன்.

392
00:29:14,587 --> 00:29:15,796
எப்படி தெரியும்?

393
00:29:17,131 --> 00:29:18,466
எனக்கு தெரியாது.

394
00:29:23,679 --> 00:29:24,805
நீங்க கேடு கெட்டவர்.

395
00:29:25,431 --> 00:29:27,016
அப்படி தான் சொல்வாங்க.

396
00:29:30,811 --> 00:29:32,396
அப்ப, என்ன நடந்தது?

397
00:29:35,065 --> 00:29:37,318
அப்பா இறந்ததும் எல்லோரும் போயிட்டாங்க.

398
00:29:38,652 --> 00:29:42,907
சில கட்சிக்காரங்க தொடர்ந்தாலும்,
மத்தவங்க போயிட்டாங்க.

399
00:29:43,657 --> 00:29:44,992
ஆமா, கஷ்டம் தான்.

400
00:29:45,075 --> 00:29:46,118
ஆமா.

401
00:29:46,869 --> 00:29:51,415
நிறைய இரங்கல், பூக்கள் மற்றும்
"மிகவும் வருந்துகிறேன்" இருந்தது.

402
00:29:52,041 --> 00:29:56,712
பரிசு கூடைகள், அதை வைத்து நிறுவனத்தை
நடத்த முடியாது, அதனால...

403
00:29:58,130 --> 00:30:00,508
எனக்கு புரியுது. ஆமாம்.

404
00:30:00,591 --> 00:30:05,804
என் ஊனத்தோடு பெரிசா செய்ய முடியாது.
அதனால...

405
00:30:06,597 --> 00:30:09,266
நீங்க உங்களை பத்தி
அப்படி சொல்றது, பிடிக்கல.

406
00:30:11,227 --> 00:30:15,314
நான் எம்எஸ் வந்த பெண்.
என்னை எப்படி பார்ப்பாங்கனு தெரியும்.

407
00:30:15,397 --> 00:30:19,109
ஊனம் பத்தி எனக்கு தெரியும்,
நீங்க அந்த ரகம் இல்ல.

408
00:30:21,695 --> 00:30:22,947
நீங்க இனிமையானவர்.

409
00:30:24,114 --> 00:30:25,324
அது தான் உண்மை.

410
00:30:29,954 --> 00:30:32,665
அது, நான் இந்நேரம் செத்திருக்கணும்.

411
00:30:33,707 --> 00:30:36,252
அதாவது, அதை கேட்டா எல்லோரும் பயப்படுவாங்க.

412
00:30:36,335 --> 00:30:37,711
அடடா.

413
00:30:37,795 --> 00:30:39,255
நான் கிண்டல் அடிக்கல.

414
00:30:40,881 --> 00:30:42,925
டாக்டர் மூணு வருஷம் இருப்பேன்னார்.

415
00:30:45,553 --> 00:30:47,638
அதை சொல்லி மூன்றரை வருஷமாச்சு.

416
00:30:49,223 --> 00:30:53,686
இதோ, இங்க இருக்கீங்க. பாரத்தீங்களா?
யாருக்கும் எதுவும் தெரியாது.

417
00:30:58,816 --> 00:31:00,609
டாக்டர்களுக்கு பலது தெரியும்.

418
00:31:01,068 --> 00:31:02,570
டாக்டர்கள் பொய் சொல்வாங்க.

419
00:31:03,821 --> 00:31:06,824
என்னை சுட்டாங்க, நான் செத்தேன்,
பின் மீண்டேன்.

420
00:31:06,907 --> 00:31:09,410
இங்க இருக்கேன், எப்படி புரியல அவங்களுக்கு.

421
00:31:11,912 --> 00:31:15,332
பல விஷயங்கள் நமக்கு ஒண்ணும் தெரியாது.

422
00:31:15,416 --> 00:31:16,333
உங்களுக்கு?

423
00:31:16,417 --> 00:31:19,169
சில சமயம், நம்ம நிலைமையை
நினைச்சு திமிர் வரும்.

424
00:31:21,088 --> 00:31:26,427
இல்ல, அது வெறும் குருட்டு அதிர்ஷடமோ, இல்ல
சிலதை தள்ளி போட்டதாலோ எனவோ, தெரியல.

