1
00:00:07,717 --> 00:00:09,760
டாம் கிளான்ஸியின்
ஜாக் ரயன்

2
00:00:31,532 --> 00:00:34,952
சென்-செயின்ட்-டினிஸ்
பாரிஸ், பிரான்ஸ்

3
00:00:38,372 --> 00:00:41,041
தற்போது நடந்த
தீவிரவாத தாக்குதல்பற்றி...

4
00:00:41,125 --> 00:00:43,085
காவல் துறையில் இருந்து இன்னும்
அறிக்கைகள் எதுவும் இல்லை.

5
00:00:43,169 --> 00:00:44,962
இதற்கு யார் பொறுப்பு என்று
தெளிவாக தெரியவில்லை...

6
00:01:22,833 --> 00:01:24,376
உள்ளூர் ஜிஹாதி.

7
00:01:25,961 --> 00:01:27,630
இவன் சிரியாவில் போரிட்டான்.

8
00:01:28,047 --> 00:01:29,924
ஆறு மாதத்துக்கு முன் திரும்பி வந்தான்.

9
00:01:30,007 --> 00:01:31,926
இவ்விருவரையும் கூட
எங்களுக்குத் தெரியும்.

10
00:01:32,384 --> 00:01:34,637
உள்ளூர் மசூதிக்கு செல்வர்.

11
00:01:35,763 --> 00:01:38,390
அது இளைஞர்களை தீவிரமயமாக்குவதற்கு
பெயர் போனது.

12
00:01:46,732 --> 00:01:48,359
டிராக்-யூரோவை
உபயோகபடுத்திட்டு இருந்திருக்காங்க.

13
00:01:50,444 --> 00:01:52,530
இவ்வளவு ஆட்கள்
இருப்பதற்கு காரணம் அதுதான்.

14
00:02:08,629 --> 00:02:10,798
கடவுள் உன்னை மன்னிப்பாராக.

15
00:02:45,207 --> 00:02:47,751
பிரைதீஜ், சிரியா

16
00:02:56,427 --> 00:02:59,263
இப்போ தலை.

17
00:03:22,369 --> 00:03:24,496
தாத்தா பார்த்துப்பார்,

18
00:03:24,580 --> 00:03:25,414
சரியா?

19
00:04:41,657 --> 00:04:44,660
துப்பாக்கி. பாயும் நேரம்,
20 நொடிகள்.

20
00:04:46,620 --> 00:04:47,538
லேசரை நிறுத்தவும்.

21
00:04:48,163 --> 00:04:49,081
ஒப்புக்கொள்கிறேன்.

22
00:04:49,748 --> 00:04:50,666
லேசர்கள் பாதுகாப்பில்.

23
00:04:51,250 --> 00:04:54,169
குண்டு வெடிப்பு மதிப்பீடு செய்ய
ஒரு மைல் வட்டத்தில் போகிறோம்.

24
00:04:58,590 --> 00:04:59,967
நல்லா சுட்டாய், தடியா.

25
00:05:10,436 --> 00:05:11,812
ஒரு குண்டு
ஒரு உயிர்

26
00:05:11,895 --> 00:05:14,231
டூம் ஸ்டோன், ரயட் கேர்ள்,
பணி சுழற்சி செய்யும் சமயம்.

27
00:05:15,566 --> 00:05:16,734
சரி.

28
00:05:40,257 --> 00:05:42,760
கிரீச் விமானப்படை தளம்
இண்டியன் ஸ்பிரிங்ஸ், நவேடா

29
00:05:44,011 --> 00:05:47,306
ரயிலில் சோதனை செய்ய பிரிவுகளை
அனுப்பினோம், அவனை பிடிக்க முடியலை.

30
00:05:47,389 --> 00:05:50,225
ஆம் மெட்ரோதான் கண்காணிப்பில்
இருந்து தப்ப சிறந்த இடம்.

31
00:05:50,309 --> 00:05:51,977
-புத்திசாலி.
-புத்திசாலித்தனம் பத்தாது.

32
00:05:52,061 --> 00:05:54,730
அவன் போனை காலி டப்பாவில்
கண்டோம், ரத்தம் படிந்த சட்டையுடன்.

33
00:05:54,813 --> 00:05:56,774
நில்லுங்க. யாராவது
ஆஸ்பத்திரிகளில் சோதித்தார்களா?

34
00:05:56,857 --> 00:05:58,984
அவன் அடையாளம் கொண்ட யாரும்
அனுமதிக்கப் படவில்லை.

35
00:06:03,822 --> 00:06:05,115
-புருனோ.
-ஜிம்.

36
00:06:05,908 --> 00:06:07,493
-ஜாக்.
-என்ன அது?

37
00:06:08,744 --> 00:06:12,498
பிளோரி-மஹோஸிஸ் மூஸா பின் சுலைமானின்
சிறை பதிவுகளை அனுப்பினார்.

38
00:06:17,252 --> 00:06:19,963
இருபத்து மூன்று மாதங்களில், ஒரே ஒரு
பார்வையாளன் மட்டுமே வந்துள்ளான்.

39
00:06:20,047 --> 00:06:21,673
அவன் சகோதரன், அலி பின் சுலைமான்.

40
00:06:21,757 --> 00:06:23,008
அவன் சகோதரனா?

41
00:06:23,092 --> 00:06:24,093
இருங்க!

42
00:06:25,177 --> 00:06:26,261
அவனேதான்.

43
00:06:26,720 --> 00:06:28,097
அவனைத்தான் துரத்தினேன்.

44
00:06:31,683 --> 00:06:35,104
வருகை புரியும்போது அவன்
பதிந்த முகவரி 93ல் உள்ளது.

45
00:06:35,562 --> 00:06:36,688
தொன்னூற்றி-மூன்றா?

46
00:06:36,772 --> 00:06:38,857
-தொன்னூற்றி-மூன்றாம் வட்டாரம்.
-முஸ்லீம் பகுதி.

47
00:06:39,525 --> 00:06:42,361
ஒரு குழுவை ஏற்பாடு செய்யலாம், ஒரு மணி
நேரத்திற்குள் அங்கிருப்போம்.

48
00:06:42,444 --> 00:06:43,278
ஏறத்தாழ.

49
00:06:46,073 --> 00:06:48,742
ஹே, அவனை கட்டிடத்தில் இருந்து
துப்பாக்கியுடன் பின் தொடர்ந்தும்,

50
00:06:49,326 --> 00:06:51,411
ஏன் சுடவில்லை?

51
00:06:52,371 --> 00:06:55,124
பின்னணியில் பொதுமக்கள் இருந்தனர்.
துல்லியமான இலக்கு கிடைக்கலே.

52
00:06:56,959 --> 00:07:00,462
சுடணும்னு ஆயுதத்தை
எடுத்துட்டா சுட்டுடணும்.

53
00:07:09,304 --> 00:07:11,390
காத்திருங்க, இப்ப வந்திருவேன்.

54
00:07:16,145 --> 00:07:18,522
கவலையா இருந்தேன்.
ஏன் இத்தனைநேரம் எடுத்தது?

55
00:07:18,605 --> 00:07:20,274
இன்னும் நேரம்
கொடுத்திருந்தா நல்லாயிருக்கும்.

