1
00:00:06,966 --> 00:00:09,927
டாம் கிளான்ஸியின்
ஜாக் ரயன்

2
00:01:32,176 --> 00:01:34,929
முன்னூற்றி ஆறு பேர் இறந்தார்கள்
 என உறுதி செய்யப்பட்டுள்ளது.

3
00:01:35,012 --> 00:01:38,808
அப்பாவி பாரிஸியர்கள் மீதான
 இந்த ஆணவம் மிக்க நாசகார...

4
00:01:43,103 --> 00:01:47,566
தாக்குதலுக்கு, லெபனானில் பிறந்த
 சிரியா நாட்டவனான...

5
00:01:47,650 --> 00:01:50,027
மூஸா பின் சுலைமான்
 சொந்தம் கொண்டாடுகிறான்.

6
00:01:50,110 --> 00:01:52,655
இன்று காலை, அவன் பின்வரும்
 வீடியோவை வெளியிட்டான்.

7
00:01:53,322 --> 00:01:56,367
நான் குழந்தைகள், பெண்களின்
 மரணத்திற்காக வருந்துகிறேன்.

8
00:01:57,076 --> 00:01:59,620
எங்கள் குழந்தைகள் தினம் இறக்கிறார்கள்.

9
00:02:01,705 --> 00:02:04,583
பாரிஸ் வெறும் ஆரம்பம்தான்.

10
00:02:12,007 --> 00:02:13,884
இந்த விடீயோக்களை
இப்போது வெளிட்டிருக்கிறான்.

11
00:02:14,301 --> 00:02:17,179
சாமர்த்தியமானது. அதிநவீன பிரச்சாரம்.

12
00:02:19,473 --> 00:02:21,058
உங்கள் அனைத்து
 முஸ்லிம் வேர்களுக்கும்...

13
00:02:21,141 --> 00:02:22,685
ஊக்கமுள்ள ஜிகாதி இளைஞர்களுக்கும்.

14
00:02:23,853 --> 00:02:25,896
...நாம் நிச்சயமாக...

15
00:02:26,564 --> 00:02:27,648
இந்த யுத்தத்தை...

16
00:02:27,731 --> 00:02:29,525
எழவு இசை விடியோ வேறு.

17
00:02:29,608 --> 00:02:32,528
...நம் தேசத்தில் இருந்து அவர்களது
 தேசத்துக்கு விரிவாக்க வேண்டும்.

18
00:02:34,405 --> 00:02:37,491
இறுதியாக, உலகின் அனைத்து முஸ்லிம்களை
ஆயுதங்கள் ஏந்த கோருகிறேன்.

19
00:02:37,575 --> 00:02:39,243
கடவுளின் பெயரால்...

20
00:02:40,995 --> 00:02:42,955
அனைத்து முஸ்லிம்களுக்கும்...

21
00:02:43,330 --> 00:02:44,665
பழங்குடியினருக்கும்...

22
00:02:44,748 --> 00:02:45,833
ஆனால் அவன் முஸ்லிம் இல்லை.

23
00:02:46,750 --> 00:02:48,419
...உங்கள் நம்பிக்கைக்கும்...

24
00:02:48,502 --> 00:02:51,422
-அவன் ஒரு கேடுகெட்ட மன நோயாளி.
-இல்ல. அப்படி நம்ப வைக்க முயல்கிறான்.

25
00:02:52,006 --> 00:02:54,884
அப்போதான் உணர்வு பூர்வமா
எதிர் விளைவு இருக்கும்.

26
00:03:24,121 --> 00:03:25,873
நான், அவனை நிறுத்தி இருக்கலாம்.

27
00:03:26,498 --> 00:03:27,541
ஓ, நிஜமாவா?

28
00:03:28,959 --> 00:03:30,544
உன் சட்டைக்குள் சூப்பர்மேன்
ஒளிந்து இருக்கானா?

29
00:03:30,628 --> 00:03:31,545
அவன் தம்பி,

30
00:03:32,463 --> 00:03:34,715
அலி சுலைமான், வெறும் பண மாற்றத்துக்காக
பாரிஸ் வரலை.

31
00:03:34,798 --> 00:03:36,550
இதுக்காகத்தான் பாரிஸ் வந்திருக்கான்.

32
00:03:38,802 --> 00:03:40,471
அவனுக்கு நடக்கப் போவது தெரிஞ்சுருக்கு.

33
00:03:41,722 --> 00:03:42,973
இடமும் தெரிஞ்சுருக்கு.

34
00:03:45,225 --> 00:03:46,894
நான் மட்டும் அவனை
சுடாமல் இருந்திருந்தால்...

35
00:03:54,276 --> 00:03:57,529
எஃப்பிஐயில் உள்ள என் நண்பன்
ஒரு கதையை சொன்னான்.

36
00:03:58,238 --> 00:03:59,740
9/11க்கு பின்,

37
00:04:00,783 --> 00:04:04,244
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பணியாளன்
ஒருவன் எஃப்பிஐ துப்பு துறையிடம்...

38
00:04:04,328 --> 00:04:05,704
சென்று சரண் அடைந்தான்.

39
00:04:06,205 --> 00:04:08,916
தாக்குதல் நடந்த காலையில் டல்லாஸ் விமான
நிலையத்தில் பணியாற்றி,

40
00:04:09,833 --> 00:04:12,544
டிக்கெட்டுகளை சோதித்து எப்பவும்
போல் வேலை செய்தவன்.

41
00:04:13,337 --> 00:04:17,341
இந்த இரண்டு மத்திய-கிழக்கு பேர்வழிகள்
வரிசை வழியாக வந்தனர்.

42
00:04:17,424 --> 00:04:19,843
அவர்கள் போர்டிங் பாஸ்களை கொடுக்க,
இவன் சோதித்து...

43
00:04:19,927 --> 00:04:21,595
உள்ளே வழியனுப்பினான்.

44
00:04:22,846 --> 00:04:24,348
அவர்கள் நடக்கையில்,

45
00:04:26,183 --> 00:04:29,061
ஷூக்களை பார்க்க நேரிட்டது,

46
00:04:31,105 --> 00:04:32,815
அது மலிவானதாக தெரியுது.

47
00:04:35,025 --> 00:04:36,235
தேஞ்சு போனதாக இருக்கு.

48
00:04:37,319 --> 00:04:40,072
அந்த முதல் வகுப்பு டிக்கெட்டுக்கும்,
புதிய மடிப்பு கலையாத காலர் சட்டை,

49
00:04:40,155 --> 00:04:42,533
காக்கி கால் சட்டைகளுக்கும்
பொருத்தமே இல்லை.

50
00:04:44,451 --> 00:04:47,663
ஒரு மணி நேரம் கழித்து அந்த ஆட்கள்
அந்த 757 போயிங்கை...

51
00:04:47,746 --> 00:04:49,748
பென்டகனின் ஒரு பகுதி
மேல் மோதினார்கள்.

52
00:05:01,135 --> 00:05:04,471
கடத்தல்காரர்கள விமானத்தில் விட்டதுக்கு
தன்னை குற்றம் சாட்டிகிட்டான்.

53
00:05:04,555 --> 00:05:06,140
ஆனால் என்ன செய்திருக்க முடியும்?

54
00:05:06,682 --> 00:05:09,476
விமானநிலைய காவலாளிகளை கூப்பிட்டு
இருக்கணுமா அழுக்கு ஷூவுக்கு? முடியாது.

55
00:05:09,560 --> 00:05:11,186
அது அறிவுக்கு மாறாக இருந்திருக்கும்.

56
00:05:12,187 --> 00:05:13,939
அப்புறம் நீ...

57
00:05:15,941 --> 00:05:17,609
இதற்காக உன்னையே
குற்றம் சாட்டிக்கொள்வது,

58
00:05:21,071 --> 00:05:22,239
அதுவும் அறிவுக்கு மாறானதே.

59
00:05:28,787 --> 00:05:30,748
தன்னையே வழிபடும் போக்கு என்று
சொல்ல முடியாத பட்சத்தில்.

60
00:05:56,982 --> 00:06:01,070
ஸ்யுக்மா தங்கும் வளாகம்
நிஸிப், துருக்கி

61
00:06:33,477 --> 00:06:34,478
ஹலோ.

62
00:06:34,561 --> 00:06:35,521
ஹலோ.

63
00:06:36,146 --> 00:06:37,231
பெயர்?

64
00:06:38,774 --> 00:06:39,942
ஹனின் அப்துல்லா.

65
00:06:43,904 --> 00:06:45,989
உங்கள் குழந்தைகளின் பெயர், வயது?

66
00:06:46,073 --> 00:06:49,701
ரமாவுக்கு 10,
 சாராவுக்கு 14, அப்புறம்...

67
00:06:49,952 --> 00:06:51,203
வேறு யாராவது இருக்காங்களா?

68
00:06:52,287 --> 00:06:53,372
என் மகன்.

69
00:06:53,705 --> 00:06:54,581
எங்கே அவன்.

70
00:06:54,665 --> 00:06:55,582
என்னுடன் இப்போ இல்லை.

71
00:06:56,041 --> 00:06:57,334
அவனை விட்டுட்டு வர வேண்டியதாச்சு.

72
00:06:57,417 --> 00:07:00,295
ஒரு நிலைக்கு வந்தபின்
 அவனை கூட்டிட்டு வர பார்ப்பேன்.

73
00:07:00,379 --> 00:07:02,548
எங்க போகலாம்னு இருக்கீங்க?

74
00:07:03,757 --> 00:07:05,717
ஐரோப்பாவுக்கு போகலாம்னு இருக்கோம்.

75
00:07:06,468 --> 00:07:07,302
பொறுங்க.