425
00:31:28,554 --> 00:31:29,722
ஆமா.

426
00:31:34,893 --> 00:31:36,562
ஆமா, இப்ப தோணுவது...

427
00:31:38,105 --> 00:31:39,398
தள்ளி போட்டது.

428
00:31:58,334 --> 00:31:59,501
நாசமாய் போக.

429
00:32:03,213 --> 00:32:04,590
அது பரவாயில்ல.

430
00:32:06,550 --> 00:32:08,552
-நிஜமாவே, இது...
-கிளம்பறீங்களா?

431
00:32:10,054 --> 00:32:12,765
நான் போகணுமா? அதுக்கு என்ன அர்த்தம்?

432
00:32:12,848 --> 00:32:15,225
நான் வெளியே போகணும்னு பார்க்கறேன்,

433
00:32:15,309 --> 00:32:18,479
என்னால முடியாது,
திரும்ப விழ தயாரில்ல, அதனால...

434
00:32:22,524 --> 00:32:23,609
சரி.

435
00:32:26,111 --> 00:32:29,615
வெளியே போய் புகை பிடித்து விட்டு,
ஒரு நிமிஷத்தில் வரேன்.

436
00:32:35,496 --> 00:32:37,748
இதை கடுமையான செயல் என்போம்.

437
00:32:37,831 --> 00:32:41,460
அவரை சங்கடப்படுத்த விரும்பல, ஆனா,
நாம கையை உயர்த்தலேனா

438
00:32:41,543 --> 00:32:43,045
நம்மை தாக்குவாங்க.

439
00:32:43,837 --> 00:32:45,464
டிலன் ஒரு கயவன்.

440
00:32:45,547 --> 00:32:47,633
உங்களோடு வாதாட நல்ல கூட்டாளி தேவை.

441
00:32:48,300 --> 00:32:49,218
ஃபெர்ன் எப்படி?

442
00:32:51,595 --> 00:32:56,016
ரொம்ப கோபம் வரும். பெரிய கைகள் வேறு.

443
00:32:56,725 --> 00:32:58,477
நான் உதைப்பட வாய்ப்பு உண்டு.

444
00:33:00,646 --> 00:33:01,689
சரி.

445
00:33:03,565 --> 00:33:06,819
நிறுவனம் செலவில் சாப்பிடணும்னா,
தொழில் சார்ந்து பேசணும்.

446
00:33:07,611 --> 00:33:09,905
அமர்ஸின் நிலைமை இப்ப என்ன?

447
00:33:10,948 --> 00:33:14,451
ஜார்ஜ் சித்தப்பா,
நான் சொல்வது உங்களுக்கு பிடிக்காது...

448
00:33:14,535 --> 00:33:18,288
சரி. நான் கேட்க விரும்பாததை கேட்கணுமா?

449
00:33:18,956 --> 00:33:21,291
-தெரியும், ஆனா...
-நான் என்ன கேட்கணும்?

450
00:33:21,375 --> 00:33:23,585
-நாம பேசினோம். நீங்க சொன்ன...
-கேட்?

451
00:33:30,050 --> 00:33:33,095
அமர்ஸினின் அடிமை ஆக்காத தன்மை
நல்லா வேலை செய்யுது.

452
00:33:35,180 --> 00:33:38,058
நல்லது. பிறகு?

453
00:33:40,602 --> 00:33:43,021
கவனமா, ஜாக்கிரதையா கையாளணும்.

454
00:33:46,859 --> 00:33:51,363
நீண்ட கால பக்க விளைவுகள்
எஃப்டிஏ விதிமுறைகளுக்கு இணங்கவில்லைனா?

455
00:33:53,157 --> 00:33:56,452
எனக்கு சரியா கேட்கல.

456
00:33:57,828 --> 00:33:58,954
முயற்சி செய்.

457
00:34:00,205 --> 00:34:02,791
-நேரம் தந்தால், நான்...
-சரி, இல்ல...

458
00:34:03,625 --> 00:34:05,627
நாம வேற வேற விஷயங்களை பேசறோம்.

459
00:34:08,130 --> 00:34:10,132
இது தான் சமயம், கேட்.