56
00:07:22,067 --> 00:07:23,277
இதோ பாஸ்ப்போர்ட்டுகள்.

57
00:07:30,909 --> 00:07:32,578
எப்படி நன்றி சொல்லுவதுனு தெரியல.

58
00:07:32,661 --> 00:07:33,537
பரவாயில்லை.

59
00:07:33,620 --> 00:07:34,997
எவ்வளவு செலவு ஆச்சு?

60
00:07:35,414 --> 00:07:37,166
இதை காசுக்காக பண்ணலை.

61
00:07:37,249 --> 00:07:39,418
உனக்காகவும், குழந்தைகளுக்காகவும்தான்.

62
00:07:41,545 --> 00:07:43,005
மாமா ஃபாத்தி.

63
00:07:44,506 --> 00:07:47,676
இதை நான் மறக்கவே மாட்டேன்.

64
00:07:55,767 --> 00:07:56,602
ஹனின்?

65
00:07:57,936 --> 00:07:59,730
பத்திரமா இரு.

66
00:08:04,943 --> 00:08:06,528
கிளம்பலாம், கண்ணுங்களா!

67
00:08:54,785 --> 00:08:57,204
"93" பாரிஸ், பிரான்ஸ்

68
00:09:06,713 --> 00:09:07,714
யார் அவன்?

69
00:09:07,798 --> 00:09:09,675
எனக்கு எப்படி தெரியும்?

70
00:09:09,800 --> 00:09:11,093
உன் வீட்டில்தானே இருக்கிறான்.

71
00:09:19,393 --> 00:09:20,227
அப்பா!

72
00:09:20,310 --> 00:09:21,270
பரவாயில்லை!

73
00:09:23,855 --> 00:09:24,856
அமைதியா இரு.

74
00:09:25,274 --> 00:09:27,526
வெளிய போய் விளையாடு. இப்பவே.

75
00:09:35,993 --> 00:09:37,703
நீ அதிர்ஷ்டக்காரன். தெரியுமா.

76
00:09:40,497 --> 00:09:42,958
குண்டு, உன் கணையத்தை ஒரு சில
சென்டிமீட்டர்களில் தவறவிட்டது.

77
00:09:48,380 --> 00:09:50,048
இந்தா. இதை போட்டுக்கோ.

78
00:10:00,559 --> 00:10:01,393
மெல்ல...

79
00:10:08,775 --> 00:10:11,153
உன்னை திரும்ப
பார்க்கவே மாட்டேன்னு நினைத்தேன்.

80
00:10:12,821 --> 00:10:17,993
ஆஸ்பத்திரி போகாம இங்க வந்ததுக்கு
வலுவான காரணம் இருக்குனு நம்பறேன்.

81
00:10:25,417 --> 00:10:27,044
டாலியா எங்கே?

82
00:10:29,629 --> 00:10:32,257
கேன்சரில் இறந்து விட்டாள்.
மூன்று வருடங்கள் முன்பு.

83
00:10:40,682 --> 00:10:42,225
இன்னும் வரைகின்றாயா?

84
00:10:46,646 --> 00:10:48,899
உனக்கு ஒண்ணு காமிக்கணும்.

85
00:11:07,959 --> 00:11:09,419
இன்னும் வெச்சிருக்கீங்களா?

86
00:11:12,047 --> 00:11:14,466
நீ சின்னப் பையனாக இருக்கும் போது,
ஞாபகம் இருக்கா.

87
00:11:14,549 --> 00:11:16,885
அருங்காட்சியகம் முசெ டோர்செயிக்கு
அழைத்துச் செல்ல கெஞ்சுவே.

88
00:11:16,968 --> 00:11:19,137
வேன் கோவை பார்க்க?

89
00:11:37,697 --> 00:11:39,950
எப்பவாவது பார்த்தாயா?
வேன் கோ சித்திரங்களை?

90
00:11:49,751 --> 00:11:51,753
லாஸ் வேகஸ், நவேடா

91
00:13:03,116 --> 00:13:05,619
கரன்சி மேல் எழுதியிருந்தால் அதை
ஒத்துக்க எனக்கு அனுமதி இல்லை, சார்.

92
00:13:05,702 --> 00:13:07,662
மன்னிக்கணும். அது கஸினோவின் கொள்கை.

93
00:13:08,955 --> 00:13:12,167
அமெரிக்க டாலர்தானே?
அமெரிக்காவின் நோட்டுகளை...

94
00:13:12,292 --> 00:13:15,837
அதன் மேல் எழுதியிருப்பதால்
எந்த வங்கியும் வாங்க மறுப்பதில்லையே.

95
00:13:17,964 --> 00:13:19,466
ஸ்டான்லி கோவாலஸ்கி.

96
00:13:19,549 --> 00:13:21,259
விக்டர் போலிச்சீ.

97
00:13:21,343 --> 00:13:24,054
இது என் மனைவி, ப்ளான்ச் டூபோ.

98
00:13:24,804 --> 00:13:26,014
சந்திப்பதில் மகிழ்ச்சி, விக்டர்.

99
00:13:26,097 --> 00:13:27,140
மேடம்.

100
00:13:28,183 --> 00:13:29,434
உங்கள் சில்லறை.

101
00:13:31,686 --> 00:13:33,063
சிவப்பு, தயை செய்து.

102
00:13:38,860 --> 00:13:40,153
பந்தயம் முடிகிறது.

103
00:13:44,866 --> 00:13:47,327
பதினாலு சிவப்பு. வெற்றி, சிவப்பிற்கே.

104
00:13:51,581 --> 00:13:54,125
சொல்லு விக்டர்,
நீ ராணுவத்தில் இருக்கயா?

105
00:13:54,960 --> 00:13:55,961
ஆமாம், மேடம்.

106
00:13:56,044 --> 00:13:57,254
எனக்கு தெரியுமே!

107
00:13:58,004 --> 00:14:00,632
-சார்? இன்னொரு பந்தயம் கட்டறீங்களா?
-சிவப்பு.

108
00:14:08,682 --> 00:14:09,683
இனி பந்தயம் இல்லை.

109
00:14:11,768 --> 00:14:14,521
சிவப்பு 5! வெற்றி, சிவப்புக்கே.

110
00:14:14,604 --> 00:14:15,939
இது எப்படி!

111
00:14:22,696 --> 00:14:24,573
கருப்பு, மொத்தமாக.

112
00:14:32,330 --> 00:14:35,041
கருப்பு 22! வெற்றி, கருப்புக்கே.

113
00:14:41,965 --> 00:14:44,342
கருப்பு 22, மொத்தமாக.

114
00:14:48,013 --> 00:14:50,181
-கருப்பு 22.
-ஆமாம், சார்.

115
00:15:09,534 --> 00:15:10,994
கருப்பு 22!

116
00:15:13,955 --> 00:15:17,792
ஓ, கடவுளே!
இது உன் அதிர்ஷ்ட இரவு, வாலிபனே.

117
00:15:22,839 --> 00:15:24,758
அது 29,400 டாலர்கள்.

118
00:15:33,558 --> 00:15:36,561
கேப்டன், போலீஸ் மற்றும் ஸ்வாட் பத்து
நிமிடங்களாக அங்கு இருக்கிறார்கள். ஓவர்

119
00:15:37,395 --> 00:15:38,313
கேட்கப் பட்டது.