76
00:07:10,681 --> 00:07:12,891
நீங்க போகப்போகும் ஒரே இடம் சிரியாதான்.

77
00:07:13,392 --> 00:07:15,310
தயவுசெய்து! எங்கள் உயிருக்கு
 உத்திரவாதம் இல்லை...

78
00:07:15,394 --> 00:07:19,690
துருக்கி இனி அகதிகளை ஏற்றுக் கொள்ளாது.

79
00:07:19,773 --> 00:07:21,316
அதுவும் பாரிஸ் சம்பவத்துக்கு பின்.

80
00:07:21,400 --> 00:07:24,486
பாரிஸா? என்ன சொல்லறீங்க?

81
00:07:28,407 --> 00:07:30,951
இதுதான் உங்கள் கூடார ஒதுக்கீடு.

82
00:07:31,952 --> 00:07:32,786
வாங்க போகலாம்.

83
00:07:33,203 --> 00:07:34,496
அடுத்தது!

84
00:07:58,395 --> 00:08:01,523
உங்கள் வீட்டிற்கு
 திரும்புமாறு அழைக்கிறேன்...

85
00:08:02,774 --> 00:08:05,152
என் அனைத்து சகோதர சகோதரிகளையும்.

86
00:08:06,195 --> 00:08:08,572
உங்கள் உணர்வுகளுக்கு திரும்பி வாங்க.

87
00:08:10,365 --> 00:08:12,743
உங்க வீட்டுக்கு திரும்புங்க.

88
00:08:27,090 --> 00:08:30,135
தீவிரவாத விஷ வாயு தாக்குதலில் பாரிஸ்
தேவாலயத்தில் நூற்றுக்கணக்கில் கொலை.

89
00:08:35,515 --> 00:08:37,976
பாரிஸ் தேவாலயம் வெளியே பாதிரியார் கொலை

90
00:08:44,441 --> 00:08:46,318
-அவன் இதை ஏற்பாடு செய்திருக்கான்.
-கதவை தட்டுவதில்லையா?

91
00:08:46,401 --> 00:08:47,527
அவன் இதை ஏற்பாடு செய்திருக்கான்.

92
00:08:48,362 --> 00:08:49,613
அவன் எதை ஏற்பாடு செய்திருக்கான்?

93
00:08:49,696 --> 00:08:52,449
கத்தோலிக்க பாதிரியாரின் இறுதி சேவையின்
போது தேவாலயத்தை தாக்கினர்.

94
00:08:52,532 --> 00:08:55,911
மூன்று நாள் முன்பு
குத்திக் கொல்லப் பட்டவர் அவர்.

95
00:08:59,414 --> 00:09:00,415
சரி. விவரமாக சொல்.

96
00:09:00,874 --> 00:09:02,626
தாக்குதல் ஒரு வார நாளில் நடந்தது.

97
00:09:02,709 --> 00:09:03,919
தேவாலயம் காலியாக
இருந்திருக்க வேண்டியது.

98
00:09:04,002 --> 00:09:07,631
எப்படி அவனுக்கு அங்கு மத்த பாதிரிகளும்
முக்கிய ஆட்களும் இருப்பது தெரியும்?

99
00:09:07,714 --> 00:09:09,967
அவன் இலக்கை ஆராய்ச்சி செய்திருக்கான்.

100
00:09:10,050 --> 00:09:13,095
அந்த பாதிரியாரை கொன்னால் விளைவு
என்னனு தெரிஞ்சு செய்திருக்கான்.

101
00:09:18,600 --> 00:09:21,019
ஆல் மனாஜீர், சிரியா

102
00:09:33,156 --> 00:09:37,869
ஷேக், துயதேவ்வும் அவன் ஆட்களும்
 உங்க ஆணைக்காக காத்திருக்காங்க.

103
00:09:37,953 --> 00:09:40,372
என் ஆணை அதேதான்.

104
00:09:40,914 --> 00:09:44,084
நேத்து என்னவோ அதேதான்,
 எதுவும் மாறவில்லை.

105
00:09:45,168 --> 00:09:49,381
அவர்கள் சந்தித்து தெற்கே
 இத்தாலிக்கு சேர்ந்து போவாங்க.

106
00:09:49,464 --> 00:09:53,176
அதாவது வெறும்...
 கொஞ்சம் படபடப்பா இருக்காங்க.

107
00:09:53,260 --> 00:09:54,177
காலம் தாமதமாக--

108
00:09:54,261 --> 00:09:56,763
என் தம்பிக்கு காத்திருக்கலாம்.

109
00:09:56,847 --> 00:09:58,390
புரிஞ்சுதா?

110
00:10:06,815 --> 00:10:09,901
என் மனைவி, மகள்கள் பத்தி ஏதாவது
 விஷயம் தெரிஞ்சுதா?

111
00:10:10,402 --> 00:10:13,238
இன்னும் யஜீத் திரும்பி வரல.

112
00:10:23,123 --> 00:10:24,249
சகோதரா!

113
00:10:27,169 --> 00:10:28,795
இங்கே வா.

114
00:10:35,135 --> 00:10:37,596
நீ அல் ரத்வானின் ஆள்தானே.

115
00:10:38,347 --> 00:10:40,098
அப்படித்தான் இருந்தேன், ஷேக் சுலைமான்.

116
00:10:40,891 --> 00:10:42,768
ஆனால் நான் உங்களுடன்
 இருப்பதற்காக பெருமைப் படுகிறேன்.

117
00:10:43,435 --> 00:10:46,563
நீ கடைசியா சுத்தமான
 ஆடை எப்போ உடுத்தினே?

118
00:10:48,940 --> 00:10:51,193
என்னிடம் இருப்பது இது மட்டும்தான்.

119
00:10:53,820 --> 00:10:58,533
இங்கு தண்ணீர் இருக்கு... உன்னையும் உன்
 துணிகளையும் சுத்தப்படுத்த.

120
00:11:00,118 --> 00:11:01,411
உன் பெயர் என்ன?

121
00:11:02,287 --> 00:11:03,288
இஸ்மாயில்.

122
00:11:03,872 --> 00:11:05,332
எங்கிருந்து வர்ற?

123
00:11:07,125 --> 00:11:09,086
ட்யுனிஸில் இருந்து, ஷேக்.

124
00:11:09,544 --> 00:11:11,505
கவனி, டியுனிஸை சேர்ந்த இஸ்மாயில்.

125
00:11:12,798 --> 00:11:15,342
ஏழ்மை நிறைய உன்னிடம்
 திருடிக் கொள்ளும்.

126
00:11:16,051 --> 00:11:21,306
ஆனால், அது உன் சுயமரியாதைய
 திருட விடவே கூடாது.

127
00:11:22,015 --> 00:11:25,936
உன்னை நீ மதிக்கலைனா
 அடுத்தவங்க உன்னை மதிக்க மாட்டாங்க.

128
00:11:26,561 --> 00:11:27,813
போய் குளி.

129
00:11:28,397 --> 00:11:30,399
இந்த ஆளுக்கு என் துணிகள்
 சிலவற்றை கொடு.

130
00:11:30,482 --> 00:11:31,817
சரி, ஐயா.

131
00:11:32,275 --> 00:11:34,611
நன்றி. கடவுள் உங்களை
 ஆசிர்வதிக்கட்டும். ஷேக்.

132
00:11:35,153 --> 00:11:36,863
கடவுள் உன்னோடு இருக்கட்டும்.

133
00:11:53,338 --> 00:11:56,174
பாரிஸ், பிரான்ஸ் - 2001

134
00:12:14,693 --> 00:12:15,944
மிஷெல்?

135
00:12:17,779 --> 00:12:18,822
மூஸா சுலைமான்.

136
00:12:20,073 --> 00:12:22,325
நாமிருவரும் கிரெடிட் ஸ்விஸில்
 ஒன்றாக பயிற்சி பெற்றோம்.

137
00:12:22,409 --> 00:12:23,535
மூஸா.

138
00:12:28,290 --> 00:12:30,250
எடுத்த உடனே கவரணும், சரியா?

139
00:12:46,850 --> 00:12:47,684
நன்றி.

140
00:12:48,602 --> 00:12:50,479
இல்லை, தயவு செய்து நீயே வெச்சுக்கோ.

141
00:12:56,526 --> 00:12:58,195
மூவ்ஸ்ஸா.

142
00:12:59,196 --> 00:13:00,739
சரியா உச்சரிக்கிறேனா?

143
00:13:00,822 --> 00:13:01,865
மூஸா.

144
00:13:06,578 --> 00:13:07,579
மூஸா.

145
00:13:08,413 --> 00:13:09,706
தயை செய்து என்னுடன் வா.

146
00:13:12,667 --> 00:13:17,631
டிஜிடல் வங்கியியல் பத்தியும்
 உலகப் பொருளாதாரத்தில் அதன்...

147
00:13:17,714 --> 00:13:20,425
விளைவையும் பத்தி
 நீ ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருக்கே.

148
00:13:20,509 --> 00:13:21,718
மிகச் சரி.

149
00:13:21,801 --> 00:13:22,886
அதைப் பற்றி சொல்.

150
00:13:24,930 --> 00:13:26,598
உலகப் பொருளாதாரத்தில்,

151
00:13:26,681 --> 00:13:28,225
நாளைய வங்கியாளர்கள்...

152
00:13:28,308 --> 00:13:32,187
லாவகமாகவும் வேகமாகவும் இருக்கணும்.

153
00:13:32,854 --> 00:13:35,774
டிஜிட்டல் வங்கியியல்...

154
00:13:35,857 --> 00:13:38,151
மற்றும் மின்னணு பரிமாற்றங்கள்...

155
00:13:38,235 --> 00:13:39,945
மட்டுமே எதிர்கால வங்கியியல்.

