1
00:00:07,383 --> 00:00:09,802
டாம் கிளான்ஸியின்
ஜாக் ரயன்

2
00:00:47,673 --> 00:00:51,552
லைபீரியா - ஆறு மாதங்களுக்கு முன்

3
00:01:52,905 --> 00:01:55,783
எபோலா
அணுகல் தடைசெய்யப்பட்டது

4
00:02:20,140 --> 00:02:21,642
சமுயல், நீ போகலாம்.

5
00:02:43,664 --> 00:02:46,750
உனக்கு விதிமுறை தெரியும்.
 நீ ஓட்டும் போது...

6
00:02:46,834 --> 00:02:48,335
எனக்குதான் ரேடியோ உரிமை இருக்கு.

7
00:02:48,460 --> 00:02:49,879
இன்னும் நான் ஓட்ட ஆரம்பிக்கலை.

8
00:03:14,778 --> 00:03:18,532
குசாலணியில் இருந்து 20கிமீ தெற்கில்,
துருக்கி

9
00:03:51,857 --> 00:03:54,068
கொஞ்ச நேரம் அடக்கிக்க முடியுமா?

10
00:04:08,707 --> 00:04:11,585
பரவாயில்லை கண்ணே, அப்படியே போ.

11
00:04:39,613 --> 00:04:41,991
அடானா, துருக்கி

12
00:04:53,335 --> 00:04:56,130
அடானாவுக்கு வரவேற்கிறேன்.
நான் லான்ஸ் மில்லர்.

13
00:04:56,463 --> 00:04:58,674
ஜிம் கிரீயர். ஜாக் ரயன்.

14
00:04:58,757 --> 00:05:00,342
-ஹே.
-ஹே. பயணம் எப்படி இருந்தது?

15
00:05:00,426 --> 00:05:02,302
-மோசமில்லை.
-உள்ள ஏறுங்க.

16
00:05:17,109 --> 00:05:18,777
நீங்க நிக் கானரோடு
கராச்சியில் வேலை பார்த்தீங்க.

17
00:05:18,861 --> 00:05:20,612
ஆமாம். செய்தேன்.

18
00:05:20,863 --> 00:05:23,407
அவர்தான் என் ஆசான். வியன்னாவில்
அவருக்கு கீழ் பயிற்சி பெற்றேன்.

19
00:05:23,490 --> 00:05:26,827
நிக் மிகவும் திறமையானவன். அதை
காட்டிலும் சிறந்தது உனக்கு கிடைக்காது.

20
00:05:27,286 --> 00:05:28,620
ஆனாலும், அந்த கேக்குகள்...

21
00:05:28,704 --> 00:05:31,665
ஓ, இல்ல. தினமும் ஒரு டப்பா
கொண்டு வருவார்.

22
00:05:31,749 --> 00:05:33,792
வியன்னாவில் கேக்குகள் கலைநயம் மிக்கவை.

23
00:05:33,876 --> 00:05:35,044
சரிதான்.

24
00:05:58,901 --> 00:06:00,152
இலக்கின் விவரத்தில் எங்கு இருக்கிறோம்?

25
00:06:00,235 --> 00:06:03,238
முக்கிய ஆதாரம் கிடைச்சிருக்கு. இவன்
டிமிர் குடும்பத்தில் மூன்றாவது ஆள்.

26
00:06:04,031 --> 00:06:06,116
முகாமில் இருந்து
கள்ளக்கடத்தல் பண்ணறாங்களா?

27
00:06:06,200 --> 00:06:08,368
இல்லை, அவர்கள் பாலியல் கடத்தலும்,
போதை பொருளும் கடத்தறாங்க.

28
00:06:08,452 --> 00:06:12,039
டெர்சி குடும்பம் கடத்தல் செய்யறாங்க.
இவங்க எல்லாருமே பங்காளிகள்.

29
00:06:12,122 --> 00:06:14,041
என் ஆள் நமக்கு அணுக
வழி செய்ய முடியும்.

30
00:06:14,583 --> 00:06:15,542
ஆஹா.

31
00:06:15,626 --> 00:06:19,088
நமக்காக பாலியல் கடத்தலையும், போதை
மருந்து தொழிலையும் விட்டு வருவானா?

32
00:06:19,171 --> 00:06:20,798
எவ்வளவு அதிர்ஷ்டம் இருக்கு நமக்கு?

33
00:06:20,881 --> 00:06:22,841
அவங்கெல்லாம் மோசமானவங்க, நண்பனே.

34
00:06:22,925 --> 00:06:25,969
நல்லவர்களுக்கு அகதிகளை துருக்கியில்
இருந்து கடத்துவதே தெரியாது.

35
00:06:43,987 --> 00:06:46,406
டாக்ஸி? உங்களுக்கு சவாரி வேண்டுமா?

36
00:06:47,366 --> 00:06:48,367
ஆமாம்.

37
00:06:52,079 --> 00:06:53,580
-தொழில் எப்படி போகுது.
-நல்லாயிருக்கு.

38
00:06:53,914 --> 00:06:56,291
விரைவான பாதையில் இன்சிர்லிக் விமான
தளத்திற்கு கூட்டிட்டு போக முடியும்.

39
00:06:56,375 --> 00:06:58,877
ஏமாற்ற மாட்டேன். ஏற்கனவே போயிருக்கேன்.

40
00:06:58,961 --> 00:07:00,879
எதார்த்தத்தில், நான்
சிரியாவிற்கு போகணும்.

41
00:07:01,004 --> 00:07:04,091
-கேலி பண்ணறீங்களா?
-இல்லை. அல் பாப்னு ஒரு நகரம்.

42
00:07:04,174 --> 00:07:07,094
இங்கிருந்து 332 கிலோமீட்டரில் இருக்கு.

43
00:07:07,177 --> 00:07:08,345
நீங்க ஐஎஸ்ஐஎஸா?

44
00:07:08,804 --> 00:07:10,931
யாரும் சிரியாவிற்கு உங்களை
கூட்டிட்டு போக விரும்ப மாட்டாங்க.

45
00:07:11,640 --> 00:07:12,599
இப்போ எப்படி?

46
00:07:30,659 --> 00:07:32,911
வாஷிங்டன் மெமோரியல் ஆஸ்பத்திரி
வாஷிங்டன் டி.சி.

47
00:07:41,420 --> 00:07:42,504
-ஹே.
-ஹே.

48
00:07:42,588 --> 00:07:45,215
நான் அனுப்பிய தரவு தொகுப்பை பார்க்க
உனக்கு வாய்ப்பு கிடைச்சுதா?

49
00:07:45,340 --> 00:07:46,425
சே.

50
00:07:46,842 --> 00:07:49,469
என்னை இந்த இவிடி கிருமி
கவனத்தை திருப்பியது.