460
00:34:11,300 --> 00:34:14,511
இது தான் சரியான சமயம்.

461
00:34:16,847 --> 00:34:18,599
ஒரு தடவை முயன்று பார்க்கறியா?

462
00:34:20,642 --> 00:34:24,980
அமர்ஸின், ஒரு அடிமையாக்காத,
பயனுள்ள வலி நிவாரண ஓபியாய்ட்.

463
00:34:25,731 --> 00:34:28,233
எஃப்டிஏ ஒப்புதலோடு,
சந்தைக்கு தயாரா இருக்கு.

464
00:34:30,819 --> 00:34:32,571
அது நல்ல செய்தி.

465
00:34:34,823 --> 00:34:36,033
ஸ்டேக் எப்படி இருக்கு?

466
00:34:50,214 --> 00:34:51,381
ஹே, என்ன விஷயம்?

467
00:34:51,465 --> 00:34:54,051
ஹே, சாம் சொன்னாங்களா?

468
00:34:54,134 --> 00:34:55,135
என்ன சொல்லணும்?

469
00:34:55,928 --> 00:35:00,140
எனக்கு கிடைச்சது.
எனக்கு பங்கு கூட்டு கிடைச்சது.

470
00:35:00,849 --> 00:35:02,017
அது, நல்ல விஷயம்.

471
00:35:02,100 --> 00:35:06,396
ஆமா, முதலீட்டு பங்களிப்பு கொஞ்சம் அதிகம்,
அதை விட்டா வேற...

472
00:35:06,480 --> 00:35:09,817
பங்கு கூட்டு உலகத்துக்கு வருக.

473
00:35:09,900 --> 00:35:12,236
இந்த நற்செய்தியை சொன்னதுக்கு நன்றி.

474
00:35:13,987 --> 00:35:16,615
நான் போகணும். பை.

475
00:35:19,493 --> 00:35:20,577
மேம்?

476
00:35:23,997 --> 00:35:26,375
ஹே! ஹை.

477
00:35:26,458 --> 00:35:27,960
-ஹை.
-அம்மா...

478
00:35:28,043 --> 00:35:30,546
-எங்க இருக்காங்க அவங்க?
-அம்மா.

479
00:35:30,629 --> 00:35:33,590
நாம "அம்மா"வை தேடுவோம். வா.

480
00:35:34,216 --> 00:35:36,218
ஆமா. எனக்கு தெரியும்.

481
00:35:36,301 --> 00:35:38,053
-இஸ்ஸி?
-அங்க போகணுமா?

482
00:35:38,220 --> 00:35:41,139
அட, கடவுளே. மன்னிக்கணும்.
இவ காணாம போயிட்டா...

483
00:35:41,223 --> 00:35:45,519
-உங்க குழந்தையா? "அம்மா"ட்ட போறயா?
-அவசரத்துக்கு குழந்தைய பார்த்துக்கறேன்.

484
00:35:45,602 --> 00:35:48,814
வேறு வழி இல்லைனா,
குழந்தைகளை என்னிடம் விடுவாங்க.

485
00:35:48,897 --> 00:35:50,732
-என் அறை அருகே இருந்தாள்.
-சாரி.

486
00:35:50,816 --> 00:35:52,901
-அதனால பிடிச்சேன்.
-அம்மா கீழே.

487
00:35:52,985 --> 00:35:55,445
என் மேலே ஒரே கோபம். போலாம், இஸ்ஸி.

488
00:35:55,529 --> 00:35:58,699
-இப்ப இதை செய்யாதே.
-உங்களோட கீழே வரேன்.

489
00:35:58,782 --> 00:35:59,825
-அப்படியா?
-ஆமா.

490
00:35:59,908 --> 00:36:01,869
-ஆட்சேபணை இல்லைனா.
-பரவாயில்ல.

491
00:36:01,952 --> 00:36:04,288
கீழே போகணுமா? நாம அம்மாவை தேடுவோம்.

492
00:36:04,371 --> 00:36:05,581
அம்மாவை தேடுவோம்.

493
00:36:05,664 --> 00:36:07,249
-சரி.
-நன்றி.