156
00:13:40,487 --> 00:13:42,697
எனது ஆய்வு, தொழிநுட்பமானது திறம்பட
 எப்படி இத்துறையில் திறமையுடன்...

157
00:13:42,781 --> 00:13:46,076
மாற்றங்களை திருத்தி அமைக்க முடியும்
 என்ற பல வழிகளைக் காட்டுது.

158
00:13:46,201 --> 00:13:48,078
உங்களைப் போல ஒரு வங்கி...

159
00:13:48,453 --> 00:13:50,664
இதைப் போன்ற மாற்றத்தின்
 ஒரு முன்னோடியா இருந்து...

160
00:13:50,747 --> 00:13:56,127
வணிகத்தின் பெரும்
 பகுதியை கைக்கொள்ளலாம்.

161
00:13:58,129 --> 00:14:00,674
அமைப்பையே மாற்றுவதற்கு பதில்,

162
00:14:00,757 --> 00:14:03,009
அதன் வரையரைகளுக்குள்
 பணியாற்றுமாறு உற்சாகப்படுத்துவேன்.

163
00:14:04,803 --> 00:14:06,721
உறவுகளும் நம்பிக்கையும்தான்...

164
00:14:07,472 --> 00:14:09,516
எங்களது செயல்பாடுகளை
செல்லத் தக்கதாக்கும் அடிப்படைகளாக...

165
00:14:09,599 --> 00:14:11,434
கடந்த 260 வருடங்களுக்கும் மேலாக
 இருந்து வந்துள்ளன.

166
00:14:11,518 --> 00:14:12,644
தயவுசெய்து நான்--

167
00:14:12,727 --> 00:14:16,314
அது போல் நம்பிக்கையை
 கணினியால் வளர்த்த முடியாது.

168
00:14:30,745 --> 00:14:32,539
சிஐஏ தலைமையகம்
லேங்லி, வர்ஜினியா

169
00:14:32,706 --> 00:14:34,749
தாக்குதல் நடந்த இடம், பாரிஸில்
உருகுவே தூதரகம் இருக்கும்...

170
00:14:34,833 --> 00:14:37,127
தெருவில் இருக்கிறது.

171
00:14:37,502 --> 00:14:40,171
அவர்கள் பாதுகாப்பு சிசிடிவி இதை
படம் பிடித்திருக்கிறது.

172
00:14:40,255 --> 00:14:43,258
கிழக்கு ஐரோப்பாவின் நிர்வாக வேலையில்
இருப்பவர்களுக்கு இவன தெரிஞ்சிருக்கும்,

173
00:14:43,341 --> 00:14:45,510
அன்சோர் துதாயவ், "செச்செனியன்."

174
00:14:45,594 --> 00:14:47,304
சோவியத்-செச்சென் போரில்
முதலில் திறமையை பெற்றவன்.

175
00:14:47,387 --> 00:14:50,098
வெடிமருந்துகள் மற்றும் இரசாயன
ஆயுதங்களில் மிகவும் திறமையானவன்.

176
00:14:50,181 --> 00:14:53,435
அமெரிக்க கவச தளவாடங்களை கிழித்து வீசிய
"துளைத்து வெடித்த குண்டுகளை"...

177
00:14:53,518 --> 00:14:57,147
அறிமுகம் செய்த துதாயவுக்கு, இராக்கிய
அனுபவசாலிகள் நன்றி சொல்வார்கள்.

178
00:14:57,272 --> 00:15:01,109
இன்னொரு தெரிந்த முகம் ஜபீர் சரீப்,

179
00:15:01,276 --> 00:15:04,321
ஆப்கான் பாதுகாப்பு துறையின் முன்னாள்
புலனாய்வு அதிகாரியாக இருந்தவன்.

180
00:15:04,487 --> 00:15:06,823
மற்றும் ஒருவனை,
கண்டு பிடிக்கப் பார்க்கிறோம்,

181
00:15:06,948 --> 00:15:09,409
அதற்காக பிரெஞ்சு உள்நாட்டு புலனாய்வு
துறையுடன் ஆய்வு செய்கிறோம்.

182
00:15:10,368 --> 00:15:11,453
சார்.

183
00:15:13,788 --> 00:15:17,125
தாக்கும் அமைப்பு மூன்று ரஷியன்
பீரங்கி குண்டுகள்.

184
00:15:17,208 --> 00:15:21,004
சிரியா படைக்கு வழங்கப்பட்டு,
பின் அரசு இருப்பில் திருடியிருக்கலாம்.

185
00:15:21,129 --> 00:15:23,173
தந்திரமா குண்டின் மேல் பகுதியை
வெடிக்கும் முனையாக்கியுள்ளனர்.

186
00:15:23,256 --> 00:15:26,843
விரிசல் விட்டு விஷ வாயு கசிய
தொடங்கும் அளவுக்கு வெடித்தது.

187
00:15:27,552 --> 00:15:32,432
கடவுளின் பரிசே, இதில் அமெரிக்காவிற்கு
நான் நேரடி அச்சுறுத்தலைக் காணவில்லை.

188
00:15:32,515 --> 00:15:35,935
எனவே, பிரெஞ்சே இதை கையாள
ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கப் போகிறேன்.

189
00:15:36,019 --> 00:15:39,064
-சரி, நான்--
-திரு செயலரே, தப்பாக நினைக்க வேண்டாம்,

190
00:15:39,147 --> 00:15:41,983
மேற்கு அவன் எதிரி என்பதை
தெளிவாக தெரிவித்து உள்ளான்.

191
00:15:42,067 --> 00:15:44,027
அமெரிக்க வீரர்களை யேமனில் கொன்றான்.

192
00:15:44,778 --> 00:15:47,364
அந்த தேவாலயத்தில் இறந்த
27 பேர் அமெரிக்கர்கள்.

193
00:15:48,990 --> 00:15:51,326
இது ஒரு பிரஞ்சு சிக்கல் அல்ல.
இது உலக பிரச்சினை.

194
00:15:52,035 --> 00:15:53,453
யாரப்பா நீ?

195
00:15:53,953 --> 00:15:54,954
நான் ஜிம் கிரீயர்.

196
00:15:55,038 --> 00:15:57,499
இதை பத்தி கேட்டிங்கனா இந்த
துறையில் 16 வருடம் இருந்திருக்கிறேன்.

197
00:15:57,582 --> 00:16:01,586
என்னுடன் பணியாற்றுபவர் சொல்வது
என்னனா திரு செயலர் அவர்களே,

198
00:16:02,379 --> 00:16:06,549
இதைப் பற்றி பிரச்சாரம்
செய்வது முக்கியமாகிவிட்டது.

199
00:16:07,300 --> 00:16:09,219
சரி கடவுளின் பரிசே. சொல்லு,

200
00:16:09,761 --> 00:16:12,013
நம்மை பாதிக்காத வகையில்,

201
00:16:12,722 --> 00:16:14,808
எப்படித்தான் இதை செய்வது?

202
00:16:14,891 --> 00:16:17,686
அது, நாம் வெளிநாட்டு கூட்டாளிகளுடன்
ஒருங்கிணைய வேண்டும்.

203
00:16:17,769 --> 00:16:21,731
ஆமாம். ஆனால் அமெரிக்கா ஒரு
முக்கிய பங்கு வகிக்கும்.

204
00:16:21,815 --> 00:16:22,774
அந்த கேம் இதோ.

205
00:16:33,326 --> 00:16:35,870
நாங்க பாரிஸில் இருந்த போது அவன்
உரையாடலை கண்டுபிடித்தோம்,

206
00:16:35,954 --> 00:16:38,623
சுலைமானுக்கும் அவன் தம்பி
அலிக்கும் இடையிலானது.

207
00:16:38,748 --> 00:16:44,003
ஒரு வீடியோ கேமின் ஆன் லைன் தகவல்
பரிமாற்ற வசதியில் செய்தி பரிமாறினர்.

208
00:16:44,170 --> 00:16:47,173
பாரிஸை விட்டு வெளியேறினால், உதவுவதாக
சுலைமான் அலியிடம் சொன்னான்.

209
00:16:48,758 --> 00:16:51,636
நாம் அதே வீடியோ கேமை பயன்படுத்தினால்
சுலைமானிடம் தொடர்பு கொள்ளலாம்,

210
00:16:51,803 --> 00:16:54,431
நாம அலி மாதிரி நடிக்கலாம்.

211
00:16:55,265 --> 00:16:57,851
இந்த அறையில் உள்ளவர்களுக்கும் பிரெஞ்சு
உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள்,

212
00:16:57,934 --> 00:17:00,270
எங்களுடன் ஆல்ப்ஸில் இருந்தவர்களுக்கு
மட்டுமே அவன் இறந்தது தெரியும்.

213
00:17:00,395 --> 00:17:01,938
அவன் ஏன் இந்த ஆபத்தை
கையில் எடுக்கணும்?

214
00:17:03,565 --> 00:17:07,152
சார், அவன் பெற்றோர்கள் 1983ல் பெக்கா
பள்ளத்தாக்கில் கொல்லப்பட்டனர்.

215
00:17:07,235 --> 00:17:09,154
அவர்கள் பிரான்சிற்கு பெயர வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது.

216
00:17:09,237 --> 00:17:10,488
அவர்கள் கருணை இல்லங்களில் வளர்ந்தனர்.

217
00:17:10,572 --> 00:17:13,324
சுலைமானுக்கு இருக்கும் ஒரே குடும்பம்
அவன் தம்பி தான்.

218
00:17:13,408 --> 00:17:16,745
குறிப்பிட தேவையில்லை, தம்பி அண்ணனை
கோபால்ட்டில் காப்பாற்றினான்.