120
00:15:43,443 --> 00:15:46,988
எந்த வாய்ப்பும் எதிர்காலமும் இல்லாத
இளையவர்கள் தீவிரவாதத்துக்கு...

121
00:15:47,113 --> 00:15:50,742
கவரப் படுவதைப் புரிஞ்சுக்கலாம். ஆனால்
இவனுக்கு எப்படி அது சாத்தியம்?

122
00:15:50,825 --> 00:15:54,120
என்ன சொல்லறனா, பாரிஸ் டோஃபீன்
பல்கலைக்கழகத்தில் படித்து...

123
00:15:54,204 --> 00:15:57,123
வணிகத்தில் பட்டம் பெற்று வகுப்பு
முன்னணியில் 5 சதவீதத்தில் ஒருவன்.

124
00:15:57,749 --> 00:16:01,002
பின் அடிதடி சண்டையில் கைதாகி
இதெல்லாம் தூக்கி எறிகிறான். ஏன்?

125
00:16:04,047 --> 00:16:06,007
ஒரு தலைமுறை முஸ்லிம்கள் இருக்காங்க,

126
00:16:06,091 --> 00:16:09,594
இங்கு வேலையும் எதிர்காலமும் இல்லாமல்.

127
00:16:10,679 --> 00:16:12,889
ஆனால் இவனுக்கு பட்டம் இருக்கே.
படித்து வெளிய வந்திருக்கிறானே.

128
00:16:14,265 --> 00:16:17,352
ஒரு காகித துண்டு உலகம் உன்னை
பார்க்கும் விதத்தை மாற்றிவிடுமா?

129
00:16:19,145 --> 00:16:22,273
அமெரிக்காவில் நீ ஆப்பிரிக்கானாகவும்
அமெரிக்கனாகவும் இருக்கலாம்,

130
00:16:22,357 --> 00:16:24,943
மெக்ஸிகன் அமெரிக்கனாகவும்,
இத்தாலியன் அமெரிக்கனாகவும்,

131
00:16:25,026 --> 00:16:26,319
சீன அமெரிக்கனாகவும் இருக்கலாம்.

132
00:16:26,403 --> 00:16:28,405
ஆனால் பிரான்சில் அப்படி
ஒரு அடை மொழி கிடையாது.

133
00:16:28,488 --> 00:16:31,032
நீ ஒன்னு பிரெஞ்சு, இல்லை அயல்நாட்டவன்.

134
00:16:36,788 --> 00:16:38,081
வந்துட்டோம்.

135
00:16:39,124 --> 00:16:40,583
இல்லை, இல்லை!

136
00:16:47,590 --> 00:16:49,592
வா, கொண்டாடலாம்!

137
00:16:50,385 --> 00:16:54,764
முப்பதாயிரம், நண்பா! இதைப் போல
அதிர்ஷ்ட மழையை நான் பார்த்ததில்லை.

138
00:16:56,933 --> 00:16:58,143
ஐஸ் கட்டி எங்கே?

139
00:16:58,560 --> 00:17:01,396
-சமையலறை அங்கிருக்கு.
-இது வேலை செய்யுமா?

140
00:17:06,651 --> 00:17:08,945
இதுங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.

141
00:17:09,529 --> 00:17:11,448
ஓ, எப்படி வேலை செய்யும்?

142
00:17:13,283 --> 00:17:15,410
-வேலை பண்ண வெக்கறியா?
-சரி, இதோ.

143
00:17:15,493 --> 00:17:16,995
ஹாய்.

144
00:17:26,421 --> 00:17:29,007
என்ன பண்ணறே?
ஹே என்ன பண்ணறே?

145
00:17:30,300 --> 00:17:32,677
இரு, இரு, நிறுத்து.

146
00:17:32,761 --> 00:17:36,765
இப்ப நீ நிறுத்தணும். நிறுத்து.
ப்ளான்ச், ப்ளான்ச், நீ குடிச்சிருக்கே.

147
00:17:41,102 --> 00:17:44,397
இதை செய்யக்கூடாது.
அட, உன் கணவர் அங்கிருக்கிறார்.

148
00:17:44,856 --> 00:17:46,608
ப்ளான்ச், உன் கணவர் அங்கு இருக்கிறார்.

149
00:17:46,691 --> 00:17:49,569
நிறுத்து கண்ணே. நான் சொல்வதை கேள்.

150
00:17:53,490 --> 00:17:55,116
கடவுளே, அழகா இருக்கே.

151
00:17:57,869 --> 00:17:59,621
ஓ, சே! சே.

152
00:18:01,331 --> 00:18:02,749
நான் அவளை தொடலை.

153
00:18:05,960 --> 00:18:08,004
அவள்தான் என் மேல் விழுந்தாள்.

154
00:18:10,799 --> 00:18:13,259
தளர்த்திக் கொள், வாலிபனே.

155
00:18:14,135 --> 00:18:15,887
விருந்து இப்போதான் ஆரம்பிக்குது.

156
00:18:25,271 --> 00:18:28,817
நான் சொன்னது போல்,
இது உன் அதிர்ஷ்ட இரவு.

157
00:18:32,237 --> 00:18:34,280
என்ன நடக்குது?

158
00:18:42,664 --> 00:18:44,207
என்ன செய்ய...

159
00:19:24,998 --> 00:19:26,291
ஓ, கண்ணே,

160
00:19:28,167 --> 00:19:30,128
நீ அற்புதம்.

161
00:19:36,050 --> 00:19:37,844
அபாரமாக இருந்தான் இல்லையா, ஸ்டான்லி?

162
00:19:41,931 --> 00:19:43,766
பெண்கள் அறை எங்கிருக்கு?

163
00:19:45,435 --> 00:19:46,644
அங்கே.

164
00:19:56,863 --> 00:19:58,448
வித்யாசமானவள், இல்லையா?

165
00:20:00,366 --> 00:20:01,659
ஆமாம்.

166
00:20:07,624 --> 00:20:09,667
தவறாக நினைக்க வேண்டாம்.
எனக்கு அதில் விருப்பமில்லை.

167
00:20:11,085 --> 00:20:13,212
என்ன நடக்குது? என்ன பண்ணறீங்க?

168
00:20:13,963 --> 00:20:15,256
உங்களுக்கு பைத்தியமா?

169
00:20:28,686 --> 00:20:31,814
கண்ணு, அவனை
ரொம்ப காயப்படுத்த வேண்டாம்.

170
00:20:33,650 --> 00:20:35,568
உன்னை பின்னர் கவனிக்கிறேன்.

171
00:20:36,653 --> 00:20:38,947
காருக்கு போ.

172
00:20:43,201 --> 00:20:44,827
உன் சேவைக்கு நன்றி.

173
00:20:52,418 --> 00:20:53,252
நில்லுங்க.

174
00:20:56,965 --> 00:20:58,299
இதை எடுத்துக்கோங்க.

175
00:21:00,843 --> 00:21:02,595
தயவு செய்து. இதை எடுத்துக்கோங்க.

176
00:21:03,930 --> 00:21:05,848
எனக்கு உன் காசு வேண்டாம், வீரனே.

177
00:21:06,808 --> 00:21:09,519
அது உன்னுடையது. நீ சம்பாதித்தது.