51
00:07:49,553 --> 00:07:53,348
எபோலா? லைபீரியாவில் இருந்து டேவிட்
வேன்னாய் அனுப்பிய குருதி வளர்மமா?

52
00:07:53,432 --> 00:07:56,185
ஆமாம். இப்போ ஒரு புது நோயாளியிடம்.

53
00:07:56,268 --> 00:07:58,145
அவனை தவறான பிரிவு வகை
பட்டியலில் சேர்த்திருக்காங்க.

54
00:07:58,228 --> 00:08:02,191
பாரு, இது இவிடி-27 உடன் பொருந்துகிறது.

55
00:08:02,900 --> 00:08:05,944
-இது அழிக்கப்பட்டது ஆச்சே.
-அது, இல்லைனு வெளிப்படையா தெரியுதே.

56
00:08:07,112 --> 00:08:08,780
டேவிட் அதை ஒத்துக்கலயா?

57
00:08:08,864 --> 00:08:13,076
இல்லை. நோயாளி இவிடி-27
பாதிக்கப் பட்டவர்களின் தொகுதியிலோ...

58
00:08:13,160 --> 00:08:15,120
அல்லது தொடர்புகளின் தொடர்போடவோ
கூட பொருந்தவில்லை.

59
00:08:15,537 --> 00:08:16,705
-அதை அவனிடம் சொன்னியா?
-ஆமாம்.

60
00:08:16,955 --> 00:08:19,791
அது சாத்தியமில்லைனு சொன்னான்.
திரும்ப சோதிக்க சொன்னான்.

61
00:08:19,875 --> 00:08:21,543
அதுவும் செய்தேன்.

62
00:08:22,085 --> 00:08:25,672
அப்ப, வேன்னாய விட்டு தொலை. ஷான் டன்கன்
அல்லது பிரிட்டுகளிடம் சோதனையை கொடு.

63
00:08:28,008 --> 00:08:30,552
-ஆமாம், அதைதான் செய்யணும்.
-ஆமாம்.

64
00:08:30,636 --> 00:08:32,679
ஒரு மின்னஞ்சல் அனுப்பிட்டு,
பின்னர் போகலாம்.

65
00:08:32,763 --> 00:08:34,223
ஒரு குடுவை மார்கரிட்டா
வாங்க போறேன் இன்று,

66
00:08:34,306 --> 00:08:37,434
முழுசா முடிக்காம கிளம்பறதோ
எவருடனோ வீட்டுக்கு திரும்புவதோ இல்லே.

67
00:08:38,185 --> 00:08:39,895
-கெவின் பிறந்த நாளா?
-மறந்திட்டியா?

68
00:08:39,978 --> 00:08:41,396
மறந்திட்டேன்.

69
00:08:41,480 --> 00:08:44,316
இங்க யாருக்காவது இரவு வெளிய போக
அவசியப் படுதுனா, அது உனக்குத்தான்.

70
00:08:44,399 --> 00:08:45,692
என்னால முடியாது.

71
00:08:45,776 --> 00:08:47,736
-இதை முடிக்கணும்.
-சரி.

72
00:08:47,819 --> 00:08:50,781
சரி, மனசு மாறினால் எங்கே இருப்போம்னு
உனக்கு தெரியும்.

73
00:08:51,823 --> 00:08:53,242
சந்தாஷமா இரு.

74
00:08:53,742 --> 00:08:54,701
கண்டிப்பா இருப்பேன்.

75
00:09:11,301 --> 00:09:12,928
பாட்டை மாத்து.

76
00:10:19,453 --> 00:10:21,580
சீக்கிரம், சீக்கிரம்! வேகமா!

77
00:10:21,663 --> 00:10:22,497
எல்லாரும் வெளியேறுங்க!

78
00:10:22,581 --> 00:10:23,999
உங்களுக்கு வெறும்
 15 நிமிஷம்தான் இருக்கு.

79
00:10:24,082 --> 00:10:25,625
அடுத்த நிறுத்தம் கடற்கரையில்தான்.

80
00:10:29,963 --> 00:10:32,674
கழிவறைகள் அங்கே இருக்கு.

81
00:11:05,290 --> 00:11:06,458
வா, கண்ணே.

82
00:11:07,793 --> 00:11:08,627
இங்கே போ.

83
00:11:26,228 --> 00:11:28,021
நானே பார்த்துக்கறேன்.

84
00:11:28,105 --> 00:11:29,272
சரி, கண்ணே.

85
00:11:51,795 --> 00:11:53,255
இது பெண்களுக்கு மட்டும்தான்.

86
00:11:53,338 --> 00:11:54,464
வழியை விட்டு விலகு!

87
00:12:02,764 --> 00:12:04,141
இங்கே என்ன பண்ணறே?

88
00:12:04,224 --> 00:12:05,058
வெளிய போ!

89
00:12:05,142 --> 00:12:05,976
வெட்கம் கெட்டவன்!

90
00:12:06,101 --> 00:12:07,644
வெளிய போ!

91
00:12:07,769 --> 00:12:09,646
எல்லாரும், வெளியேறுங்க!

92
00:12:09,729 --> 00:12:10,772
வெளியேறு!

93
00:12:24,035 --> 00:12:25,203
சீக்கிரம்! சீக்கிரம்!

94
00:12:28,415 --> 00:12:29,374
சாரா. சாரா.

95
00:12:45,515 --> 00:12:47,476
எனக்காக நேரம் எடுத்து திரும்ப
அழைத்ததுக்கு நன்றி.

96
00:12:47,559 --> 00:12:49,436
என்னிடம் சுவாரஸ்யமான செய்தி
 ஒன்று இருக்கு.

97
00:12:49,519 --> 00:12:51,563
கீழே சமுயல் எடிக்கியை
 பார்க்க சென்றேன்,

98
00:12:51,646 --> 00:12:53,773
அந்த எபோலா நோயாளி குறியீட்டை
 உனக்கு அனுப்பியிருந்தோமே.

99
00:12:53,857 --> 00:12:54,774
எபோலா மதிப்பீட்டு தளம்

100
00:12:54,858 --> 00:12:56,568
ஆர்-விஎஸ்வி தடுப்பூசி அவனுக்கு
வேலை செய்யவில்லை.

101
00:12:56,651 --> 00:12:59,821
ஆமாம், அதுல அர்த்தம் இருக்கு.
அவனுக்கு இருப்பது இவிடி-27

102
00:12:59,905 --> 00:13:02,199
தடுப்பு மருந்தை இவிடி-27 மீறும்.

103
00:13:02,282 --> 00:13:04,993
மிகச் சரி. அவனுக்கு இவிடி-27 எப்படி
 வந்ததுன்னு நீ யோசிச்சா...