219
00:17:17,495 --> 00:17:20,290
குறைந்தபட்சம், அவனுக்காக
யாரையாவது அனுப்புவது நிச்சயம்.

220
00:17:20,373 --> 00:17:22,959
அதுதான் உன் திட்டமா?

221
00:17:23,835 --> 00:17:24,878
ஒரு வீடியோ கேமா?

222
00:17:25,336 --> 00:17:26,546
அதை விட நல்லதா உங்க கிட்ட இருக்கா?

223
00:17:30,216 --> 00:17:32,051
ஜனாதிபதியின் கருத்தை இயக்குனர்
தெரிந்து கொள்வது அவசியம்.

224
00:17:32,135 --> 00:17:34,429
ஆனால் கிடைச்சிருச்சுனு நினைச்சு நீ
வேலையை தொடரு. சரியா?

225
00:17:34,512 --> 00:17:36,514
-கூட்டம் முடிஞ்சிருச்சு.
-நன்றி, சார்.

226
00:17:37,849 --> 00:17:40,393
சென்-செயின்ட்-டினிஸ்
பாரிஸ், பிரான்ஸ்

227
00:17:41,352 --> 00:17:42,228
நண்பர்களே.

228
00:17:43,146 --> 00:17:44,063
வாங்க.

229
00:17:44,564 --> 00:17:45,482
பாருங்க!

230
00:17:54,240 --> 00:17:55,575
பாருங்க! கடவுள் கருணை உள்ளவர்.

231
00:17:56,659 --> 00:17:59,954
தேவாலயத்தில் குண்டு வைத்த
 தீவிரவாதியை, ஆல்ப்ஸில்...

232
00:18:03,124 --> 00:18:04,918
இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

233
00:18:05,335 --> 00:18:07,879
பாரிசியர்கள் அதிர்ச்சியில் உள்ளனனர்...

234
00:18:12,175 --> 00:18:13,551
நான் இங்கு நேர்ல
பார்த்துட்டு இருக்கேன்.

235
00:18:15,220 --> 00:18:17,931
தெருக்கள் முழுக்க போலீஸ் இருக்காங்க.

236
00:18:19,265 --> 00:18:21,518
ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்கும் ஒரு
சோதனைப் புள்ளி உள்ளது.

237
00:18:24,020 --> 00:18:26,481
சரி. சரி.
எனக்கு புரிந்தது. செய்கிறேன்.

238
00:18:27,482 --> 00:18:29,651
உன் உணர்ச்சிகள் பேசுது, மூளை இல்லை.

239
00:18:32,320 --> 00:18:35,240
கிரீச் விமானப்படை தளம்,
இண்டியன் ஸ்பிரிங்ஸ், நவேடா

240
00:18:37,951 --> 00:18:38,868
எப்படி நடக்குது, பாட்ஜர்?

241
00:18:42,247 --> 00:18:43,790
யோ, டூம் ஸ்டோன்.

242
00:18:46,501 --> 00:18:48,795
-என்ன பண்ணற?
-ஒண்ணுமில்ல.

243
00:18:49,879 --> 00:18:52,507
பழைய குண்டு வெடிப்பு மதிப்பீட்டு
இடத்தை பார்த்துகிட்டு இருந்தேன்.

244
00:18:58,805 --> 00:18:59,722
புது இலக்கு தளம்.

245
00:19:00,598 --> 00:19:01,474
நல்லது.

246
00:19:06,980 --> 00:19:08,648
-இல்லை. இது தப்பு.
-என்ன?

247
00:19:08,731 --> 00:19:10,900
இது. பழைய இலக்கு.

248
00:19:13,403 --> 00:19:16,614
வெஸ்பாவில் வந்த ஆள், ஞாபகமிருக்கா?

249
00:19:17,615 --> 00:19:18,992
அபு-அல்-ஷாபாஸ்.

250
00:19:20,410 --> 00:19:21,953
உன் கிட்ட சொல்லலையா?

251
00:19:22,078 --> 00:19:23,079
எதைச் சொல்லணும்?

252
00:19:24,455 --> 00:19:26,457
ஏதோ படைப்பிரிவு எஸ்-இரண்டாம் அதிகாரி
தவறு பண்ணிட்டாராம்.

253
00:19:27,709 --> 00:19:29,377
அந்த இலக்கு தப்பாக
அடையாளம் காணப்பட்டதாம்.

254
00:19:31,337 --> 00:19:33,715
பொறு. ஓ. "தப்பு அடையாளமா"?

255
00:19:34,799 --> 00:19:35,925
அப்படினா அவனில்லையா...

256
00:19:46,936 --> 00:19:48,104
அவனுக்கு ஒரு மகன் இருந்தான்.

257
00:19:51,107 --> 00:19:53,026
பாரு, அவன் இலக்கு இல்லை என்பதற்காக...

258
00:19:53,109 --> 00:19:54,903
நாளை அவன் மாற மாட்டான்
என்று அர்த்தமில்லை.

259
00:19:55,028 --> 00:19:58,823
நடைமுறையில் கிராமத்தில் இராணுவ-வயது
ஆண் அனைவர்க்கும் ஐஎஸ்ஐஎஸ் உறவு உண்டு.

260
00:20:07,874 --> 00:20:09,334
எல்லாம் நலம், பாட்ஜர்.

261
00:20:14,130 --> 00:20:16,716
ஹே, சரியா இருக்கையா?

262
00:20:18,217 --> 00:20:19,218
நான்...

263
00:20:22,180 --> 00:20:23,806
நான் ஒரு அப்பாவிய கொன்னுட்டேன்.

264
00:20:25,475 --> 00:20:28,686
உனக்கு கொடுத்த கட்டளையை நீ செய்தே.
இது உன் தவறு இல்லை.

265
00:20:30,521 --> 00:20:31,981
அப்போ, அது யார் தவறு?

266
00:20:34,484 --> 00:20:37,070
ஆ! நீங்க அம்மா மாதிரி செய்யல.

267
00:20:37,153 --> 00:20:39,906
முடிஞ்சுது, சரியா போச்சு.

268
00:20:40,031 --> 00:20:41,199
ஒரு நிமிஷம்.

269
00:20:44,661 --> 00:20:46,079
அழுத்து.

270
00:20:48,539 --> 00:20:49,666
சொல்லு, கண்ணே.

271
00:20:51,000 --> 00:20:53,336
அம்மாவும் என் சகோதரிகளும்
 எப்போ வருவாங்க?

272
00:20:54,212 --> 00:20:55,797
கண்டிப்பா, அவங்களை கண்டுபிடிக்கறேன்.

273
00:20:55,880 --> 00:20:57,131
கவலைப்படாதே.

274
00:20:57,924 --> 00:20:59,425
இங்கிருக்கான், ஷேக்.

275
00:21:03,554 --> 00:21:08,267
சமீர், உன் உணவை சாப்பிடு.
 எல்லாத்தையும்.

276
00:21:13,439 --> 00:21:15,358
அப்போ, நீதான் உங்க குழுவுக்கு தலைவனா?

277
00:21:15,942 --> 00:21:17,110
நான்தான்.

278
00:21:17,568 --> 00:21:18,820
டாக்டர் டேனியல் நாட்லர்.

279
00:21:23,282 --> 00:21:25,326
உங்க ஆளுங்க எப்படி இருக்காங்க?

280
00:21:27,829 --> 00:21:29,038
பயந்து போயிருக்காங்க.

281
00:21:29,706 --> 00:21:31,207
மருத்துவ ரீதியா கேட்டேன்.

282
00:21:33,001 --> 00:21:34,460
நீர்ப்போக்கு ஒரு பிரச்சனை.

283
00:21:35,294 --> 00:21:36,254
சத்துணவு.

284
00:21:47,432 --> 00:21:48,641
உங்களுக்கு என்ன வேணும்?

285
00:21:49,851 --> 00:21:52,562
நல்ல காத்து, நல்ல உணவு. உடற்பயிற்சி.

286
00:21:53,813 --> 00:21:57,942
குறிப்பாக ஆண்டிபயாடிக்குகள் தேவை,
அசெட்டமினோபன், அயோடின் மாத்திரைகள்...

287
00:21:58,901 --> 00:22:00,069
மற்றும் மல்டி-விட்டமின்கள்.

288
00:22:01,320 --> 00:22:06,034
தேவையானவற்றை பட்டியலிடு,
கண்டிப்பா கிடைக்கும்படி செய்யறேன்.

289
00:22:15,126 --> 00:22:17,045
எவ்வளவு காலமா உன் மகனுக்கு
நீரிழிவு நோய் இருக்கு?

290
00:22:17,962 --> 00:22:18,963
என்னது?

291
00:22:19,589 --> 00:22:21,507
நான் கேக்க காரணம் என்னனா,

292
00:22:21,591 --> 00:22:24,635
பிறவியில் இருந்து இருக்கும்
நீரிழிவு நோய் ஒரு அரிய வகை.

293
00:22:25,303 --> 00:22:28,765
அதற்கு சிகிச்சை எளியது.
மாத்திரை மூலமா சிகிச்சை இருக்கு.

294
00:22:29,307 --> 00:22:31,976
ஆட்சேபனை இல்லைனா, சில
சோதனைகள் செய்யத் தயார்.

295
00:22:34,729 --> 00:22:36,314
பெருந்தன்மையா இருக்க.

296
00:22:37,106 --> 00:22:38,107
நன்றி.

297
00:22:39,776 --> 00:22:43,905
பொறு. எங்களுக்கு
கடத்தல் காப்பீடு இருக்கு.

298
00:22:45,198 --> 00:22:48,868
அமெரிக்கர்களுக்கு பணம்தான் எல்லாம்.

299
00:22:51,120 --> 00:22:53,039
அப்போ உனக்கு எங்களிடம் இருந்து
என்ன வேணும்?