494
00:36:15,132 --> 00:36:18,594
வாழ்த்துக்கள். உங்கள் கூட்டு.
பெரிய விஷயம்.

495
00:36:18,677 --> 00:36:21,471
-நன்றி.
-ஆமா, நீங்க தகுதிப்படுத்திக்கிட்டிங்க.

496
00:36:22,764 --> 00:36:23,891
எனக்கு தகுதி வந்தது.

497
00:36:24,683 --> 00:36:25,517
அப்படியா?

498
00:36:27,227 --> 00:36:29,813
ஹே! பை!

499
00:36:30,606 --> 00:36:31,857
ஹே, குட்டி.

500
00:36:33,942 --> 00:36:35,068
-கிளம்பலாம்.
-சாரி.

501
00:36:36,653 --> 00:36:37,779
பை.

502
00:36:37,863 --> 00:36:39,573
என்ன ஆச்சு? தொலைச்சீங்களா?

503
00:36:39,656 --> 00:36:41,158
இல்ல, நிச்சயமா இல்ல.

504
00:36:41,241 --> 00:36:42,367
அப்படியா, சரி.

505
00:36:42,451 --> 00:36:44,578
ஏன் எப்பவுமே இப்படி நினைக்க...

506
00:37:45,138 --> 00:37:49,601
மிஸ் மார்கோலிஸ் பணம் கொடுத்துட்டாங்க.
வேற ஏதாவது வேணுமா?

507
00:37:50,519 --> 00:37:51,979
இல்ல. என் கோட் மட்டும்.

508
00:37:53,772 --> 00:37:55,649
-நல்லிரவாகட்டும்.
-ஆமா.

509
00:39:51,473 --> 00:39:52,599
ஹே, பில்லி.

510
00:39:53,642 --> 00:39:54,976
நான் டாம் ட்ரூ.

511
00:39:56,061 --> 00:39:57,187
நாம பேசணும்.

512
00:39:59,439 --> 00:40:00,774
சரி, உள்ள வாங்க.

513
00:40:04,986 --> 00:40:09,449
பில்லி, நீங்க எப்படி இங்க வந்து
சேர்ந்தீங்கன்னு யோசிக்கணும்.

514
00:40:11,827 --> 00:40:12,994
இது என்ன?

515
00:40:13,620 --> 00:40:16,873
வக்கீல் ஆலோசனை கடிதம்
கூப்பர்மேன் மெக்ப்ரைடில் இருந்து.

516
00:40:17,582 --> 00:40:19,459
சாக்ஸ் ஃபார்மால வேலை செய்தீங்க.

517
00:40:27,300 --> 00:40:28,135
கூப்பர்மேன் / மெக்ப்ரைட்

518
00:40:28,218 --> 00:40:30,470
ரகசிய ஆவணம்
வக்கீல்-கட்சிக்காரர் உரிமை

519
00:40:30,554 --> 00:40:31,638
வில்லியம் மெக்ப்ரைட்

520
00:40:31,721 --> 00:40:33,014
"1995."

521
00:40:34,933 --> 00:40:37,769
அது இருபத்தைந்து வருஷம் முன்பு.
ஞாபகமில்லை.

522
00:40:37,853 --> 00:40:39,146
ஞாபகம் இருக்க வேணாம்.

523
00:40:39,229 --> 00:40:41,731
இது போல ஆயிர கணக்கில்
நானே எழுதி இருக்கேன்.

524
00:40:41,815 --> 00:40:43,817
பலது ஞாபகத்தில் இருக்காது.

525
00:40:44,401 --> 00:40:48,488
உண்மைல, சாக்ஸ், நீங்க அங்க வேலை செய்ததை
மறக்கணும்னு எதிர்பார்த்தாங்க.

526
00:41:00,167 --> 00:41:02,335
"ஆரம்ப ஆய்வக அறிக்கைகளின் அடிப்படையில்,

527
00:41:03,628 --> 00:41:08,967
"அமர்ஸின் ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துது,
மனித பயன்பாட்டிற்கு பாதுகாப்பற்றது.