104
00:13:05,076 --> 00:13:07,829
அதுவும் அவன் அந்த நோயாளிகள்
தொகுதியிலயே இல்லாத போது,

105
00:13:07,913 --> 00:13:09,206
அதற்கும், என்னிடம் பதில் இருக்கு.

106
00:13:09,289 --> 00:13:10,290
என்ன ஆச்சு?

107
00:13:10,373 --> 00:13:13,835
கடைசியாக ஏற்பட்ட கொள்ளை நோய் பரவலின்
போது, சமுயலின் மாமா தான்,

108
00:13:13,919 --> 00:13:19,466
இவிடி-27ல் பலியானோர் புதைத்த
உலக சுகாதார நிறுவன இடுகாடு காவலாளி.

109
00:13:19,883 --> 00:13:23,512
பின்னர், ஆறு மாதத்துக்கு முன், இரண்டு
வெளிநாட்டவர்கள் வந்திருக்கின்றனர்.

110
00:13:23,595 --> 00:13:28,308
பிணத்தை தோண்டி எடுக்க உதவினால்
500 டாலர் கொடுப்பதாக சொல்லியுள்ளனர்.

111
00:13:28,391 --> 00:13:32,562
மாமா தயங்கி இருக்கார். ஆனால், உனக்கு,
இங்கு 500 டாலர்களின் மதிப்பு தெரியும்.

112
00:13:32,646 --> 00:13:35,065
அதனால் சமுயல், அவருக்கு பதிலாக
உள்ளே குதித்தான்.

113
00:13:35,565 --> 00:13:37,776
பொறு, "வெளிநாட்டவர்கள்"
அப்படினு யாரை சொல்லறான்?

114
00:13:37,859 --> 00:13:39,986
தெரியலை. இரண்டு மத்திய கிழக்கு ஆட்கள்.

115
00:13:40,695 --> 00:13:41,738
கடவுளே!

116
00:13:42,614 --> 00:13:44,366
எதுக்காக அவர்களுக்கு அந்த பிணம்?

117
00:13:45,742 --> 00:13:47,118
எனக்கு தெரியலை.

118
00:13:47,202 --> 00:13:50,121
இதை கட்டுப்படுத்துவதில்
குறியாக இருக்கிறேன்.

119
00:13:52,874 --> 00:13:55,252
-நன்றி ஷான்.
-அதை கண்டுபிடித்ததுக்கு நன்றி.

120
00:13:55,335 --> 00:13:56,962
-பின்னர் பேசுகிறேன்.
-சியர்ஸ்.

121
00:14:11,935 --> 00:14:13,770
பொருள்

122
00:14:15,814 --> 00:14:17,524
அவசரம், தேவை

123
00:14:18,775 --> 00:14:21,069
உடனடி மறு ஆய்வு:

124
00:14:22,654 --> 00:14:27,284
சாத்தியமான கட்டுப்பாட்டு மீறல்

125
00:14:29,327 --> 00:14:30,912
இவிடி-27

126
00:14:31,037 --> 00:14:33,290
எபோலா

127
00:14:48,305 --> 00:14:50,432
சாதாரணமா இருக்க முயற்சி செய்,
தெரிஞ்சு செய்யற மாதிரி.

128
00:14:50,515 --> 00:14:52,601
-என்ன செய்யறேன்னு எனக்கு தெரியும்.
-அதை உன் முகத்திடம் சொல்லு.

129
00:15:13,955 --> 00:15:15,290
காத்திருக்கணும்.

130
00:15:54,913 --> 00:15:55,747
பின்னால வாங்க.

131
00:16:07,425 --> 00:16:09,177
ஓ, லான்ஸ்.

132
00:16:09,719 --> 00:16:10,887
டோனி.

133
00:16:13,306 --> 00:16:15,016
நான் சொன்ன ஆள் இவன்தான்.

134
00:16:15,100 --> 00:16:18,186
-நான் டோனி.
-ஜிம். இது ஜாக்.

135
00:16:20,397 --> 00:16:21,773
மகிழ்ச்சி.

136
00:16:21,856 --> 00:16:23,108
-உங்களுக்கு இது போதுமா?
-ஆமாம்.

137
00:16:23,191 --> 00:16:24,484
நான் கிளம்பறேன். வேணும்னா கூப்பிடுங்க.

138
00:16:24,567 --> 00:16:25,610
சரி.

139
00:16:28,321 --> 00:16:29,989
தயவு செய்து, உட்காருங்க.

140
00:16:32,784 --> 00:16:33,827
வரவேற்கிறேன்.

141
00:16:36,204 --> 00:16:37,330
நன்றி.

142
00:16:53,972 --> 00:16:54,889
சுவையா இருக்கு.

143
00:16:54,973 --> 00:16:56,141
நாம கண்டுபிக்க வேண்டிய பெண்,

144
00:16:56,224 --> 00:16:58,977
அவளும் அவள் மகள்களும் ஹாசாவுக்கு
வெளியே உள்ள முகாமில் தங்கியவர்கள்.

145
00:16:59,060 --> 00:17:02,522
நேற்று இரவு கடத்தப்பட்டனர்.
இப்போ எங்கிருக்காங்கனு தெரியணும்.

146
00:17:07,777 --> 00:17:09,571
உங்க நண்பர் வேலையிலயே
குறியாய் இருக்கிறார்.

147
00:17:15,785 --> 00:17:18,788
முகாமில் இருந்து அகதிகள் கடத்தி
செல்பவர்களை எனக்கு தெரியும்.

148
00:17:18,872 --> 00:17:20,915
நிறைய இளம் பெண்களை சந்திப்பார்கள்.

149
00:17:20,999 --> 00:17:25,044
அதில் சிலர் என்னிடம் வருவார்கள்,
எதிர்காலத்துக்கு சம்பாரிக்க.

150
00:17:25,670 --> 00:17:29,382
கண்டிப்பா, உன் தகவலுக்கு
பணம் கொடுப்போம்.

151
00:17:32,135 --> 00:17:34,012
கடற்கரைக்கு கடத்திட்டு போவாங்க.

152
00:17:34,804 --> 00:17:38,641
முன்பைக் காட்டிலும் மிக சிரமம்.
அனேகமா படகு திருப்பி அனுப்பப் படும்.

153
00:17:38,725 --> 00:17:41,352
அதனால ரொம்ப தூரம் போகணும்.
சில பேர் அல்பேனியா போவார்கள்.

154
00:17:41,436 --> 00:17:42,896
வட இத்தாலி.

155
00:17:43,021 --> 00:17:44,314
க்ரோயேஷியா.

156
00:17:45,106 --> 00:17:46,983
-மிக கடினமான பயணம், நான்...
-எங்கே?

157
00:17:47,317 --> 00:17:49,527
எந்த கரை ஓரத்தில்
இருந்து கிளம்புவார்கள்?