178
00:21:16,651 --> 00:21:17,860
எண்டு ஆப்ஃ ஹொனோர்

179
00:21:46,597 --> 00:21:47,515
ஒரு படிக்காத செய்தி

180
00:21:50,727 --> 00:21:51,769
ஷேக்கை கூட்டிட்டு வா.

181
00:21:52,478 --> 00:21:53,312
என்னாச்சு?

182
00:21:53,396 --> 00:21:54,230
பேசாம போ.

183
00:22:01,738 --> 00:22:03,239
-என்ன நடக்குது?
-பாருங்க.

184
00:22:03,781 --> 00:22:05,825
ஹலோ சகோதரனே

185
00:22:07,410 --> 00:22:09,328
எங்கே இருக்கான்னு கேளு.

186
00:22:10,580 --> 00:22:13,583
எங்கே இருக்க?

187
00:22:19,881 --> 00:22:21,758
ஓமருடன்.

188
00:22:24,886 --> 00:22:25,887
நீ நலமா?

189
00:22:26,929 --> 00:22:30,475
இல்லை, பிரெஞ்சும் அமெரிக்கர்களும்
என்னை தேடுகின்றனர்.

190
00:22:40,193 --> 00:22:42,153
பாரிஸை விட்டு வெளியேற முடியுமா?

191
00:22:42,987 --> 00:22:44,614
தெரியலை.

192
00:22:44,697 --> 00:22:47,492
கண்டிப்பா வெளியேறணும்.
பிடிபட்டா-எல்லாம் முடிஞ்சுது.

193
00:22:47,575 --> 00:22:50,953
ரகசிய சந்திப்பு இடம். இப்பவே போ.

194
00:22:52,914 --> 00:22:55,333
அங்கிருந்தேனு யாருக்கும் தெரிய வராது.

195
00:23:06,052 --> 00:23:09,847
சாட்சிகள் இல்லை.

196
00:23:56,435 --> 00:23:59,147
ஹே, கேப்டன், மசூதி இப்போ திறந்தாச்சு.

197
00:23:59,230 --> 00:24:00,773
நில்லு. நான் உன்னோடு வர்றேன்.

198
00:24:09,031 --> 00:24:10,408
உன்னிடம் ஒண்ணு கேக்கலாமா?

199
00:24:12,493 --> 00:24:16,372
அரசாங்கம் செய்வதெல்லாம் தெரிந்தும்
நீ எப்படி சிஐஏ வில் இருக்கே?

200
00:24:17,165 --> 00:24:19,500
அதாவது, உள்ளே இருந்து கொண்டு
சிலதை மாற்ற முயல்வது நல்லது.

201
00:24:20,084 --> 00:24:22,086
வெளியில் இருந்து மாற்றங்களை
செய்யவே முடியாமல்...

202
00:24:22,170 --> 00:24:24,338
போய்விடுவதை விட. இது என் கருத்து.

203
00:24:25,506 --> 00:24:26,883
நீ அவங்களுக்கு என்ன செய்யற?

204
00:24:27,925 --> 00:24:29,135
நான் ஒரு பகுப்பாய்வாளன்.

205
00:24:30,136 --> 00:24:33,848
மேஜையில் வேலை செய்யும் உனக்கு,
கள வேலைதான் பிடிக்குது போலிருக்கே.

206
00:24:35,224 --> 00:24:37,059
அனைவரையும் முட்டாளாக்கி இருக்க.

207
00:24:38,311 --> 00:24:42,023
நீ ஓநாய். ஆடாக நடிக்கும் ஓநாய்.

208
00:24:47,111 --> 00:24:48,112
அப்படியே செய்.

209
00:26:06,065 --> 00:26:08,192
உங்களுக்கு உதவட்டுமா, சகோதரரே?

210
00:26:09,819 --> 00:26:11,862
இந்த ஆளை பார்த்திருக்கீங்களா?

211
00:26:20,204 --> 00:26:21,330
நன்றி.

212
00:26:42,727 --> 00:26:45,855
மன்னிச்சுக்கோ. இங்க வா.

213
00:26:51,527 --> 00:26:52,611
உனக்கு இவனை தெரியுமா?

214
00:26:54,238 --> 00:26:55,156
இல்லை.

215
00:26:58,868 --> 00:27:00,453
பரவாயில்லை, மகனே.

216
00:27:00,953 --> 00:27:03,164
உனக்கு ஒரு தொந்தரவும் வராது.

217
00:27:04,206 --> 00:27:09,628
நீ உண்மையை சொல்வது ரொம்ப முக்கியம்.

218
00:27:13,841 --> 00:27:16,260
இந்த ஆளை உனக்கு தெரியுமா?

219
00:27:37,531 --> 00:27:39,367
-என்ன தெரியுமா?
-நீங்க வாங்கப் போறீங்களா?

220
00:27:39,450 --> 00:27:40,451
ஆமாம். எவ்வளவு?

221
00:27:40,993 --> 00:27:42,745
-140.
-140?

222
00:27:42,828 --> 00:27:44,455
யார் எனக்கு பணத்தை
திருப்பி கொடுப்பாங்க?

223
00:27:44,622 --> 00:27:47,583
வங்கியில் இருந்து திருடி என்னிடம் தா.

224
00:27:49,543 --> 00:27:50,378
கண்ணே.

225
00:27:51,045 --> 00:27:51,921
கண்ணே?

226
00:27:52,421 --> 00:27:53,255
எங்களோடு சேர்ந்து கொள்.

227
00:27:54,340 --> 00:27:56,675
என்னால் முடியாது.
இரவு உணவை ஆரம்பிக்கணும்.

228
00:27:56,801 --> 00:27:58,594
எனக்காக வாங்க, அம்மா.

229
00:28:01,555 --> 00:28:05,810
எப்போ நாம் கடைசியில்
குடும்பமா உட்கார்ந்தோம்?

230
00:28:08,938 --> 00:28:09,772
பாரு.

231
00:28:11,399 --> 00:28:12,817
உன் ஷூவை காப்பாத்தினேன்.

232
00:28:16,320 --> 00:28:18,364
சரி, ஆனால் முடிந்ததும் சமைக்கணும்.

233
00:28:22,660 --> 00:28:24,662
ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு.

234
00:28:24,745 --> 00:28:26,455
ஒரு ரயில் பாதை!
வாங்கப் போறீங்களா அம்மா.

235
00:28:26,539 --> 00:28:27,373
இல்லை, அம்மா.

236
00:28:30,668 --> 00:28:31,669
நிச்சயமா, ஏன் கூடாது?

237
00:28:35,798 --> 00:28:36,632
எவ்வளவு?

238
00:28:36,715 --> 00:28:37,883
இரு நூறு டாலர்கள்.

239
00:28:42,721 --> 00:28:47,560
உங்க அம்மாவ எப்படி திருமணம் செய்தேன்னு
உங்களுக்கு சொல்லி இருக்கேனா?

240
00:28:48,769 --> 00:28:50,104
வேண்டியதில்லை, அன்பே.

241
00:28:50,396 --> 00:28:51,564
ஏன் கூடாது?

242
00:28:52,857 --> 00:28:54,233
சொல்லுங்க, அப்பா!