528
00:41:09,050 --> 00:41:12,762
"மருந்தின் அனைத்து ஆய்வு மற்றும்
மேம்பாடு உட்பட அனைத்து,

529
00:41:12,846 --> 00:41:15,015
"மருத்துவ பரிசோதனைகளை உடனே நிறுத்தி,

530
00:41:15,098 --> 00:41:18,268
"எஃப்டிஏ ஒப்புதல் நடைமுறையிலிருந்து
திரும்ப பெறணும்."

531
00:41:18,977 --> 00:41:20,645
அது போல விஷயங்கள்.

532
00:41:20,729 --> 00:41:22,898
"சமர்ப்பிக்கப்பட்டது..." ஆம், நான்.

533
00:41:22,981 --> 00:41:27,194
இல்ல? சாக்ஸ் உங்க அறிவுரையை கேட்டு,
அமர்ஸினை நிறுத்தி

534
00:41:27,861 --> 00:41:30,530
ட்ரிமடோனை சந்தைப்படுத்தினர்.

535
00:41:30,614 --> 00:41:33,408
அப்ப ரெண்டுக்கும் பெரிய வித்தியசாமில்லை.

536
00:41:34,367 --> 00:41:37,829
சாக்ஸில் வேலை செய்ததால்,
அவங்க மேல வழக்கு போட தகுதி இல்லை.

537
00:41:37,913 --> 00:41:40,248
கண்டுபிடுக்கும் எதுக்கும் தொடர கூடாது.

538
00:41:41,124 --> 00:41:43,877
ஒரு முறை கட்சிக்காரர்,
என்றுமே கட்சிக்காரர்.

539
00:41:44,753 --> 00:41:46,338
கேடு கெட்டவன்.

540
00:41:50,300 --> 00:41:52,969
நாம முன்பே சந்திச்சு இருக்கணும்,

541
00:41:53,053 --> 00:41:56,348
ஆனா சாக்ஸ் கூட ஏதாவது
ஒப்பந்தம் போட்டீங்களா தெரியல.

542
00:41:56,431 --> 00:41:59,017
ஜாக்கிரதையா இருந்ததுக்கு குறை
சொல்ல முடியாது.

543
00:41:59,643 --> 00:42:03,605
இதை எங்க கண்டுபிடிச்சீங்க?
இது ரகசிய தயாரிப்பு.

544
00:42:03,688 --> 00:42:04,564
ஆமா.

545
00:42:04,648 --> 00:42:07,734
சாக்ஸ் மேலதிகாரி
ஒருவரிடம் இருந்து வந்திருக்கும்.

546
00:42:07,817 --> 00:42:08,944
ஒரு போன் வந்தது.

547
00:42:09,945 --> 00:42:11,029
ஒரு போன் வந்ததா?

548
00:42:12,739 --> 00:42:13,740
சரி.

549
00:42:15,742 --> 00:42:18,119
க்ரெக் வெட்செல் என்று நினைச்ச அழைப்பு.

550
00:42:18,203 --> 00:42:19,996
ஆமா. கூப்பிட்டது ஒரு பெண்.

551
00:42:20,080 --> 00:42:23,333
முப்பதுகள் இல்ல நாற்பதுகள்?
பெயர் தெரியல, பதட்டமான நபர்.

552
00:42:24,376 --> 00:42:27,504
அடுத்த நாள், இந்த கடிதம்,
என் கதவுக்கு கீழே கிடந்தது.

553
00:42:27,587 --> 00:42:30,298
உங்க வீட்ல க்ரெக் வெட்செல்
பெயர் வைக்கப்பட்டது.

554
00:42:30,382 --> 00:42:32,050
நான் கண்டுபிடிக்க விரும்பினர்.

555
00:42:32,133 --> 00:42:35,720
ஒரு விவகாரத்தில் டிலிஞ்ஜருடன் போராடினேன்.

556
00:42:36,596 --> 00:42:40,725
சேதப்படுத்தும் தகவல் உள்ள
வெட்செல்லை விடுவதால்,

557
00:42:40,809 --> 00:42:43,228
இதை விட மோசமான வேற எதையோ மறைக்கிறாங்க.