158
00:17:51,488 --> 00:17:53,990
இது சுற்றுலா கப்பல்
வாயில் இல்லை, நண்பரே.

159
00:17:54,741 --> 00:17:56,576
இரண்டு வாரத்துக்கு ஒருமுறை
மாறிக்கிட்டே இருக்கும்.

160
00:17:56,659 --> 00:17:59,078
போலீசை தவிர்க்கணும் இல்லை
லஞ்சம் கொடுக்கணும்.

161
00:17:59,162 --> 00:18:00,246
அது மலிவானதும் இல்லை.

162
00:18:00,371 --> 00:18:02,791
எங்கே இருக்காங்க இப்போ? இன்று?

163
00:18:10,173 --> 00:18:11,591
என்னால் போன் பண்ணி கேட்க முடியும்.

164
00:18:21,476 --> 00:18:22,977
இப்போ பத்தாயிரம் கொடுக்கிறேன்.

165
00:18:23,436 --> 00:18:25,104
பெண்ணை கண்டு பிடித்தவுடன்
மேலும் பத்தாயிரம்.

166
00:18:28,858 --> 00:18:30,318
இருபத்தி-அஞ்சாயிரம் இப்போ.

167
00:18:30,443 --> 00:18:32,779
மேலும் இருபத்தி-அஞ்சாயிரம்
பெண்ணை கண்டுபிடித்தவுடன்.

168
00:18:39,619 --> 00:18:41,204
பதினைஞ்சாயிரம் இப்போ.

169
00:18:42,330 --> 00:18:45,083
இருபதாயிரம் பெண்ணை அழைத்து வந்த பின்.

170
00:18:50,964 --> 00:18:52,006
சரி.

171
00:19:13,611 --> 00:19:15,154
ஒரு நிமிஷம் கொடுங்க.
பின்னர் கிளம்பலாம்.

172
00:19:15,780 --> 00:19:19,033
நாம் உங்க வண்டியை எடுத்துக்கலாம்.
சிறந்த வண்டிகளாய் இருக்கும்.

173
00:19:23,997 --> 00:19:25,623
இதற்கு வேறு ஏதாவது வழி இருக்கும்.

174
00:19:25,748 --> 00:19:27,166
வேறு எப்படி, பீபாடி?

175
00:19:27,250 --> 00:19:29,002
துருக்கி போலீஸிடம் போகலாம்.

176
00:19:29,502 --> 00:19:30,420
ஓ, ஆமாம்.

177
00:19:30,503 --> 00:19:34,257
"ஹே, நாங்க இருவரும் அமெரிக்கப்
புலனாய்வு சிஐஏ அதிகாரிகள்.

178
00:19:34,340 --> 00:19:36,801
"நீங்கள் எங்களுக்காக உங்கள் சட்டவிரோத
கள்ளக் கடத்தல்கும்பலிடம் மாட்டிய...

179
00:19:36,885 --> 00:19:40,054
"ஒரு பெண்ணை கண்டு பிடிக்க முடியுமா?
அதான் கண்டுக்காம இருக்க...

180
00:19:40,138 --> 00:19:41,764
"லஞ்சம் வாங்கிக் கொண்டீர்களே அவர்கள்.

181
00:19:41,848 --> 00:19:45,059
அடடே, முக்கியமாக அவள் படகு ஏறும்
முன்பு கண்டுபிடிச்சாகணும்."

182
00:19:45,560 --> 00:19:47,186
ஒருவேளை அது அப்படி
ஆகாமலும் இருக்கலாம்.

183
00:19:47,270 --> 00:19:49,939
ஒருவேளை மூக்கு வரை சகதியில் மூழ்கலாம்.

184
00:19:51,316 --> 00:19:53,234
இப்போ சும்மா பேசாமல் கூட வா.

185
00:19:54,193 --> 00:19:55,778
பார்த்து கற்றுக்கொள்.

186
00:19:57,655 --> 00:19:58,698
சரியா?

187
00:20:25,516 --> 00:20:28,895
ஐஸிஸ் ஆட்களை கவனிச்சிருக்கீங்களா?
டொயோட்டாதான் ஓட்டுவாங்க. இது போல்.

188
00:20:28,978 --> 00:20:30,939
மத்த வண்டிகளையும் எடுப்பாங்க.

189
00:20:31,022 --> 00:20:34,442
அதை திருடுவாங்க, விப்பாங்க, பின்
டொயோட்டா தான் வாங்குவாங்க.

190
00:20:34,525 --> 00:20:37,028
ஒரு சிறந்த தயாரிப்பு இருந்தா
இப்படி தான் நடக்கும்.

191
00:20:37,528 --> 00:20:39,113
இரண்டு பக்கத்திலும் பணம் பண்ணலாம்.

192
00:20:39,197 --> 00:20:42,450
அவங்க வண்டிகள் தண்டம். எங்களுக்கு
அதை விட சிறந்தவை இருக்கு.

193
00:20:42,533 --> 00:20:45,411
ஆமாம், இருக்கலாம். ஆனால் நீங்க அதற்கு
பத்து மடங்கு அதிக விலை கொடுக்கணும்.

194
00:20:49,457 --> 00:20:52,085
அமெரிக்கா. எனக்கு அமெரிக்கா ரொம்ப
பிடிக்கும். எங்கிருந்து வர்றீங்க?

195
00:20:52,627 --> 00:20:53,878
சின்சினாட்டி.

196
00:20:57,840 --> 00:20:58,925
அது ஒரு நகரம்.

197
00:21:01,594 --> 00:21:04,222
பின், நீங்கள் நண்பரே,
எங்கிருந்து வர்றீங்க?

198
00:21:04,305 --> 00:21:06,015
நான் எங்கிருந்து வர்றேன்னு
நீ கவலைப்படாதே.

199
00:21:11,521 --> 00:21:13,272
உங்களுக்கு என்னை பிடிக்கலை போல.

200
00:21:13,356 --> 00:21:16,109
நீங்க நல்லவர் நான் கெட்டவன்னு
நினைக்கறீங்க போல.

201
00:21:16,693 --> 00:21:17,986
ஒருவேளை நீங்க சரியா கூட இருக்கலாம்.

202
00:21:19,195 --> 00:21:23,449
ஆனால் நானும் அமெரிக்காவில் ஒரு நல்ல
நகரத்தில் பிறந்திருந்தால்,

203
00:21:23,574 --> 00:21:25,034
சின்சினாட்டியை போல,

204
00:21:27,328 --> 00:21:28,913
நானும், நல்லவனா இருந்திருப்பேன்.

205
00:21:30,623 --> 00:21:32,792
புவியியல் நம் தலைவிதி, என் நண்பரே.

206
00:21:32,875 --> 00:21:35,003
உலகம் சூளை, நாம் களிமண்.