243
00:28:55,651 --> 00:28:58,112
சாரா, உன்னை விட ரொம்ப பெரியவள்
இல்லை அவள் அப்போது.

244
00:28:59,405 --> 00:29:00,906
என்ன வயதிருக்கும் உனக்கு அப்போ, கண்ணே?

245
00:29:02,450 --> 00:29:03,617
பதினாறு.

246
00:29:03,701 --> 00:29:04,618
நிஜமாவா?

247
00:29:05,327 --> 00:29:06,495
பதினாறு!

248
00:29:10,332 --> 00:29:14,044
நான் திரும்பிக் கொண்டிருந்தேன்.
ரமதியில் ஈராக் போர்...

249
00:29:14,670 --> 00:29:16,839
ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்த போராட்டம்.

250
00:29:18,007 --> 00:29:19,049
திடீர்னு...

251
00:29:20,092 --> 00:29:22,887
என் கார்
நடு பாலைவனத்தில் நின்றுவிட்டது.

252
00:29:23,721 --> 00:29:24,847
சில மணி நேரம் கழித்து,

253
00:29:25,389 --> 00:29:27,475
ஒரு ஆள் லாரியில் வந்தார்,

254
00:29:28,142 --> 00:29:30,895
நிறுத்தி என்னை அழைத்துக் கொண்டார்.

255
00:29:30,978 --> 00:29:33,939
பக்கத்தில் இருக்கும் அவர்
வீட்டுக்கு சென்றோம்...

256
00:29:34,273 --> 00:29:35,983
இரவு உணவுக்காக என்னை உள்ளே அழைத்தார்.

257
00:29:37,651 --> 00:29:40,529
மேஜையில் உட்கார்ந்து,

258
00:29:41,697 --> 00:29:43,782
நிமிர்ந்து, பார்த்தால்...

259
00:29:44,366 --> 00:29:47,328
இந்த அழகான பெண், பாத்திரத்தில்
சூப்புடன் வந்தாள்.

260
00:29:47,912 --> 00:29:49,914
ஓ, கடவுளே, எத்தனை அழகு!

261
00:29:50,664 --> 00:29:53,167
உங்க அம்மாவை சொன்னேன், சூப்பை அல்ல.

262
00:29:58,839 --> 00:30:01,800
அவள் அப்பாவுக்கு காசும் இல்லை,
வேலையும் இல்லை.

263
00:30:02,676 --> 00:30:05,221
ஆனால் அழகான மகள் இருந்தாள்...

264
00:30:09,225 --> 00:30:10,935
அவர் எனக்கு அவளை அளித்தார்.

265
00:30:11,644 --> 00:30:13,771
அன்றிரவுக்கு.

266
00:30:20,736 --> 00:30:22,279
உங்க அம்மாவை பார்த்தேன்...

267
00:30:23,822 --> 00:30:26,283
கடவுள் கை காட்டி,

268
00:30:26,742 --> 00:30:29,578
ஒரு காரணத்துக்காக இங்கு அழைத்து
வந்ததாக உணர்ந்தேன்.

269
00:30:30,788 --> 00:30:34,291
அவள் அப்பாவிடம் எனக்கு அவள்
அது போல் தேவையில்லை என்றேன்.

270
00:30:35,084 --> 00:30:38,420
அவளை திருமணம் செய்துக்கணும்
அதுவும் முறைப்படி.

271
00:30:41,298 --> 00:30:42,466
அடுத்த நாள்...

272
00:30:44,927 --> 00:30:46,929
அந்த கிராமத்தில் இருந்து அவளை
அழைத்து வந்து...

273
00:30:47,012 --> 00:30:48,639
திருமணம் செய்து கொண்டேன்.

274
00:30:50,641 --> 00:30:51,892
ஆனால் இப்போ?

275
00:30:53,686 --> 00:30:55,479
எங்களுக்குள் எந்த ரகசியமும் கிடையாது.

276
00:31:07,283 --> 00:31:10,327
நாங்க எதையும் எங்களுக்குள்
மறைக்கப் போவதில்லை.

277
00:31:18,168 --> 00:31:19,712
அது சரிதானே, கண்ணே?

278
00:31:57,458 --> 00:31:59,501
அவன் ரத்தம் கசிய, வந்த போது,

279
00:31:59,585 --> 00:32:01,211
அவனை பார்த்து
ரொம்ப வருடங்கள் ஆகியிருந்தது.

280
00:32:01,962 --> 00:32:03,505
நான் என்ன செய்திருக்கணும்?

281
00:32:03,589 --> 00:32:04,757
என் வாசலில் சாக விட்டிருக்கணுமா?

282
00:32:04,840 --> 00:32:06,925
நீங்க உதவியது எங்களுக்கு தெரியும்!

283
00:32:07,009 --> 00:32:08,135
நான் ஒரு டாக்டர்.

284
00:32:08,552 --> 00:32:10,804
அப்படி இருந்தேன்
ஒரு காலத்தில், லெபனானில்.

285
00:32:22,441 --> 00:32:26,028
நன்றி, பழைய நண்பரே!

286
00:32:30,157 --> 00:32:32,618
அலி மூஸா 1983

287
00:32:35,621 --> 00:32:37,665
நான் அந்த கேம் விளையாட விரும்பல.
முட்டாள் தனமானது.

288
00:32:37,748 --> 00:32:38,916
அமைதி! இருவரும்!

289
00:32:38,999 --> 00:32:41,502
-என்ன பிரச்சனை?
-அவர்களுக்கு அந்த கேம் பிடிக்கலை.

290
00:32:43,003 --> 00:32:44,713
அவர்களுக்கு அந்த கேம் பிடிக்கலையா?

291
00:32:45,255 --> 00:32:47,424
இந்த கேம்
நீங்க விளையாடிட்டு இருந்தீர்களா?

292
00:32:53,472 --> 00:32:54,723
யார் விளையாடிட்டு இருந்தா?

293
00:33:01,772 --> 00:33:03,357
இங்கிருந்த அந்த ஆள்.

294
00:33:41,562 --> 00:33:43,689
சாரா, எழுந்திரு, குழந்தை!

295
00:33:44,481 --> 00:33:46,150
எந்திரிச்சு துணிய மாத்து.

296
00:33:46,233 --> 00:33:48,819
உன் தங்கையை எழுப்பு. மூனு நாள் மாற்று
துணிகளை எடுத்துக்கொள்.

297
00:33:51,613 --> 00:33:52,948
அம்மா, என்ன நடக்குது?

298
00:33:53,949 --> 00:33:56,952
நாம ஊருக்கு போறோம், கண்ணே.
இப்பவே கிளம்பணும்.

299
00:33:57,035 --> 00:33:58,245
அப்பா எங்கே?

300
00:33:58,328 --> 00:34:00,164
உங்கப்பா வரலை.

301
00:34:00,289 --> 00:34:01,749
-உன் சட்டையை போடலாம்--
-இல்ல.

302
00:34:02,750 --> 00:34:04,501
நான் சொல்வதை கேள்!

303
00:34:04,585 --> 00:34:06,211
அம்மா, நான் எங்கும் வரமாட்டேன்,
அப்பா வரலைனா--

304
00:34:06,295 --> 00:34:07,171
இப்பவே சட்டையை போடு!