300
00:22:53,122 --> 00:22:55,333
டாக்டர், நீங்க கேட்ட
மருந்துகள் கிடைக்கும்.

301
00:23:06,636 --> 00:23:09,138
பெலுவிலு
பாரிஸ், பிரான்ஸ் - 2001

302
00:23:16,270 --> 00:23:17,438
ஹே, பபூன்!

303
00:23:29,325 --> 00:23:31,410
தெரியுமா, செம துப்பாக்கி சூடு!

304
00:23:33,454 --> 00:23:34,580
உன்னை கைது செய்யறோம், நாயே!

305
00:23:36,874 --> 00:23:39,335
ஒரு நாள், பின்னால சுடறேன் பாரு.

306
00:23:39,460 --> 00:23:41,170
உங்க மண்டைய உடைக்கிறேன் பார்!

307
00:23:41,462 --> 00:23:43,256
எதால் மண்டைய உடைப்பே.

308
00:23:43,381 --> 00:23:44,549
எதால்?

309
00:23:45,842 --> 00:23:47,552
சரி, சிரி, சிரி.

310
00:23:50,763 --> 00:23:51,931
இதால.

311
00:23:54,475 --> 00:23:55,518
எங்கே, பார்க்கிறேன்.

312
00:23:55,601 --> 00:23:56,561
நிறுத்து!

313
00:23:56,686 --> 00:23:57,728
இதை யார் உன்னிடம் கொடுத்தது?

314
00:23:58,521 --> 00:23:59,397
ஹலீம்.

315
00:24:00,356 --> 00:24:01,232
கேடுகெட்டவன்!

316
00:24:01,357 --> 00:24:02,567
ஏன் அவன் உன்கிட்ட இதை குடுக்கணும்?

317
00:24:02,692 --> 00:24:03,985
இது விளையாட்டுப் பொருள் இல்லை!

318
00:24:04,068 --> 00:24:06,070
உனக்கு ஒண்ணும் தெரியாது.

319
00:24:06,195 --> 00:24:08,072
நீ ஃபலேஃபல் போண்டா
 விக்கறதோட நிறுத்திக்கோ.

320
00:24:15,413 --> 00:24:17,582
நீ இங்க வரையறதுக்காகதான வருவே?

321
00:24:20,042 --> 00:24:22,420
திரும்பவும் அதை
 பண்ணலாம்னு நினைச்சதில்லயா?

322
00:24:25,965 --> 00:24:28,301
எது மாதிரி, சுற்றுலா பயணிகளை வரையறதா?

323
00:24:29,719 --> 00:24:32,138
எனக்கு எதுக்காக காசு வேணும்?

324
00:24:32,763 --> 00:24:37,310
நீதான் நம்மை இங்கிருந்து வெளியே
 கொண்டு போகணும்.

325
00:24:38,060 --> 00:24:39,687
என்னை அவங்க பார்க்கற
 விதத்தை நீ பார்க்கணும்,

326
00:24:39,770 --> 00:24:41,189
நேர்காணலுக்கு போகும்போது.

327
00:24:42,273 --> 00:24:47,778
என்னை பார்த்து, பெயரை கேட்டு, நான்
 எங்கிருக்கேனு தெரிஞ்சா போதும்.

328
00:24:49,030 --> 00:24:53,701
உட்காருவதற்கு முன்னாலேயே முடிஞ்சுடுது.
 நாய்களுக்கு பிறந்தவர்கள்.

329
00:24:58,456 --> 00:25:01,000
கிடைக்கும்னு நினைக்கணும்.

330
00:25:02,001 --> 00:25:05,379
வாழ்க்கைக்குள் அதைக் கொண்டு வர
 துணிய வேண்டும்.

331
00:25:08,549 --> 00:25:10,509
அந்தக் கருமத்தை எவ்வளவு
 புகை பிடிச்சிருக்க?

332
00:25:12,261 --> 00:25:16,349
உன் எதிர்காலம் மிக சிறப்பா
 இருக்கப்போகுது. அதை நீ நம்பணும்.

333
00:25:16,974 --> 00:25:19,894
அப்படி இல்லைனா, என் பிழைப்பு கெட்டது.

334
00:25:19,977 --> 00:25:22,647
நான் மேலங்கியை போட்டுட்டு ஃபலேஃபல்
 விக்கறதா இல்லை.

335
00:25:22,730 --> 00:25:24,357
எனக்குள் கௌரவம் இருக்கு.

336
00:25:32,657 --> 00:25:33,908
எந்திரிங்க.

337
00:25:34,992 --> 00:25:37,453
எந்திரிச்சு, கைகளை
 பார்க்கும்படி காமிங்க.

338
00:25:38,079 --> 00:25:39,121
செய்யுங்க!

339
00:25:41,207 --> 00:25:42,583
உனக்கு வாசம் வருதா?

340
00:25:42,750 --> 00:25:44,001
என்ன அது?

341
00:25:44,085 --> 00:25:45,336
நறுமணப் புகையா?

342
00:25:49,215 --> 00:25:51,300
இது உன்னுடையதா?

343
00:25:51,467 --> 00:25:53,970
அது என்னது? ஏதோ சொல்ல வந்தையே,
 முரட்டு பயலே?

344
00:25:54,845 --> 00:25:56,639
இல்லை, அவன் எதுவும் சொல்லலை.

345
00:25:56,764 --> 00:25:58,933
உன்னிடம் யாரும் பேசலை, முட்டாளே.

346
00:25:59,058 --> 00:26:00,351
சரி, கைய மேல தூக்கு.

347
00:26:00,476 --> 00:26:01,394
கைய மேல தூக்கு!

348
00:26:01,477 --> 00:26:02,603
செய்!

349
00:26:03,562 --> 00:26:04,647
இங்க என்ன நடக்குது?

350
00:26:12,238 --> 00:26:13,281
எங்காவது போய் குதி!

351
00:26:14,240 --> 00:26:15,241
அவனை விடு!

352
00:26:17,660 --> 00:26:18,536
துப்பாக்கி!

353
00:26:24,583 --> 00:26:25,668
ஓடு!

354
00:26:45,021 --> 00:26:47,898
எங்களிடம் இருக்கும் 200 பேருக்கு
தண்ணீர் வேண்டும். அனுப்ப...

355
00:26:47,982 --> 00:26:48,941
சரி, நன்றி.

356
00:26:54,155 --> 00:26:55,489
என்னால் ஆங்கிலம் பேச முடியும்.

357
00:26:56,907 --> 00:26:58,159
உங்களுக்கு நான் என்ன செய்யணும்?

358
00:26:59,035 --> 00:27:00,453
துருக்கிய விட்டு வெளியேறணும்.

359
00:27:00,578 --> 00:27:03,289
எனக்கும் என் மகள்களுக்கும். எங்களுக்கு
விசாக்கள் வேணும்.

360
00:27:04,332 --> 00:27:05,624
உங்க பெயரில் இருந்து ஆரம்பிக்கலாமா?

361
00:27:10,796 --> 00:27:12,673
"ஹனின் அப்துல்லா."

362
00:27:13,507 --> 00:27:15,092
கவனத்தை ஈர்க்க நான் விரும்பவில்லை.

363
00:27:15,176 --> 00:27:17,094
நான் இருக்குமிடம்
என் கணவருக்குத் தெரியாது.

364
00:27:17,261 --> 00:27:19,305
நாங்கள் அரசியல் தஞ்சம் கோருகிறோம்.

365
00:27:20,723 --> 00:27:23,225
விசாக்கள் கிடைப்பது ரொம்ப சிரமம்.

366
00:27:23,768 --> 00:27:25,770
சிறப்பு சூழ்நிலையில் சிலருக்காக
ஒதுக்கப்பட்டு உள்ளது,

367
00:27:25,895 --> 00:27:29,482
அல்லது முக்கிய தகவல் அமெரிக்க
அரசாங்கத்துக்கு தருபவர்க்கு மட்டுமே.

368
00:27:35,279 --> 00:27:36,364
என் கணவன்...

369
00:27:37,948 --> 00:27:39,492
மூஸா பின் சுலைமான்.

370
00:27:41,911 --> 00:27:43,287
பாரிஸ் தாக்குதல்?

371
00:27:44,330 --> 00:27:45,456
அந்த வீடியோ?

372
00:27:49,001 --> 00:27:50,628
அந்த ஆள்தான் என் கணவர்.

373
00:27:53,798 --> 00:27:56,967
உங்க கணவர் மூஸா பின் சுலைமானா?

374
00:27:57,051 --> 00:27:58,260
ஆமாம்.

375
00:27:59,845 --> 00:28:00,930
எனக்கு உதவ முடியுமா?

376
00:28:01,889 --> 00:28:03,349
உங்களிடம் அதற்கு ஏதாவது
ஆதாரம் இருக்கா?

377
00:28:03,432 --> 00:28:05,601
-இல்லை.
-இல்லையா. சரி.

378
00:28:06,477 --> 00:28:08,604
இப்போ உங்க கணவர் எங்கே இருக்கார்?

379
00:28:11,649 --> 00:28:12,942
என்னால் அதை சொல்ல முடியாது.

380
00:28:15,611 --> 00:28:17,279
என் மகன் இன்னும் அங்கிருக்கான்.

381
00:28:20,449 --> 00:28:22,326
என் மகனை ஆபத்தில் ஆழ்த்த முடியாது.

382
00:28:25,871 --> 00:28:27,873
குறிப்பிட்ட தகவலை கொடுக்கலைனா,

383
00:28:27,957 --> 00:28:29,959
நான் எப்படி உங்களை நம்புவது.

384
00:28:32,670 --> 00:28:34,755
மன்னிச்சுக்கோங்க. நான் இங்கு
வந்தே இருக்கக்கூடாது.