207
00:21:35,378 --> 00:21:37,296
ஆஹா, நான் அதை எழுதி வெச்சுக்கிறேன்.

208
00:22:03,072 --> 00:22:06,159
பெட்ரோல் நிரப்பும் நிறுத்தத்தில் ஒரு
சம்பவம் நடந்துள்ளது.

209
00:22:06,242 --> 00:22:09,454
கடற்கரைக்கு போகும் முன். நீங்கள்
தேடும் பெண் சம்மந்தப்பட்டிருக்கலாம்.

210
00:22:10,663 --> 00:22:13,041
-இப்போ அங்கே போயிருவோம்.
-போகலாம்.

211
00:22:54,874 --> 00:22:55,917
ஒரு நிமிஷம்.

212
00:23:01,714 --> 00:23:03,549
நீ என்ன செய்யறதா நினைச்சு
தொலைக்கறீங்கன்னு தெரியல,

213
00:23:03,633 --> 00:23:05,760
இவ்வளவு இறுக்கமா உக்காந்துட்டு வராத.

214
00:23:05,843 --> 00:23:08,805
இந்த ஆள் நமக்கு தேவை. அதனால
அமைதியா கம்முனு உட்காரு.

215
00:23:22,527 --> 00:23:23,861
உங்க கிட்ட படம் இருக்கா?

216
00:23:33,996 --> 00:23:34,997
நிச்சயமா.

217
00:23:44,173 --> 00:23:45,967
அவள்தான் மகள்களுடன் இங்கிருந்தாள்.

218
00:23:46,050 --> 00:23:49,303
எங்கிருந்தோ ஒருத்தன் வந்து அவங்களை
கழிவறைக்குள் பின்தொடர்ந்தான்.

219
00:23:49,387 --> 00:23:50,805
உங்க பெண் அவனை தாக்கினாள்.

220
00:23:51,222 --> 00:23:53,683
-அவள் குழந்தைகளுடன் ஓடி விட்டாள்.
-தாக்கினாள்னா என்ன அர்த்தம்?

221
00:23:53,766 --> 00:23:56,435
ஒரு பாறாங்கல்லை எடுத்து
அவன் தலையில் அடித்து விட்டாள்.

222
00:23:56,519 --> 00:23:58,563
அவன் கழிவுக் குழிக்குள் விழுந்தான்.

223
00:24:00,898 --> 00:24:03,651
சுலைமான் கண்டிப்பாக உள்ளூர்க்காரனை
வெச்சு தன் மனைவியை தேட மாட்டான்.

224
00:24:03,734 --> 00:24:06,112
குழியில் விழுந்தவன், என்ன ஆனான்?

225
00:24:06,904 --> 00:24:09,282
தன்னை சுத்தப்படுத்திகிட்டு
கடற்கரைக்கு போயிருக்கான்.

226
00:24:09,365 --> 00:24:10,366
சே.

227
00:24:12,785 --> 00:24:16,289
எனக்கு குறுக்கு பாதை தெரியும், ஆனால்
அவளை கண்டுபிடிக்க இப்பவே போயாகணும்,

228
00:24:16,372 --> 00:24:18,374
-படகு கிளம்பும் முன்.
-போகலாம்.

229
00:24:57,955 --> 00:24:59,373
என் கால் வலிக்குது.

230
00:24:59,457 --> 00:25:01,459
எனக்கும் தான் கண்ணே...

231
00:25:01,542 --> 00:25:03,169
ஆனால் நாம
 நடந்துக்கிட்டேதான் இருக்கணும்.

232
00:25:05,588 --> 00:25:07,215
சோர்வாக இருக்கிறாள்.

233
00:25:09,133 --> 00:25:12,470
இருட்டாகும் முன்பு
 கடற்கரைக்கு போயாகணும்.

234
00:25:12,553 --> 00:25:14,764
தயவு செய்து. இன்னும் கொஞ்சம்
 கிலோமீட்டர்கள்தான் இருக்கு.

235
00:25:14,847 --> 00:25:17,892
அதைதான் ஏற்கனவே சொன்னீங்க.
 உங்களுக்கு எப்படி தெரியும்?

236
00:25:17,975 --> 00:25:20,394
நாம் படகுகளை அடைந்து விட்டால்...

237
00:25:20,478 --> 00:25:22,021
நம் பிரச்னை தீர்ந்துவிடும்.

238
00:25:28,027 --> 00:25:29,445
அப்பா இங்கு இருந்திருக்க விரும்பறேன்.

239
00:25:29,528 --> 00:25:30,696
நம்மை பத்திரமா வெச்சிருப்பார்.

240
00:25:32,114 --> 00:25:33,282
உங்க அப்பாவா?

241
00:25:34,742 --> 00:25:36,911
நான்தான் உங்களை
பத்திரமா வெச்சிருக்கிறேன்.

242
00:25:37,036 --> 00:25:39,288
இது கஷ்டம்னு நினைக்கறியா?

243
00:25:39,372 --> 00:25:41,207
கஷ்டம்னா என்னனு தெரியுமா உனக்கு!

244
00:25:42,166 --> 00:25:43,751
ஒருநாள், நீ பெரியவள் ஆகும் போது...

245
00:25:43,834 --> 00:25:45,753
உன்னை எதிலிருந்து
 காப்பாத்தினேனு புரிஞ்சுப்பே!

246
00:25:46,295 --> 00:25:49,298
இப்போ, வாங்க! போகலாம்! நடங்க!

247
00:26:23,165 --> 00:26:25,001
இந்த கதவை புதுசா வெச்சிருக்காங்கனு
உறுதியா சொல்லறேன்.

248
00:26:25,084 --> 00:26:26,335
வேற ஏதாவது வழி இருக்கா?

249
00:26:27,503 --> 00:26:31,632
அப்பெண்ணை துரத்தறவனுக்கு முன்னால
கடற்கரைக்கு போகணும்னா வேற வழி இல்லே.

250
00:26:34,385 --> 00:26:35,469
காரிலயே இருங்க.

251
00:26:40,308 --> 00:26:41,726
நான் இதை கவனிச்சுக்கறேன்.

252
00:26:42,643 --> 00:26:46,063
இந்த இடத்துக்கு சொந்தக்காரனை தெரியும்.
அவன் காவலாளிகளுக்கு பணம் தேவை போல.

253
00:27:05,374 --> 00:27:07,043
இது உங்களுக்கு தப்பா தெரியுதா?

254
00:27:07,460 --> 00:27:09,045
சொல்ல முடியலை.

255
00:27:10,546 --> 00:27:12,631
நம்மகிட்ட இன்னும் பணம்
கறக்க பார்க்கிறான்.

256
00:27:12,757 --> 00:27:13,799
ஆமாம்.

257
00:27:15,051 --> 00:27:16,385
அதனால் இன்னும் கொடுப்போம்.