305
00:34:07,254 --> 00:34:08,839
உங்களால் என்னை தயாராக்க முடியாது!

306
00:34:09,423 --> 00:34:10,841
சமீர், இங்க வா! சமீர்!

307
00:34:15,512 --> 00:34:16,513
உங்க சாமானை எடுத்துக்கோங்க.

308
00:34:16,597 --> 00:34:18,640
கவலைப்படாதே, திரும்ப வரலாம்.

309
00:34:18,724 --> 00:34:21,518
ஆனால் இப்போ இங்கிருந்து உடனே போகணும்.

310
00:34:21,602 --> 00:34:23,937
உங்கப்பாவுக்கு சமீரை
மிகவும் பிடிக்கும்.

311
00:34:24,062 --> 00:34:26,648
இங்கு பத்திரமாதான் இருப்பான்.
நாம் போகலாம்.

312
00:34:30,402 --> 00:34:31,570
அப்பா!

313
00:34:34,865 --> 00:34:35,699
அப்பா!

314
00:34:47,920 --> 00:34:49,463
நமக்காக காரை விட்டு போயிருக்காங்களா?

315
00:34:50,088 --> 00:34:51,340
நாம் வலுவாக உள்ளோம்,

316
00:34:51,423 --> 00:34:54,968
ஆனால் அந்த வலிமை நம் ஆயுதங்களால் அல்ல,

317
00:34:55,052 --> 00:34:56,929
நம் நம்பிக்கையால்.

318
00:35:04,561 --> 00:35:05,979
உங்களுக்கு ஓட்டத் தெரியுமா?

319
00:35:07,564 --> 00:35:08,941
மாமா ஃபாத்தி
கற்றுக் கொடுத்திருக்கிறார்.

320
00:35:12,986 --> 00:35:14,363
மன்னிக்கணும், சகோதரர்களே.

321
00:35:14,947 --> 00:35:15,823
ஃபாத்தி...

322
00:35:15,906 --> 00:35:16,990
வர்றேன், ஷேக்.

323
00:35:26,250 --> 00:35:28,043
உனக்கு தெரியாமல் இது எப்படி நடக்கும்?

324
00:35:28,502 --> 00:35:30,587
-என்னை நம்புங்க. எனக்கு தெரியாது--
-உன்னை நம்பினேன்!

325
00:35:30,671 --> 00:35:31,672
என் குடும்பத்தை பொறுத்தவரை.

326
00:35:32,172 --> 00:35:35,634
அவங்களை கண்டு பிடிச்சு கூட்டிட்டு வா.

327
00:35:36,510 --> 00:35:37,344
சரி, ஷேக்.

328
00:35:37,427 --> 00:35:38,262
இப்பவே போ.

329
00:35:38,345 --> 00:35:39,179
யஜீத்!

330
00:35:39,263 --> 00:35:40,138
வர்றேன், ஷேக்.

331
00:35:41,014 --> 00:35:41,849
அவனோடு போ.

332
00:35:41,932 --> 00:35:44,560
-ஆனா--
-"ஆனா" இல்ல! திரும்ப கூட்டிட்டு வா!

333
00:35:44,643 --> 00:35:45,644
சரி, ஷேக்.

334
00:35:58,782 --> 00:36:00,492
எங்களுக்கு தெரியும்,
அந்த கேம உபயோப்படுத்தி,

335
00:36:00,576 --> 00:36:02,286
அவன் மறைவிடத்துடன்
தொடர்பு கொண்டுள்ளான்.

336
00:36:03,203 --> 00:36:05,122
எங்களுக்கு தெரியும் அவனை போக
சொல்லி இருக்காங்க...

337
00:36:05,205 --> 00:36:06,915
-ரகசிய சந்திக்கும் இடத்துக்கு--
-ஏற்கனவே சொன்னனே...

338
00:36:07,583 --> 00:36:09,334
அலி எங்கே போனான்னு எனக்கு தெரியாது.

339
00:36:09,418 --> 00:36:11,211
ஆனால் நீங்க அவனுக்கு உதவியிருக்கீங்க!

340
00:36:11,712 --> 00:36:16,508
அடுத்த அறையில் இருக்கும் இரு
குழந்தைகளுக்கும் தகப்பன் தேவை.

341
00:36:17,634 --> 00:36:20,762
அலியை காப்பாத்திட்டு இருந்தா,
உங்களை கைது பண்ண வேண்டி வரும்.

342
00:36:23,682 --> 00:36:26,560
அவன் ஒரு கார் தேவைனு சொன்னான்.

343
00:36:29,187 --> 00:36:31,940
அதனால், என்னோட காரை கொடுத்தேன்.

344
00:36:38,447 --> 00:36:40,449
துருக்கி எல்லையில் இருந்து 80 கி.மீ.
மேற்கு சிரியா

345
00:36:46,079 --> 00:36:47,122
சரி அம்மா...

346
00:36:47,205 --> 00:36:48,206
இப்போ என்ன?

347
00:36:49,333 --> 00:36:50,459
பரவாயில்லை, கண்ணே.

348
00:36:52,252 --> 00:36:53,295
கொஞ்ச தூரத்தில் ஒரு ஊர் வருது.

349
00:36:54,922 --> 00:36:55,756
நாம நடக்கலாம்.

350
00:36:57,007 --> 00:36:59,176
நம்மிடம் நீர் இல்லை, உணவில்லை.

351
00:36:59,259 --> 00:37:00,510
அப்பா, யாரையாவது அனுப்ப போகிறார்--

352
00:37:00,594 --> 00:37:02,846
போதும் சாரா. எனக்கு அதை
கேட்க வேண்டாம்!

353
00:37:07,100 --> 00:37:08,393
பரவாயில்லை, கண்ணே.

354
00:37:08,477 --> 00:37:09,686
பயந்துக்காதே.

355
00:37:13,190 --> 00:37:15,233
கடவுள் நம்மை காப்பாற்றுவார்.

356
00:37:19,863 --> 00:37:21,323
கடவுள் நம்மை காப்பாற்றுவார்.

357
00:37:25,452 --> 00:37:27,412
சாமானை எடுத்துக்கோங்க.

358
00:37:30,207 --> 00:37:31,416
போகலாம், வா, பின்னால்!

359
00:37:48,934 --> 00:37:50,978
டிஜிஎஸ்ஐ தலைமையகம்
பாரிஸ், பிரான்ஸ்

360
00:37:51,061 --> 00:37:52,145
அதோ அங்கிருக்கான்.

361
00:37:52,270 --> 00:37:55,524
வண்டி எண்ணை வெச்சு கார்
ஜிபிஎஸ்சிற்குள் நுழைந்தோம்.

362
00:37:55,607 --> 00:37:58,402
இடைமறிக்க பிரிவுகளை
ஏற்பாடு செய்திருக்கோம்.

363
00:37:58,860 --> 00:38:00,028
இடைமறிக்கவா?

364
00:38:00,654 --> 00:38:02,906
நாம் பின்தொடர வேண்டாமா?
எங்க போறான்னு பார்க்க வேண்டாமா?

365
00:38:02,990 --> 00:38:05,283
மேலும் உயிர்களை
பணயம் வெக்கணுமா? இல்லை.

366
00:38:07,035 --> 00:38:09,454
நாம அனைவருமே வீடியோ கேம்ல இருந்த
உரையாடல படிச்சோம்.