385
00:28:38,717 --> 00:28:39,885
உனக்கு ஒரு துப்பு கிடைச்சிருக்கு.

386
00:28:40,553 --> 00:28:42,930
ஒரு பெண் நம் நல்ல நண்பனுக்கு
மனைவினு சொல்லுகிறாள்.

387
00:28:43,597 --> 00:28:44,640
அவளிடம் ஆதாரம் இருக்கா?

388
00:28:45,433 --> 00:28:46,767
சொல்ல மறுக்கிறாள்.

389
00:28:46,851 --> 00:28:49,562
தன் மகனை காப்பாற்ற நினைக்கிறாள்.
அவன் இன்னும் தந்தையோடு இருக்கிறான்.

390
00:28:51,105 --> 00:28:52,606
சொன்னவனை உங்களுக்கு எப்படித் தெரியும்?

391
00:28:53,315 --> 00:28:55,151
சிஐஏயில் ஒன்றாக பயற்சி பெற்றோம்.

392
00:28:55,234 --> 00:28:57,528
வெளியுறவுத் துறையில்
 மறைவாக வேலை செய்பவன்,

393
00:28:57,611 --> 00:28:59,113
இப்போ அகதிகள் முகாமில்
புலன் சேகரிக்கிறான்.

394
00:28:59,655 --> 00:29:02,658
கேள். அவளை கண்டுபிடிக்க சொல்லு, சரியா?

395
00:29:02,741 --> 00:29:03,909
அவளை பேச வெக்கணும்.

396
00:29:04,577 --> 00:29:06,495
நீ எங்க இருக்க?
ஏதாவது ராட்சத லாரி ரேஸிலா?

397
00:29:06,787 --> 00:29:08,539
இல்லை, நான் ஒரு டேட்டில் இருக்கிறேன்.

398
00:29:12,460 --> 00:29:14,044
ஹே, மன்னிச்சுக்கோ, எனக்கு--

399
00:29:14,128 --> 00:29:16,464
யூகிக்கிறேன். வேலை சம்மந்தமாவா?

400
00:29:17,840 --> 00:29:19,884
-இதோ சொல்லறேன்.
-பரவாயில்லை. புரிஞ்சுது.

401
00:29:20,634 --> 00:29:21,927
நன்றி.

402
00:29:23,762 --> 00:29:25,097
நாம் ஒன்றை பத்தி பேசணும்.

403
00:29:25,181 --> 00:29:28,142
ஓ, அப்போ, ஏதோ வில்லங்கம்தான்.

404
00:29:28,225 --> 00:29:29,810
-மோசமானது இல்லை.
-அதை போலத்தான்.

405
00:29:29,894 --> 00:29:31,061
உறுதி செய்யறேன்.

406
00:29:33,147 --> 00:29:36,358
நாமிருவரும் பழகுவதற்கு சில எல்லைகள்
இருக்கணும்னு நினைக்கறேன்.

407
00:29:37,109 --> 00:29:38,277
"எல்லைகள்."

408
00:29:38,360 --> 00:29:40,404
நாம் சந்தித்துக் கொள்வது
எல்லாம் சரிதான்.

409
00:29:40,488 --> 00:29:44,742
அதில் என்னன்னா...
மத்ததுக்கும் போறது...

410
00:29:45,451 --> 00:29:46,410
எனக்குச் சரியா படலே.

411
00:29:47,286 --> 00:29:48,704
மத்தது எது?

412
00:29:49,538 --> 00:29:51,957
என் வேலை எனக்கு
மிகவும் பிடிக்கும், அப்புறம்...

413
00:29:53,042 --> 00:29:55,503
-அதிலிருந்து கவனம் சிதற விருப்பமில்லை.
-கூடாது.

414
00:29:55,669 --> 00:29:57,796
தெளிவா, உனக்கும் வேலையில்
நிறைய போயிட்டிருக்கு.

415
00:29:58,172 --> 00:30:02,092
அன்று இரவு போல எப்பாவது ஒரு திசை
திருப்பம் பற்றி கவலையில்லை. நான்...

416
00:30:03,427 --> 00:30:05,513
ஆனால் நான்
பெரிய குழப்பங்களுக்கு தயாராயில்லை.

417
00:30:06,555 --> 00:30:08,599
-இது அந்த ஹெலிகாப்டர் பத்திதான.
-இல்லை.

418
00:30:09,558 --> 00:30:13,020
எல்லாம்தான், ஹெலிகாப்டர்,
காயங்கள், நீ போனது...

419
00:30:13,103 --> 00:30:15,731
கேத்தி, உன்னிடம் இருந்து நான்
எதையும் மறைக்கவில்லை.

420
00:30:15,814 --> 00:30:18,108
ஜாக், நான் எதையும் கேக்கலை.

421
00:30:19,735 --> 00:30:21,445
இதை லேசானதாக வெச்சுக்க விரும்பறேன்.

422
00:30:23,489 --> 00:30:25,032
உனக்கு அது பரவாயில்லையா?

423
00:30:25,866 --> 00:30:26,909
சரி.

424
00:30:44,343 --> 00:30:45,219
ஹலோ.

425
00:30:45,302 --> 00:30:46,220
ஹலோ.

426
00:30:46,303 --> 00:30:47,304
திரு சாதிக் இருக்காரா?

427
00:30:47,388 --> 00:30:48,597
உள்ள வாங்க.

428
00:30:48,681 --> 00:30:49,723
நன்றி.

429
00:30:54,186 --> 00:30:55,354
திரு சாதிக்?

430
00:30:55,771 --> 00:30:57,940
ஓ, ஹலோ

431
00:30:58,107 --> 00:30:59,275
ஹலோ.

432
00:31:03,612 --> 00:31:05,739
இங்க யாராவது அனுப்பினாங்களா?

433
00:31:05,948 --> 00:31:08,325
ஆமாம். பக்கத்துக்கு
 கூடார ஆள்... ரிஃபாட்.

434
00:31:08,409 --> 00:31:10,202
நான் உங்களிடம் பேசணும்னு சொன்னார்.

435
00:31:11,287 --> 00:31:12,162
உட்காருங்க.

436
00:31:12,246 --> 00:31:13,163
நன்றி.

437
00:31:17,793 --> 00:31:19,587
அங்கே நாற்றம் அடிக்கிறதா?

438
00:31:25,551 --> 00:31:29,138
குழாய் வெடிச்சிடுச்சுனு
 கேள்விப் பட்டேன்.

439
00:31:29,972 --> 00:31:31,015
தயவு செய்து.

440
00:31:31,140 --> 00:31:32,850
நாங்க ஐரோப்பாவுக்கு போகணும்.

441
00:31:32,975 --> 00:31:34,560
மிகக் கடினமான பயணம்.

442
00:31:35,394 --> 00:31:36,437
ரொம்ப ஆபத்தானது.

443
00:31:37,313 --> 00:31:38,689
செலவும் அதிகம்.

444
00:31:39,690 --> 00:31:40,983
எவ்வளவு ஆகும்?

445
00:31:42,067 --> 00:31:43,569
எவ்வளவு இருக்கு?

446
00:31:51,285 --> 00:31:53,746
என்னை மன்னிச்சுக்கோங்க...

447
00:31:54,997 --> 00:31:57,458
இவ்வளவுதான் என்னிடம் இருக்கு.
 உறுதியா சொல்லறேன்!

448
00:31:57,875 --> 00:31:58,834
இதுவா?

449
00:31:59,376 --> 00:32:01,378
உங்க ஒருத்தருக்குத்தான்
 சரியா இருக்கும்.

450
00:32:05,549 --> 00:32:07,301
இல்லை, இல்லை, தயவு செய்து.

451
00:32:07,426 --> 00:32:08,844
எனக்கு ரெண்டு
 சின்ன பெண்கள் இருக்காங்க.

452
00:32:09,303 --> 00:32:12,806
இப்போ உங்களுக்கு உதவ முடியாது.

453
00:32:12,890 --> 00:32:15,809
காசு எப்போ அதிகமா இருக்கோ...

454
00:32:15,934 --> 00:32:17,186
அப்போ வாங்க.

455
00:32:52,513 --> 00:32:54,640
ஃபுளோரி மேஹோஜிஸ் சிறை
பிரான்ஸ் - 2002

456
00:33:04,191 --> 00:33:05,317
அமைதி உன்னுடன் இருக்கட்டும்.

457
00:33:05,401 --> 00:33:06,485
இங்கே வா.

458
00:33:12,074 --> 00:33:13,659
எப்படி இருக்க?

459
00:33:22,167 --> 00:33:23,919
என்ன?

460
00:33:25,546 --> 00:33:27,339
என் புது அவதாரம் உனக்கு பிடிக்கலையா?

461
00:33:29,717 --> 00:33:31,468
உன்னை என்ன செய்தாங்க?

462
00:33:34,888 --> 00:33:37,224
யாரும் என்னை எதுவும் செய்யலை.

463
00:33:40,728 --> 00:33:44,606
முழுக் கதை என்னனா,
 இங்கு சில பேரை சந்தித்தேன்.

464
00:33:44,773 --> 00:33:47,109
கடவுளுக்கு நன்றி சொல்லு.

465
00:33:47,735 --> 00:33:49,653
கடவுள்தான் எனக்கு உதவினார்.

466
00:33:51,238 --> 00:33:53,282
நீ என்ன பேசிட்டு இருக்கே?

467
00:33:58,579 --> 00:34:01,415
நம் பெற்றோர் இறந்த பின்,

468
00:34:03,417 --> 00:34:06,837
எங்குமே நான் ஒட்டலை.

469
00:34:07,045 --> 00:34:08,547
இப்போ வரை.

470
00:34:14,970 --> 00:34:16,930
சிறையிலா?