258
00:27:40,368 --> 00:27:41,952
என்ன நடந்துச்சு இங்கே?

259
00:27:42,036 --> 00:27:43,996
-என்னை சுடப் பார்த்தாங்க.
-எதுக்கு?

260
00:27:44,080 --> 00:27:45,289
அவங்களுக்கு காசு வேண்டும்.

261
00:27:45,414 --> 00:27:47,208
-அப்போ, ஏன் கொடுக்கலை?
-கொடுக்கத்தான் முயன்றேன்.

262
00:27:47,291 --> 00:27:49,502
நியாயமான தொகையை
ஒத்துக்க மாட்டார்களாம்!

263
00:27:49,585 --> 00:27:52,588
அநியாயமான தொகையை கொடுக்க என்னை
கட்டாயப்படுத்த முடியாது.

264
00:27:52,671 --> 00:27:55,716
"அநியாயமான தொகை"?
நாம ஏன் இன்னும் இவனோட போகிறோம்?

265
00:27:57,635 --> 00:28:00,554
அந்த பெண்களை கண்டு பிடிக்கணுமா?
உங்களுக்கு நான் தேவை. டோனி.

266
00:28:00,638 --> 00:28:02,807
இல்லை, சில வாரங்கள் பொறுங்க.

267
00:28:02,890 --> 00:28:05,726
ஏதாவது ஒண்ணு என் கொட்டகைக்கு வரும்.

268
00:28:11,023 --> 00:28:13,734
ஜாக், ஜாக்! விடு!

269
00:28:13,818 --> 00:28:16,904
ஜாக்! இந்த கண்ராவியை நிறுத்து! ஹே!

270
00:28:18,781 --> 00:28:22,034
ஜாக்! இந்த கண்ராவியை நிறுத்து!

271
00:28:22,118 --> 00:28:24,161
என்ன செய்துட்டு இருக்கீங்க?

272
00:28:24,245 --> 00:28:26,205
நிறுத்துங்க! நிறுத்துங்க
இந்த கண்ராவியை!

273
00:28:26,705 --> 00:28:28,833
நான் யாரு? டோனி அஹ்மட் டிமிர்!

274
00:28:31,168 --> 00:28:34,797
கற்பழிப்பவனா இருப்பது பத்தாதுன்னு
இப்போ கொலைகாரன் வேறயா?

275
00:28:35,256 --> 00:28:37,591
-இதில் அர்த்தமே இல்லை.
-உனக்கு தெளிவு படுத்துகிறேன்.

276
00:28:37,675 --> 00:28:40,010
இது நம்ம இடம் இல்ல.
உள்ளூர்காரனின் துணை இல்லாமல்...

277
00:28:40,094 --> 00:28:43,431
இங்கு எதுவும் நடக்காது.
அந்த மனைவி நமக்கு இப்போ தேவை.

278
00:28:43,514 --> 00:28:46,767
அதுதான் நம் நோக்கம். அதை உன்
மரமண்டையில் ஏற்றிக்கொள்.

279
00:28:46,851 --> 00:28:48,727
எதுக்கு வந்தமோ அந்த வேலையை
மட்டும் செய்வோம்.

280
00:28:51,856 --> 00:28:55,776
அப்பறம் நீ! மரியாதையா வண்டில ஏறு,
வேலைய செய்து முடிப்போம்.

281
00:28:57,862 --> 00:29:00,573
-கதவின் சாவி.
-வா!

282
00:29:01,115 --> 00:29:03,367
சரி. கதவின் சாவி.

283
00:29:07,621 --> 00:29:10,249
அல் பாப், சிரியா

284
00:29:19,717 --> 00:29:20,801
நன்றி.

285
00:30:21,278 --> 00:30:22,696
நான் உங்கள் மகனை கொன்று விட்டேன்.

286
00:30:27,576 --> 00:30:29,203
நான் உங்கள் மகனை கொன்று விட்டேன்.

287
00:30:32,915 --> 00:30:34,750
மேல் இருந்து.

288
00:30:36,252 --> 00:30:37,086
வானத்தில் இருந்து.

289
00:30:55,312 --> 00:30:56,355
நான்தான்.

290
00:33:27,297 --> 00:33:28,465
இது--

291
00:34:34,323 --> 00:34:36,742
வாங்கணுமா? வாங்கணுமா?

292
00:34:42,706 --> 00:34:45,209
ஆமாம். ஆமாம்.

293
00:34:45,751 --> 00:34:47,252
ஆமாம். ஆமாம்.

294
00:34:47,961 --> 00:34:50,923
அனைத்து முட்டைகளையும்
வாங்க ஆசைப்படுகிறேன்.

295
00:35:00,140 --> 00:35:01,308
நன்றி.

296
00:35:09,233 --> 00:35:10,526
உங்கள் மகன்...

297
00:35:27,125 --> 00:35:28,418
மன்னிச்சுக்கோங்க.

298
00:37:56,149 --> 00:37:57,109
சாரா.

299
00:38:48,618 --> 00:38:49,995
சொல்லு, யஜீத்.

300
00:38:50,078 --> 00:38:52,581
துருக்கி கடற்கரையில் ஒரு அகதிகள்
 முகாமில் அவர்களை கண்டு பிடிச்சிட்டேன்.

301
00:38:54,499 --> 00:38:56,043
நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க?

302
00:38:58,211 --> 00:39:00,047
என் மகள்களை திரும்ப வீட்டுக்கு
 அழைச்சிட்டு வா.

303
00:39:01,173 --> 00:39:02,174
உங்க மனைவி?

304
00:39:10,307 --> 00:39:11,433
ஷேக்?

305
00:39:15,520 --> 00:39:17,272
அவங்களை பார்க்க விடாதே.

306
00:39:19,316 --> 00:39:20,358
சரி, ஷேக்.

307
00:40:17,124 --> 00:40:18,667
எனக்கு உங்கள் தலைவனை பார்க்கணும்.

308
00:41:31,281 --> 00:41:32,407
கிரீயர்.

309
00:41:44,544 --> 00:41:45,462
துப்பாக்கிகளை கீழ போடுங்க!

310
00:41:45,545 --> 00:41:47,214
இங்க என்ன நடக்குது?

311
00:41:47,297 --> 00:41:48,131
அமைதி. அமைதி.

312
00:41:48,215 --> 00:41:49,132
அவங்க துப்பாக்கிய போடட்டும்!

313
00:41:49,216 --> 00:41:51,551
உங்க ஆயுதங்களை கீழ போடுங்க!
உங்க ஆயுதங்களை கீழ போடுங்க!

314
00:42:00,352 --> 00:42:01,770
யாரோட விளையாடறீங்கன்னு தெரியுமா?

315
00:42:01,853 --> 00:42:03,939
நான் எந்த குடும்பம்னு தெரியுமா?