367
00:38:10,080 --> 00:38:11,540
அவன் யாரையோ சந்திக்கப் போறான்.

368
00:38:12,290 --> 00:38:14,251
உங்களிடம் வான்வழி கண்காணிப்பு இருக்கு.

369
00:38:14,334 --> 00:38:16,837
அவனை கண்காணித்தால் மீண்டும் அவன்
மறைவிடத்தை கண்டுபிடிக்கலாம்.

370
00:38:17,212 --> 00:38:18,880
சுலைமானையே அது காட்டிவிடலாம்.

371
00:38:19,840 --> 00:38:22,259
அவன் ஆல்ப்ஸ் திசையை நோக்கி போகிறான்,

372
00:38:22,342 --> 00:38:24,177
டிரோன் அவனை மேகங்களில் இழந்துவிடும்.

373
00:38:24,261 --> 00:38:27,597
ஏற்கனவே ஜிபிஎஸ் மாட்டியிருப்பதால்
அவனை இழக்க வாய்ப்பில்லை.

374
00:38:27,681 --> 00:38:31,393
பிரஞ்சு குடிமக்களின் மரணத்திற்கு
அவனே பொறுப்பு. இந்த பிரெஞ்சு மண்ணில்.

375
00:38:31,476 --> 00:38:32,352
இப்ப, பொறுங்க.

376
00:38:33,937 --> 00:38:35,939
நான் சுலைமானை
யேமனில் இருந்து கண்காணிக்கறேன்.

377
00:38:36,898 --> 00:38:38,650
சரியா? அவன் தீட்டும் திட்டம்,

378
00:38:39,526 --> 00:38:41,862
அந்த அபார்ட்மெண்டில் நடந்ததை விட
கண்டிப்பா மிக கொடியது.

379
00:38:43,572 --> 00:38:45,824
உங்க ஆட்களை இழந்திருக்கீங்க.
நான் அங்க இருந்திருக்கேன்.

380
00:38:47,451 --> 00:38:51,079
அவன் யாரையோ சந்திக்கப் போவது நிச்சயம்
என்பதால், கண்டுபிடிப்பதுதான் நம் வேலை.

381
00:38:51,163 --> 00:38:54,458
இந்த கணக்கு தப்பா இருந்தா, எல்லையை
தாண்டும் முன் அவனை மட்டும் பிடிப்போம்.

382
00:38:54,541 --> 00:38:56,043
ஆனால் சரியா இருந்தா,

383
00:38:57,544 --> 00:38:59,296
கூட்டத்தையே பிடிப்போம்.

384
00:39:02,466 --> 00:39:05,343
சரி. அவனை பின்தொடரலாம்.

385
00:39:06,219 --> 00:39:08,430
ஆனால் அவன் எல்லையை தாண்டப் போவதில்லை.

386
00:39:16,354 --> 00:39:17,773
நீ அவளுடன் செல்.

387
00:39:48,929 --> 00:39:49,763
சாரா.

388
00:39:50,764 --> 00:39:52,891
உன் தங்கைக்கும் உனக்கும் சாப்பிட
ஏதாவது வாங்கு.

389
00:39:52,974 --> 00:39:53,809
போங்க.

390
00:39:54,810 --> 00:39:56,019
டாக்சி அருகே சந்திக்கலாம்.

391
00:40:10,367 --> 00:40:14,287
அம்மாடி, இதோடு நாலாவது முறை
இவள் எவனுடனோ படுக்கிறாள்.

392
00:40:16,998 --> 00:40:19,167
இந்த கருமம், சீரியல்
நோவேலாவை விட நல்லாயிருக்கு.

393
00:40:26,299 --> 00:40:28,885
யோவ். மைகல் ஜாக்சன்?

394
00:40:29,719 --> 00:40:30,929
ஹே, என்னாச்சு உனக்கு?

395
00:40:32,097 --> 00:40:34,224
என்ன நடந்ததுன்னு சொல்லலாமே.

396
00:40:34,975 --> 00:40:37,519
இன்னொரு அரவாணிய தவறிப் போய்
பிரிமாண்ட் தெருவில் பிடித்தாயா?

397
00:40:37,602 --> 00:40:39,104
ஆவா, அதை பத்தி பேசாதேனு சொன்னேன்.

398
00:40:40,272 --> 00:40:41,398
சரி.

399
00:40:42,732 --> 00:40:43,692
கடவுளே.

400
00:40:50,157 --> 00:40:51,366
அவனுக்கு தெரிஞ்சு போச்சா?

401
00:40:53,702 --> 00:40:57,372
இல்லை. வீட்டுக்கு வருவான்னு
இன்னமும் காத்துக்கிட்டிருக்கான்.

402
00:41:18,268 --> 00:41:19,644
ஹலோ, சார்.

403
00:41:20,061 --> 00:41:21,605
எல்லைய அடைய எவ்வளவு ஆகும்?

404
00:41:22,230 --> 00:41:23,440
அதில் மூன்று.

405
00:41:47,130 --> 00:41:48,590
இது எங்கிருந்து வந்தது?

406
00:41:49,257 --> 00:41:50,634
எதை சொல்லற?

407
00:41:51,134 --> 00:41:54,679
சில்வர் நிசான் கார். இந்த ஊரில்
இதைப் பார்த்ததே இல்லையே.

408
00:41:54,846 --> 00:41:56,806
அது சரி, உள்ளூருக்கு
மிகவும் ஆடம்பரமானது.

409
00:41:56,890 --> 00:41:57,724
சரிதான்.

410
00:42:04,189 --> 00:42:05,023
போகலாம்.

411
00:42:05,565 --> 00:42:06,983
ஆனால் இன்னும் உணவை வாங்கலையே!

412
00:42:18,036 --> 00:42:19,829
சரி, அவனை கண்டுபிடிக்கறேன்.

413
00:42:20,205 --> 00:42:22,082
யாரை தேடறான்?

414
00:42:24,000 --> 00:42:27,963
அவன் படத்தை எடுத்து மர்க் சாட்டில்
போடறேன். என்ன சிக்குதுனு பார்க்கலாம்.

415
00:42:28,755 --> 00:42:29,673
பிரதி எடுக்கறேன்.

416
00:42:31,758 --> 00:42:32,717
நாங்க அங்கு போவதில்லை.

417
00:42:32,801 --> 00:42:34,135
எங்க உயிர் ஆபத்தில் இருக்கு.

418
00:42:34,219 --> 00:42:35,553
எல்லைக்குப் போயே ஆகணும்!

419
00:42:35,637 --> 00:42:37,013
உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன்.

420
00:42:37,138 --> 00:42:38,348
இல்லை, என்னால் முடியாது.

421
00:42:38,723 --> 00:42:40,141
எல்லைக்கு போகணும்...

422
00:42:40,225 --> 00:42:41,643
யஜீதும் ஃபாத்தியும் இங்க வந்துட்டாங்க.

423
00:42:49,401 --> 00:42:50,235
போகலாம்!

424
00:42:50,986 --> 00:42:52,112
வாங்க போகலாம்!

425
00:43:01,913 --> 00:43:03,290
என்ன செய்யறான் அவன்?