471
00:34:20,392 --> 00:34:22,561
என் உடம்பு சிறையில் இருக்கு, ஆமாம்.

472
00:34:26,190 --> 00:34:29,818
முதல் முறையா என் உடம்பும், மனசும்...

473
00:34:29,902 --> 00:34:31,069
விடுதலையான உணர்வு.

474
00:34:33,447 --> 00:34:35,407
ஒவ்வொரு முஸ்லிமும்,

475
00:34:35,532 --> 00:34:39,620
நான் உணர்ந்தது போல உணர வேண்டும்.

476
00:34:41,747 --> 00:34:47,461
அதை உணர்த்தவே கடவுள் என்னை ஒரு
 பாதையில் போட்டிருக்கார்.

477
00:34:51,006 --> 00:34:53,759
அவரே அப்பாதையை காட்டுவார்.

478
00:34:53,842 --> 00:34:54,927
நேரம் ஆச்சு.

479
00:34:58,847 --> 00:35:00,557
உனக்கு உறுதியளிக்கிறேன்...

480
00:35:01,225 --> 00:35:04,144
நான் வெளியில் வரும்போது
 எல்லாம் மாறியிருக்கும்.

481
00:35:04,853 --> 00:35:06,647
அமைதி உன்னுடன் இருக்கட்டும்.

482
00:35:08,273 --> 00:35:09,441
இல்லை, சகோதரா,

483
00:35:10,234 --> 00:35:13,862
உன்னிடம் இல்லாவிட்டால்
 என்னிடமும் இருக்காது.

484
00:35:28,794 --> 00:35:30,546
லாஸ் வேகஸ், நவேடா

485
00:35:35,592 --> 00:35:36,552
கடவுளே.

486
00:35:38,053 --> 00:35:41,181
-என்ன?
-கொஞ்சம் பான்கேக் வேணுமா சிரப்போட?

487
00:35:48,939 --> 00:35:50,148
அது பற்றி உனக்கு பேசணுமா?

488
00:35:51,650 --> 00:35:52,693
எது பற்றி?

489
00:36:00,742 --> 00:36:02,286
கட்டளை அதிகாரியிடம் பேசினேன்.

490
00:36:03,829 --> 00:36:04,872
பின்?

491
00:36:04,997 --> 00:36:07,124
கொஞ்ச நாட்கள் விடுமுறை
எடுக்கச் சொன்னார்.

492
00:36:08,166 --> 00:36:10,586
மனதை அமைதியாக்க பத்து நாட்கள்
எடுக்க சொன்னார்.

493
00:36:11,211 --> 00:36:12,921
அது எதுக்காக இருந்தாலும் சரி.

494
00:36:13,922 --> 00:36:15,173
உனக்கு கட்டளை இட்டிருக்கிறாரா?

495
00:36:16,258 --> 00:36:17,509
நாளையில் இருந்து.

496
00:36:18,468 --> 00:36:19,887
அதுல என்ன தவறு?

497
00:36:19,970 --> 00:36:21,972
லேக் மீடுக்கு போ. சில பெண்களை பார்,

498
00:36:22,055 --> 00:36:23,724
-சந்தோஷமா இரு.
-லேக் மீட் நாசமா போக.

499
00:36:29,646 --> 00:36:32,357
விடுமுறை எதையும் சரி பண்ணப் போவதில்லை.

500
00:36:36,361 --> 00:36:37,487
அப்போ எது பண்ணும்?

501
00:36:45,704 --> 00:36:48,957
விமான பயிற்சிப் பள்ளியில் முதல்
மூன்று சதவீதத்தில் இருந்தேன்.

502
00:36:49,583 --> 00:36:52,002
பட்டம் வாங்க ஒரு மாதம் முன்னால் ஏதோ...

503
00:36:52,085 --> 00:36:54,421
கிறுக்கு சார்ஜ்ன்ட் வந்து...

504
00:36:54,504 --> 00:36:59,176
சொல்லறான், "உங்க மூட்டையை கட்டுங்க.
ட்ரோன் திட்டத்திற்கு ஆட்கள் வேணும்."

505
00:37:03,263 --> 00:37:04,556
நான் பைலட் ஆக வேண்டியது.

506
00:37:06,516 --> 00:37:08,101
அதனால் என்ன? உனக்கு விரக்தியா இருக்கு.

507
00:37:08,185 --> 00:37:10,103
நீ இஷ்டப்பட்ட பணி நிலையம்
உனக்கு கிடைக்கல.

508
00:37:12,397 --> 00:37:16,109
என்னை பற்றி இல்லை, ஏவா?
இது நாம் செய்வதை பற்றி.

509
00:37:16,193 --> 00:37:19,029
பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால்
ட்ரைலரில் உட்கார்ந்து,

510
00:37:19,112 --> 00:37:20,864
ஒரு பொத்தான் அழுத்தினா யாரோ சாகறாங்க.

511
00:37:21,823 --> 00:37:23,992
நாம் 10,000 மைல்களுக்கு அப்பால்
இருந்தால் என்ன.

512
00:37:24,076 --> 00:37:25,619
பத்தாயிரம் அடி உயரத்தில்
இருந்தால் என்ன.

513
00:37:25,702 --> 00:37:26,703
எல்லாம் ஒண்ணுதான்.

514
00:37:26,787 --> 00:37:27,913
இல்லை, அப்படி இல்லை.

515
00:37:28,038 --> 00:37:30,958
பைலட்கள், நிஜ பைலட்கள்,
போருக்கு போவாங்க.

516
00:37:31,041 --> 00:37:33,752
அவர்கள் சுடப்படுவார்கள்,
கைப்பற்றப் படுவார்கள்,

517
00:37:33,961 --> 00:37:35,170
சாவார்கள் கூட.

518
00:37:35,963 --> 00:37:38,507
நாம் ட்ரைலரில் அமர்ந்து
வீடியோ கேம் விளையாடறோம்,

519
00:37:38,590 --> 00:37:41,009
பின் இங்கு வந்து சிற்றுண்டி உண்போம்.

520
00:37:43,095 --> 00:37:45,681
நீ என் நண்பன், ஆனா இப்போ
கிறுக்குத்தனமா யோசிக்கற.

521
00:37:46,098 --> 00:37:47,891
நான் மண்ணில் வீழ்த்திய
ஒவ்வொரு கெட்டவனும்...

522
00:37:48,141 --> 00:37:51,269
அடுத்து கடைத்தெருவில் வெடிக்கப் போகும்
குண்டு ஒன்றை குறைக்கிறது...

523
00:37:51,812 --> 00:37:55,232
சோதனை புள்ளில இருக்கும் வீரர்களை
வீழ்த்தும் ஒரு கார் வெடியை தடுக்கிறது.

524
00:37:56,441 --> 00:37:57,734
நாம் உள்ளே போகும் போது,

525
00:37:58,276 --> 00:38:01,321
என் சக விமானம் எனக்கு உறுதுணையா
பின்தொடரும்னு தெரியணும்.

526
00:38:03,991 --> 00:38:07,995
நீ எதை பண்ண நினைத்தாலும்
உன் மனதை சரி பண்ணு...

527
00:38:08,870 --> 00:38:10,038
போய் அதை செய்.

528
00:38:17,087 --> 00:38:18,547
டாக்டர் ரயன், தயாரா?

529
00:38:18,630 --> 00:38:20,340
அப்படினுதான் நினைக்கறேன்.
எல்லாம் சரியா இருக்கா?

530
00:38:20,424 --> 00:38:22,300
ஆமாம். எல்லாம் தயார் செய்தாச்சு.

531
00:38:23,510 --> 00:38:25,137
பாரிஸில் அவன் உபயோகித்த அதே
பெயரை உபயோகி.

532
00:38:25,220 --> 00:38:26,263
சரி.

533
00:38:31,893 --> 00:38:33,895
சரி. அதான் அவன் விளையாடிய கடைசி கேம்.

534
00:38:34,855 --> 00:38:37,482
ஆன்லைனில் இருக்க.
நேரடியா தகவல் அனுப்பலாம்.

535
00:38:37,566 --> 00:38:38,483
அங்கிருந்து.

536
00:38:40,152 --> 00:38:41,737
இப்போ, நீ அவனோட தகவல் பரிமாறும் போது,

537
00:38:41,820 --> 00:38:45,198
தானாகவே பிரெஞ்ச், ஆங்கிலம்
இடையே மொழி பெயர்க்கும்.

538
00:38:45,824 --> 00:38:47,743
-புரிஞ்சுது.
-சரி.

539
00:38:48,035 --> 00:38:50,996
பிரெஞ்சு உள்துறை பாதுகாப்பு
ஷமோனியில் தற்போது இருக்காங்க,

540
00:38:51,496 --> 00:38:54,166
சுலைமான் தன் தம்பிக்கு
யாரையாவது அனுப்பினா பிடிக்க தயாரா.

541
00:38:54,249 --> 00:38:55,417
சரி, எல்லோரும், ஆரம்பிக்கலாம்.

542
00:38:57,836 --> 00:38:59,629
ஷமோநி, பிரான்ஸ்

543
00:39:10,432 --> 00:39:11,683
தயாரா?

544
00:39:12,517 --> 00:39:13,435
தயாரா இருக்கோம்.

545
00:39:13,602 --> 00:39:14,728
சரி.

546
00:39:29,910 --> 00:39:31,828
நான் இங்கிருக்கேன்

547
00:39:43,173 --> 00:39:44,925
கவனமா இரு.

548
00:39:46,843 --> 00:39:48,303
மெல்ல.

549
00:39:50,889 --> 00:39:52,724
கேம் கட்டுப்பாட்டு அமைவு 002
1 படிக்காத தகவல்.