316
00:42:04,022 --> 00:42:05,232
தெரியும்.

317
00:42:05,315 --> 00:42:07,609
எனக்கு இந்த பெண்ணும் அவள்
 குழந்தைகளும் வேண்டும்.

318
00:42:07,817 --> 00:42:09,569
அவன் எனக்கு ஏற்கனவே
 காசு கொடுத்துட்டான்.

319
00:42:09,653 --> 00:42:11,363
கொடுத்த வார்த்தையை மீற முடியாது.

320
00:42:15,533 --> 00:42:18,745
எவனோ ஒருத்தனுக்காக என் குடும்பத்தை
 பகைச்சிக்க போறியா?

321
00:42:18,828 --> 00:42:20,830
அற்ப காசுக்காக என்னிடம் மோதாதே.

322
00:42:22,123 --> 00:42:24,251
தேவையானது கிடைக்காமல் இங்கிருந்து
 திரும்பி போனால்...

323
00:42:25,001 --> 00:42:26,753
நான் அதை மறக்க மாட்டேன்.

324
00:43:04,541 --> 00:43:06,501
அந்த பெண்ணை கொடுப்பார்கள், ஆனால்
குழந்தைகளை அல்ல.

325
00:43:06,584 --> 00:43:07,460
முடியாது.

326
00:43:21,766 --> 00:43:22,600
சரி.

327
00:43:24,352 --> 00:43:25,353
என்ன பண்ணறீங்க?

328
00:43:25,645 --> 00:43:28,064
உன்னை சுடுவதற்கு முன்னாடி
துப்பாக்கியை கீழ போடு.

329
00:43:28,857 --> 00:43:31,234
குழந்தைகளை பிரித்து விட்டால் அவள்
நமக்கு உதவப் போவதில்லை!

330
00:43:31,318 --> 00:43:32,402
உன் ஆயுதத்தை கீழ போடு.

331
00:43:56,343 --> 00:43:58,011
வேண்டாம்! இதை செய்யாதீங்க!

332
00:44:00,430 --> 00:44:01,639
எனக்கு உதவுங்க!

333
00:44:09,314 --> 00:44:12,025
என்ன பண்ணறீங்க?
உங்க ஆயுதத்தை கீழ போடுங்க!

334
00:44:15,820 --> 00:44:18,823
அமைதி. அமைதி. ஆயுதத்தை கீழ போடுங்க.

335
00:44:27,457 --> 00:44:31,044
அமைதி. அனைவரும் நண்பர்கள்.
அனைவரும் நண்பர்கள்.

336
00:45:09,416 --> 00:45:11,626
எங்க கூட வாங்க. பத்திரமான
 இடத்துக்கு போகலாம்.

337
00:45:31,813 --> 00:45:33,606
சரி. அதுக்குள்ள அங்க இருப்போம்.

338
00:45:36,651 --> 00:45:39,195
இன்சிர்லிக்கில் நமக்கு
விமானம் காத்திருக்கிறது.

339
00:45:39,487 --> 00:45:40,989
அனைவரும் வண்டியில் ஏறுங்க.

340
00:45:44,284 --> 00:45:45,869
நீதான் பணம் கொடுப்பவன்.

341
00:45:47,036 --> 00:45:48,204
அவனிடம் கொடு.

342
00:46:12,479 --> 00:46:13,938
அந்த பெண்ணுடன் அதிர்ஷ்டம் வரட்டும்.

343
00:46:19,444 --> 00:46:20,612
வந்தனம், சின்சினாட்டி.

344
00:46:58,233 --> 00:47:01,653
இன்சிர்லிக் விமானத் தளம்
அடானா, துருக்கி

345
00:47:18,294 --> 00:47:20,922
ஹே, உங்களுக்கு சில கேம்கள்
கொண்டு வந்துள்ளேன்.

346
00:47:21,339 --> 00:47:22,966
-பரவில்லையா?
-சரி.

347
00:47:23,675 --> 00:47:25,218
-நல்லது.
-சரி.

348
00:47:27,637 --> 00:47:28,972
எப்படி விளையாடுவதுனு காமிக்கறேன்.

349
00:47:29,931 --> 00:47:31,683
நாம் கொஞ்சம் தனியா பேசலாமா?

350
00:47:40,316 --> 00:47:41,568
நீ ஆங்கிலம் பேசற.

351
00:47:42,485 --> 00:47:44,320
என் மாமா கற்று கொடுத்தார்.

352
00:47:45,238 --> 00:47:50,285
டமாஸ்கஸில் அயல்நாட்டு வியாபாரியிடம்
ஓட்டுனராக இருந்தார்.

353
00:47:51,703 --> 00:47:53,079
முன்னொரு காலத்தில்...

354
00:47:54,956 --> 00:47:56,165
இதுக்கு எல்லாம் முன்பு.

355
00:47:57,166 --> 00:47:58,710
ஹனின், உன்னிடம் ஒன்று சொல்லணும்.

356
00:48:00,003 --> 00:48:02,046
நீங்க யுஎஸ் போக அனுமதி கொடுத்தாச்சு.

357
00:48:03,381 --> 00:48:08,011
ஆனால் எனக்கு உதவி செய்யலைன்னா நீயும்
உன் மகள்களும் அங்கு தங்க முடியாது.

358
00:48:09,304 --> 00:48:10,513
எப்படி உதவணும்?

359
00:48:11,055 --> 00:48:13,516
உன் கணவனின் திட்டங்கள்
எனக்கு தெரியணும்.

360
00:48:15,810 --> 00:48:17,103
எனக்கு தெரியாது.

361
00:48:27,530 --> 00:48:28,573
அவன் மாறிவிட்டான்.

362
00:48:34,495 --> 00:48:37,040
அவன் அப்படி செய்ததை பத்தி
எனக்கு தெரியவே இல்லை.

363
00:48:37,123 --> 00:48:38,458
நான் உன்னை நம்பறேன்.

364
00:48:39,667 --> 00:48:43,588
எனக்கு உதவினால் அது போல் சம்பவம்
திரும்பவும் நடக்காமல் பார்த்துக்கலாம்.

365
00:48:44,756 --> 00:48:48,051
-அவன் திட்டங்கள் எதுவும் தெரியாது.
-ஆனால் அவன் இருக்குமிடம் தெரியுமே.

366
00:48:59,145 --> 00:49:01,064
நீ வெறும் சுட்டி
காமிக்க வேண்டியதுதான்.

367
00:49:16,537 --> 00:49:18,998
நீ சமீரை பத்தி கவலைப்படுவது சரிதான்.

368
00:49:21,918 --> 00:49:24,045
அவனை நீ விட்டுட்டு வந்தது தெரியும்.

369
00:49:26,005 --> 00:49:28,424
-வர வேண்டிய கட்டாயம் ஆனது.
-தெரியும் அதான் வந்துட்ட.