558
00:42:43,311 --> 00:42:46,690
சாக்ஸ் ட்ரிமடோனை வித்து
எவ்ளோ பணம் பார்த்திருப்பாங்க,

559
00:42:46,773 --> 00:42:50,026
தொல்லைக்கே அறுநூறு மில்லியன் டாலர்
தந்தா, எண்ணுங்க.

560
00:42:51,903 --> 00:42:55,365
என் உள்ளுணர்வு படி,
அவங்க சீக்கிரமே சரணடைஞ்சுட்டாங்க.

561
00:42:57,117 --> 00:43:01,162
இந்த கடிதம் கிடைச்சதும்,
என்னை காப்பாத்திக்க, ஒளிஞ்சு வாழ்ந்தேன்.

562
00:43:02,497 --> 00:43:06,543
மார்கோலிஸ் அண்ட் ட்ரூ உங்களை,
வில்லியம் ஹாமில்டன் மெக்ப்ரைடை,

563
00:43:06,626 --> 00:43:10,672
சாக்ஸ் ஃபார்மா மேல் மறுவழக்கு போட
தகுதி இல்லாதவரை பணியில் அமர்த்துது.

564
00:43:16,011 --> 00:43:18,179
தற்செயல் இல்ல. புத்திசாலித்தன செயல்.

565
00:43:19,139 --> 00:43:22,976
நமக்கு யார் புத்திசாலி தெரியும்.
அது ஜார்ஜ் சாக்ஸ் இல்ல.

566
00:43:24,936 --> 00:43:26,229
சாம்.

567
00:43:26,313 --> 00:43:27,397
சாம்.

568
00:43:30,025 --> 00:43:32,193
உங்க வீட்டு சாவியை கொடுத்தாள்.

569
00:43:32,944 --> 00:43:34,571
அது நிறுவனத்துக்கு சொந்தம்.

570
00:43:34,654 --> 00:43:37,574
கூடவே சந்தோஷமா உதவி இருப்பாள்.

571
00:43:47,542 --> 00:43:49,794
என் சொந்த மகளை போல் நேசித்தேன்.

572
00:43:51,963 --> 00:43:52,922
பிறகும் செய்வேன்.

573
00:43:56,343 --> 00:43:59,429
ஆனா சாம்முக்கு பெரிய பொறுப்பு
இருக்கு, தெரியுமா?

574
00:43:59,512 --> 00:44:02,807
அவள் அப்பாவின் நிறுவனம் திவாலாகாமல்
பார்க்கும் பொறுப்பு.

575
00:44:02,891 --> 00:44:05,393
சாத்தானோடு கை கோர்த்தாள்.

576
00:44:11,566 --> 00:44:12,901
ஏமாற்றமா இருக்கு.

577
00:44:16,654 --> 00:44:19,157
சாம்யுலிடம் பார்த்துப்பதா
சத்தியம் செய்தேன்.

578
00:44:21,076 --> 00:44:22,702
இப்பவும் காலம் கடக்கல.

579
00:44:22,786 --> 00:44:24,037
எனக்கு தெரியல.

580
00:44:24,829 --> 00:44:28,291
என்னை விட சிறந்த வக்கீல் நீங்க.
உங்களுக்கு ஏதாவது தோணும்.

581
00:44:29,167 --> 00:44:30,627
அது தெரியல,

582
00:44:31,795 --> 00:44:35,465
நாம இதில் சேர்ந்தே வேலை செய்யலாம்.
நான் கவனமா இருப்பேன்.

583
00:44:40,053 --> 00:44:41,221
சரி.

584
00:44:41,971 --> 00:44:43,390
இதை பாராட்டறேன்.

585
00:44:44,641 --> 00:44:45,767
சரி.

586
00:44:52,315 --> 00:44:53,441
ஆமா, இது ஃபிராங்க்.

587
00:44:54,984 --> 00:44:58,154
அவரோட போனில் தொடர்பு ஏற்படுத்து, பெண்ணே!

588
00:45:01,616 --> 00:45:03,993
பக்கத்து வீட்டுகாரங்க அமைதியிழக்கறாங்க.

589
00:47:39,274 --> 00:47:41,276
வசனங்கள் மொழிபெயர்ப்பு
என். ஸ்ரீவித்யா

590
00:47:41,359 --> 00:47:43,361
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்