550
00:39:54,392 --> 00:39:55,352
ஷேக்.

551
00:39:58,980 --> 00:40:00,023
அலி?

552
00:40:11,368 --> 00:40:12,285
நலமா இருக்கயா?

553
00:40:12,369 --> 00:40:13,370
வந்திட்டான்.

554
00:40:13,620 --> 00:40:14,746
சரி.

555
00:40:16,164 --> 00:40:17,374
நல்லது.

556
00:40:21,336 --> 00:40:22,879
அடிபட்டிருக்கு. உதவி தேவை

557
00:40:31,054 --> 00:40:32,222
எங்கிருக்க?

558
00:40:32,305 --> 00:40:33,390
-முகவரி.
-குடு, நொரீன்.

559
00:40:33,473 --> 00:40:34,474
இதோ இங்க.

560
00:40:39,396 --> 00:40:41,606
ரகசிய சந்திப்பு இடத்துக்கு
என்னால் போக முடியல.

561
00:40:48,113 --> 00:40:50,282
நீளமான பால்கனி கொண்ட ஷமோநி வீடு.
டி1506, 5 கிமீ லி டைன்ஸ் அருகில்.

562
00:40:59,332 --> 00:41:01,543
முகவரி வந்திருச்சு. தயாரா இரு.

563
00:41:08,383 --> 00:41:09,467
அங்கயே இரு.

564
00:41:09,593 --> 00:41:10,969
சரி. எவ்வளவு நேரம்னு கேளு.

565
00:41:15,140 --> 00:41:17,100
எவ்வளவு நேரம்?

566
00:41:19,436 --> 00:41:20,520
ஒரு நிமிஷம்.

567
00:41:22,022 --> 00:41:24,191
அவன்தான்னு எப்படி தெரியும்?

568
00:41:25,567 --> 00:41:27,944
இப்படி தொடர்பு கொள்ள
 யாருக்குத் தெரியும்?

569
00:41:28,028 --> 00:41:29,571
நீங்க செய்திகளை பார்த்தீங்க...

570
00:41:30,822 --> 00:41:33,200
பிரெஞ்சு போலீஸ் அவனை தேடிட்டு இருக்கு.

571
00:41:33,283 --> 00:41:34,367
நமக்கு நிச்சயமா தெரியணும்.

572
00:41:35,869 --> 00:41:36,953
என்ன பண்ணற?

573
00:41:38,038 --> 00:41:40,540
ஐபி முகவரியை கண்டுபிடிக்கறேன்.

574
00:41:42,209 --> 00:41:44,711
-ஏன் இன்னும் பதில் போடலை.
-நம் ஐபி முகவரியை தேடறான்.

575
00:41:44,794 --> 00:41:47,797
-இப்போ சிக்கலா?
-இல்ல, எதிர்பார்த்தோம். இருக்கு.

576
00:41:55,055 --> 00:41:56,556
ஷமோநி, பிரான்ஸ்.

577
00:42:07,359 --> 00:42:09,402
நம் கட்டிடம் பெலுவிலுவில் என்ன நிறம்?

578
00:42:09,486 --> 00:42:10,654
அட, இது யாருக்குத் தெரியும்?

579
00:42:10,904 --> 00:42:12,822
பாருங்க, அதை பாருங்க, அதை பாருங்க.

580
00:42:14,616 --> 00:42:16,952
-கிடைச்சிடுச்சு! முகவரி கிடைச்சுது.
-சொல்லு. உடனே.

581
00:42:17,035 --> 00:42:19,037
செயற்கை கோள் படத்தை எடுக்கிறோம்.

582
00:42:20,080 --> 00:42:22,958
அடக் கடவுளே. அது 15 வருடங்களுக்கு
முன்னால். நிறத்தை மாத்தியிருந்தால்?

583
00:42:25,835 --> 00:42:27,087
சரியான யூகமா சொல்லுங்க.

584
00:42:27,170 --> 00:42:28,630
எனக்கு பார்த்தா பழசா தெரியுது.

585
00:42:29,214 --> 00:42:30,340
-சரியா சொன்னீங்க.
-பச்சைனு சொல்லு.

586
00:42:30,423 --> 00:42:31,633
-பச்சையா?
-ஆமாம்.

587
00:42:33,969 --> 00:42:34,928
நிச்சயமா தெரியும், இல்ல?

588
00:42:35,345 --> 00:42:36,263
ஆமாம்.

589
00:42:38,139 --> 00:42:39,057
பச்சை.

590
00:42:43,228 --> 00:42:44,854
சரியா?

591
00:43:01,121 --> 00:43:02,122
அமைதி உன்னுடன் இருக்கட்டும்.

592
00:43:03,290 --> 00:43:04,416
ஆஹா, நம்பிட்டான்.

593
00:43:10,005 --> 00:43:12,424
ஒரு நிமிஷம். ஏன் அவன் இன்னும் போகலை?

594
00:43:12,507 --> 00:43:14,217
ஒருவேளை, உனக்காக காத்திருக்கிறானா?

595
00:43:19,889 --> 00:43:21,057
இன்னும் ஆன்லைனில் இருக்கான், ஜாக்.

596
00:43:21,141 --> 00:43:22,726
இது ஏதோ பரிசோதனை.

597
00:43:23,059 --> 00:43:23,977
என்ன?

598
00:43:24,102 --> 00:43:25,312
சே.

599
00:43:32,068 --> 00:43:33,570
உன்னுடனும் இருக்கட்டும்.

600
00:43:41,202 --> 00:43:42,162
நீ என் தம்பி இல்லை.

601
00:43:42,287 --> 00:43:44,748
-சே.
-சரி நிறுத்துங்க.

602
00:43:44,873 --> 00:43:46,458
-இன்னும் முடியல.
-யாரும் வரலைனு தெரிஞ்சிட்டான்.

603
00:43:46,541 --> 00:43:47,584
-இது முடியல.
-இது பொய்.

604
00:43:47,667 --> 00:43:49,210
-யாரும் வரலைனு தெரிஞ்சிடுச்சி.
-பொறுங்க.

605
00:43:52,088 --> 00:43:52,964
கைவிடு

606
00:43:53,256 --> 00:43:54,257
சே.

607
00:43:57,886 --> 00:43:58,970
-ரயன்.
-என்ன பண்ணறே?

608
00:43:59,054 --> 00:44:00,263
சரிதான் யேமன்ல சந்திச்சிருக்கோம்.

609
00:44:00,347 --> 00:44:01,723
நிறுத்துனு சொன்னேன் ரயன்.

610
00:44:03,099 --> 00:44:04,017
நாம இதை மூடணும்.

611
00:44:04,225 --> 00:44:05,352
ஒரு நிமிஷம்.

612
00:44:11,566 --> 00:44:12,859
ஆய்வாளன்

613
00:44:12,942 --> 00:44:14,903
கடவுளே, அவனுக்கு நீ யாருனு தெரியுது.

614
00:44:25,455 --> 00:44:26,873
என் தம்பி செத்துட்டானா?

615
00:44:29,209 --> 00:44:30,335
கவனம்.

616
00:44:40,512 --> 00:44:41,513
ஜாக்.

617
00:44:41,846 --> 00:44:43,181
ஆமாம்.

618
00:44:55,110 --> 00:44:56,403
உன்னை கண்டுபிடிக்கப் போறேன்.

619
00:44:58,363 --> 00:45:00,407
ஹனினை நான் கண்டுபிடிக்கும்
முன்னால் அது முடியாது.

620
00:45:02,617 --> 00:45:03,952
யாரு அந்த ஹனின்?

621
00:45:04,035 --> 00:45:05,703
ஒரு நிமிஷம் பொறுங்க. ஏதோ
திட்டம் வெச்சிருக்கான்.

622
00:45:09,666 --> 00:45:10,708
உன்ன விட்டுட்டு போனது தெரியும்.

623
00:45:15,922 --> 00:45:16,840
-போயிட்டான்.
-நினைச்சேன்.

624
00:45:16,923 --> 00:45:18,508
இப்போ என்ன நடந்துச்சு?

625
00:45:18,591 --> 00:45:20,176
அது உண்மை இல்லைனா,
அவன் மறுத்திருப்பான்.

626
00:45:20,260 --> 00:45:21,636
ரயன், எதை மறுத்திருப்பான்?

627
00:45:21,719 --> 00:45:23,596
-நிச்சயமா தெரியுமா?
-நிச்சயம்தான்.

628
00:45:23,680 --> 00:45:25,640
-எதைப் பற்றி நிச்சயம்?
-ஒரு பெண் இருக்கிறாள்!

629
00:45:26,266 --> 00:45:28,643
துருக்கி அகதிகள் முகாமில்
ஒரு பெண் இருக்கிறாள்.

630
00:45:29,561 --> 00:45:30,895
அவன் மனைவி என்று சொல்கிறாள்.

631
00:45:32,188 --> 00:45:33,314
அது அவள்தான்.

632
00:45:34,983 --> 00:45:35,942
கண்டுபிடி.

633
00:46:09,017 --> 00:46:12,228
ஸியுக்மா தங்கும் வளாகம்
நிஸிப், துருக்கி

634
00:46:13,271 --> 00:46:14,689
உங்க அதிகாரியிடம் பேசுங்க.

635
00:46:15,231 --> 00:46:16,774
நான் ஏற்கனவே கவனிச்சிட்டேன்.

636
00:46:16,900 --> 00:46:17,817
எல்லாம் சரியா இருக்கு.

637
00:46:24,574 --> 00:46:25,867
போகலாம், போகலாம்!

638
00:46:43,384 --> 00:46:44,427
இவளும், இரு சிறு பெண்களும்?

639
00:46:44,511 --> 00:46:45,887
எங்கிருக்காங்க?