370
00:49:29,550 --> 00:49:32,011
என்னால முடிஞ்ச அத்தனையும் செய்வேன்
அவனை உன்னிடம் கொண்டு வர,

371
00:49:32,095 --> 00:49:34,597
ஆனால் அவன் எங்க இருக்கான்னு
நீ காமிக்கணும்.

372
00:49:38,309 --> 00:49:39,894
நான் எல்லாத்தையும் தொலைச்சிட்டேன்.

373
00:49:45,149 --> 00:49:46,651
இவர்களை தவிர எல்லாத்தையும்.

374
00:49:56,577 --> 00:49:57,787
என் மகன்...

375
00:50:01,332 --> 00:50:03,751
நீங்க கூட்டிட்டு
வருவீங்கன்னு உறுதியளிக்கணும்.

376
00:50:06,045 --> 00:50:07,213
உறுதியா சொல்லுங்க.

377
00:50:09,549 --> 00:50:10,925
என்னால் அது முடியாது.

378
00:50:12,468 --> 00:50:13,636
உனக்கே தெரியும் அது முடியாதுனு.

379
00:50:15,221 --> 00:50:17,223
ஆனால் நான்தான் உனக்கு கிடைத்த
சிறந்த வாய்ப்பு.

380
00:50:18,474 --> 00:50:20,393
அதை என்னால் உறுதியா சொல்ல முடியும்.

381
00:50:40,747 --> 00:50:43,708
கிடைச்சிருச்சு. அவன்
இருக்குமிடம் கிடைச்சிருச்சு.

382
00:50:43,791 --> 00:50:45,585
நல்லது. உட்காரு.

383
00:51:02,602 --> 00:51:04,771
கராச்சியில் எனக்கு என்ன
நடந்ததுன்னு தெரியணுமா?

384
00:51:12,195 --> 00:51:13,946
ஒரு முக்கிய ஆதாரத்தை
தொடர்ந்து கொண்டிருந்தேன்.

385
00:51:15,239 --> 00:51:19,494
அவன் பாகிஸ்தான் ராணுவத்தில்
துணைத் தலைவன்.

386
00:51:19,577 --> 00:51:22,497
அவனை நம் வழிக்கு கொண்டு வந்தால்
நமக்கு மிக பெரிய அனுகூலம்.

387
00:51:23,998 --> 00:51:25,833
கதையே மாறி விடும்.

388
00:51:28,127 --> 00:51:29,587
அனைத்தும் சரியாக சென்றது.

389
00:51:31,339 --> 00:51:34,300
எல்லாம் கூடி வந்தது. அவனுக்கு
பணக் கஷ்டம் இருந்தது எனக்கு தெரியும்,

390
00:51:34,383 --> 00:51:38,054
நல்ல மண வாழ்க்கை இல்லை.
அதனால் ஒரு டீ கடையில் சந்தித்தோம்.

391
00:51:38,262 --> 00:51:39,430
யாருக்கும் தெரியாமல் ரகசியமாக.

392
00:51:42,850 --> 00:51:46,562
ஆனால் அவன் குட்டி போட்ட பூனை
மாதிரியே இருந்தான்,

393
00:51:48,147 --> 00:51:52,485
திடீருனு பேசும் போதே மனசு மாறிட்டான்.

394
00:51:52,819 --> 00:51:55,071
என்னோடு வேலை செய்ய
இஷ்டமில்லாதது மட்டுமல்லாமல்,

395
00:51:55,154 --> 00:51:59,283
பாகிஸ்தான் சிறையில் என்னை அடைக்க
நினைத்தான். நான் பத்து வருஷம் அங்கு...

396
00:52:01,452 --> 00:52:04,497
கழிக்க வேண்டும், கொடுமைப் படுத்தியோ
அடித்து சாகடிக்காமலோ இருந்தால்.

397
00:52:08,543 --> 00:52:09,919
அதனால்...

398
00:52:14,340 --> 00:52:15,675
அவனை குத்திட்டேன்.

399
00:52:18,594 --> 00:52:20,596
யாரும் பார்ப்பதற்கு முன்னர்
அங்கிருந்து வெளியேறினேன்.

400
00:52:20,680 --> 00:52:22,515
அவன் மேஜையிலயே இறந்துட்டான்.

401
00:52:24,809 --> 00:52:26,936
அவன் மகள் திருமணத்திற்கு
மூன்று நாட்கள் முன்.

402
00:52:31,065 --> 00:52:33,442
அதை தவிர இன்னும்
நான்கு குழந்தைகள் அவனுக்கு...

403
00:52:45,079 --> 00:52:48,416
இன்று வரை, அதைப் பற்றி
நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.

404
00:52:49,542 --> 00:52:51,669
வேறு எதையாவது நான் சொல்லியிருக்கணுமா?

405
00:52:56,299 --> 00:53:00,261
பாகிஸ்தானியர் அவன் மாரடைப்பில்
இறந்ததாக கூறினாலும், தனிப்பட்டதாக,

406
00:53:00,344 --> 00:53:03,055
நம் அரசாங்கத்திடம், கோவம் கொண்டனர்.

407
00:53:03,264 --> 00:53:06,183
ஏழாவது மாடியில் இருக்கும்
சிலருக்கும் கோபம்.

408
00:53:08,019 --> 00:53:10,479
நான் அகலக் கால் வைத்துவிட்டேன்.

409
00:53:11,939 --> 00:53:13,482
பெரிய ஆபத்தை விலை கொடுத்து வாங்கினேன்.

410
00:53:14,108 --> 00:53:16,819
அதனால் என்னை தலைமையகத்துக்கு
திரும்ப அழைச்சுகிட்டாங்க.

411
00:53:21,157 --> 00:53:25,202
இந்த வேலையில் விட்டு கொடுக்காமல்
இருக்கவே முடியாது.

412
00:53:26,329 --> 00:53:28,623
அதுவும் ஏதாவது முக்கியமானதை
செய்யணும்னு நினைக்கும் போது.

413
00:53:30,917 --> 00:53:32,293
என்னால நம்பவே முடியல.

414
00:53:36,714 --> 00:53:38,716
அது போல் விட்டுக் கொடுக்காமல்...

415
00:53:40,343 --> 00:53:43,012
நம்மால் வித்தியாசத்தை உருவாக்க
முடியும்னு நான் நம்பறேன்.

416
00:53:45,932 --> 00:53:47,141
நீ அப்படி நினைப்பது எனக்கு தெரியும்.

417
00:53:47,892 --> 00:53:49,644
ஏன்னா, ஒருகாலத்தில்,

418
00:53:50,978 --> 00:53:53,606
நானும் அதே மாதிரி பைத்தியக்காரத்தனமா
நம்பிக் கொண்டிருந்தேன்.