426
00:43:03,373 --> 00:43:07,002
விஷயம் கிடைச்சுது.
அவன் அப்பாஸ் ஆல் ஃபாத்தி.

427
00:43:07,127 --> 00:43:10,046
சந்தேகத்துக்குரிய பட்டியலில்.
வெறும் கண்காணிப்பில் மட்டுமே.

428
00:43:15,802 --> 00:43:16,886
இது நல்லதா படலை.

429
00:43:17,304 --> 00:43:19,097
சார், இங்கு ஒரு நிலமை உருவாகி உள்ளது.

430
00:43:19,639 --> 00:43:20,807
டூம் ஸ்டோன், என்ன நடக்குது?

431
00:43:22,726 --> 00:43:23,685
இந்த ரகளைய பாருங்க.

432
00:43:49,711 --> 00:43:50,962
அவங்களை விடுங்க!

433
00:43:52,464 --> 00:43:54,507
இங்க வாங்க, பயந்துக்க வேண்டாம்.

434
00:43:54,591 --> 00:43:55,842
ஓடுங்க!

435
00:43:58,386 --> 00:43:59,262
அட கடவுளே.

436
00:43:59,346 --> 00:44:00,597
ஏன் அவங்க இலக்கு புள்ளில இருக்காங்க?

437
00:44:00,680 --> 00:44:02,807
ஒருவன் சந்தேகத்துக்குரியவன்.
ஆனால் கண்காணிப்பு மட்டுமே.

438
00:44:02,891 --> 00:44:04,851
அதை சொல்லு. அப்போ, உன்னால
எதுவும் செய்ய முடியாது.

439
00:44:04,976 --> 00:44:07,228
யோசிச்சுதான் சொல்றீங்களா?
இந்தப் பெண்கள் கொள்ளை, கற்பழிப்பு...

440
00:44:07,354 --> 00:44:09,189
இல்ல அதை விட கொடுமைக்கு
ஆளாவதை பார்த்துட்டிருக்கணுமா?

441
00:44:09,272 --> 00:44:11,983
நான் இப்படிச் சொல்வதை மேலே
சொல்லி, என்னைச் சுட்டாலும் பரவாயில்லை.

442
00:44:13,193 --> 00:44:14,110
சரி.

443
00:44:16,029 --> 00:44:18,239
அவங்களும் அதைத்தான் சொல்வாங்க.

444
00:44:19,282 --> 00:44:20,950
அவளை கட்டி போடு.

445
00:44:21,034 --> 00:44:21,868
பொறுமையா இருங்க.

446
00:44:22,535 --> 00:44:23,370
சாரா!

447
00:44:23,453 --> 00:44:24,746
ஹனின், அமைதியா இரு!

448
00:44:28,333 --> 00:44:29,542
அம்மா!

449
00:44:29,834 --> 00:44:31,336
அமைதியா இரு. பொறுமை, பொறுமை.

450
00:44:34,381 --> 00:44:35,507
நகராதே!

451
00:44:37,384 --> 00:44:40,720
மறந்திட்டிங்களா? நாம்
குடும்பம் போல்...

452
00:44:40,804 --> 00:44:43,348
அவங்க என்னை என்ன செய்வாங்கனு
உங்களுக்கு தெரியும்...

453
00:44:45,392 --> 00:44:47,310
தெரியும். கொஞ்சம் நேரம் கொடு.

454
00:44:47,394 --> 00:44:49,479
இந்த நாயை எப்படி
அகற்றலாம்னு யோசிக்கறேன்.

455
00:44:52,357 --> 00:44:53,274
அவனை கொன்னுடுங்க.

456
00:44:53,691 --> 00:44:56,736
என் வீட்டுக்காரரிடம்
நான் கொன்னதா சொல்லுங்க.

457
00:45:03,410 --> 00:45:04,244
என்ன கண்றாவி?

458
00:45:06,079 --> 00:45:08,081
என்ன சொல்லிட்டிருந்தே?

459
00:45:20,885 --> 00:45:23,221
ஆம், இது கேப்டன் விட்மோர்
கிரீச்சில் இருந்து.

460
00:45:23,304 --> 00:45:25,598
நம் சந்தேகத்துக்குரிய அப்பாஸ்
ஆல் ஃபாத்தி என்ற ஒருவன்.

461
00:45:26,099 --> 00:45:29,310
அவன் தெரியாத ராணுவ வயது
இளைஞனால் சுட்டு கொல்லப்பட்டான்.

462
00:45:29,436 --> 00:45:31,855
இப்போது ஒரு கிராமத்து பெண்ணை கற்பழிக்க
முயற்சிப்பது போல் தெரிகிறது.

463
00:45:31,938 --> 00:45:33,565
அவனை சுட உத்தரவு வேண்டுகிறோம்.

464
00:45:47,454 --> 00:45:49,247
காப்பாத்துங்க, காப்பாத்துங்க!

465
00:45:51,708 --> 00:45:53,001
யாராவது காப்பாத்துங்க!

466
00:45:53,084 --> 00:45:54,586
வா.

467
00:45:55,128 --> 00:45:56,754
ஏதாவது செய்தே ஆகணும்.

468
00:46:03,011 --> 00:46:04,345
யாராவது காப்பாத்துங்க!

469
00:46:11,144 --> 00:46:12,520
சார், எனக்கு சுட இலக்கு இருக்கு.

470
00:46:13,062 --> 00:46:15,773
பொறு, பொறு.

471
00:46:15,857 --> 00:46:18,568
உனக்கு சுட இன்னும் உத்தரவு கிடைக்கல.

472
00:46:18,651 --> 00:46:22,614
கேக்குதா? என் ஆணைக்கு பதில் சொல்!

473
00:47:13,748 --> 00:47:17,293
பயலே, நீ இப்போ நேரடி உத்தரவை மீறி
விதிமுறையை உடைச்சே.

474
00:47:17,418 --> 00:47:20,213
டூம் ஸ்டோன், உன் பதவியில்
இருந்து நீக்கப் படுகிறாய்.

475
00:47:21,172 --> 00:47:22,674
-ராணுவ போலீஸை கூப்பிடு.
-சரி, சார்.

476
00:47:23,841 --> 00:47:25,218
ஆமாம், சார், இங்குதான் இருக்கேன்.

477
00:47:29,264 --> 00:47:31,099
அப்படியா. சரி, சார்.

478
00:47:33,268 --> 00:47:35,562
சரி. அதே செய்கிறேன், சார்.

479
00:47:41,317 --> 00:47:42,485
நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி.

480
00:47:45,321 --> 00:47:46,364
போகலாம்.

481
00:48:11,139 --> 00:48:12,140
பார்த்தீங்களா?

482
00:48:12,849 --> 00:48:14,225
நான் சொன்னேன் இல்ல...

483
00:48:14,601 --> 00:48:16,477
கடவுள் நம்மை காப்பாற்றுவார்.

484
00:48:26,321 --> 00:48:27,405
அட கடவுளே.

485
00:48:29,240 --> 00:48:30,408
அது, வந்து...

486
00:48:31,492 --> 00:48:32,785
கடவுளே.

487
00:48:36,539 --> 00:48:37,498
சே.

488
00:48:43,171 --> 00:48:46,007
வெச்சுக்கோ. நீ ஜெயித்தே.

